புதுடில்லி: நாடாளுமன்ற மக்களவையில் ஏற்பட்ட பாதுகாப்பு குறைபாடு குறித்து கேள்வி எழுப்பிய எதிர்கட்சித் தலைவர்கள் உள்பட இதுவரை 47 எம்.பிக்கள் பேசஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். இதுகுறித்து மதுரை எம்.பி. சு. வெங்கடேசன் கிண்டலாக ட்வீட் போட்டுள்ளார்.
நாடாளுமன்ற மக்களவையில் இரு இளைஞர்கள் வண்ணப் புகை குண்டுகளை வீசி பெரும் பரபரப்பு ஏற்படுத்தினர். இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து லோக்சபாவில், பேசிய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பார்வையாளர் பாஸ் வழங்குவது தொடர்பாக அனைவரும் கவனமுடன் செயல்பட வேண்டும் எனவும் எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவம் நடைபெறாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.
இதை ஏற்காத எதிர்க்கட்சி எம்பிக்கள் நாடாளுமன்றத்தில் பாதுகாப்பு அத்துமீறல்கள் நடந்ததற்கு பொறுப்பேற்று உள்துறை அமைச்சர் அமித் ஷா பதவி விலக வேண்டும் என முழக்கமிட்டனர். அவர் விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றனர்.
இதுகுறித்து பதில் அளித்த சபாநாயகர் ஓம் பிர்லா, நாடாளுமன்ற செயலாளர் தான் பொறுப்பு என விளக்கம் அளித்தார். எனினும், தொடர்ந்து எதிர்க் கட்சியினர் அமலில் ஈடுபட்டதால் மக்களவை அடுத்தடுத்து ஒத்திவைக்கப்பட்டது. பின்னர் மக்களவை மீண்டும் கூடிய போது பேசிய நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் துரதிஷ்டவசமான சம்பவம் என்றும், இதை வைத்து அரசியல் செய்ய வேண்டாம் எனவும் கூறினார். என்னும் அமித்ஷா பதவி விலக வேண்டும் என எம்பிக்கள் தொடர்ந்து அமலில் ஈடுபட்டனர்.
அதனால் கடந்த வாரம் நடந்த நாடாளுமன்ற கூட்டத்தில் 13 எம்.பிக்கள் இடைநீக்கம் செய்யப்பட்டனர். இந்நிலையில், இன்றும் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து முழக்கமிட்டதால், திமுக எம்பிக்கள் டி. ஆர். பாலு , ஆர் ராஜா, தயாநிதி மாறன், தமிழச்சி தங்கபாண்டியன் உட்பட 33 எம்பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கனிமொழி கா. வெங்கடேசன் உள்ளிட்ட 13 எம்பிக்கள் கடந்த வாரம் சஸ்பெண்ட் செய்யப்பட்ட நிலையில் தற்போது அந்த எண்ணிக்கை 47 ஆக உயர்ந்துள்ளது.
சு. வெங்கடேசன் கிண்டல் டிவீட்
இதுகுறித்து சு. வெங்கடேசன் ஒரு டிவீட் போட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது:
நாடாளுமன்றத்தில் நடந்த அத்துமீறல் குறித்து உள்துறை அமைச்சர் விளக்கம் அளிக்க வலியுறுத்தியதற்காக இன்று மீண்டும் 33 எம் பி கள் இடைநீக்கம். மக்களவை வரலாற்றில் 46 எம் பி களை இடைநீக்கம் செய்து புதிய சாதனை படைத்துள்ளது மோடி அரசு.
நாளை இன்னொரு நான்கு எம் பி களை இடைநீக்கம் செய்து அரைசதத்தை எதிர்பார்க்கலாம் என்று சு. வெங்டேசன் கூறியுள்ளார். இன்று சஸ்பெண்ட் செய்யப்பட்ட எம்.பிக்கள் அவைக்குள்ளேயே போராட்டம் நடத்தி முழக்கமிட்டனர்.
'இட்லி கடை' பிரியர்களே.. ஹேப்பி நியூஸ் .. அக்டோபர் 1ம் தேதி திரைக்கு வருகிறார் தனுஷ்!
நீட் விவகாரத்தில் ஏப்ரல் 9ல்.. சட்டமன்ற அனைத்து கட்சி ஆலோசனை கூட்டம்.. முதல்வர் மு.க ஸ்டாலின்
நாளும் நல்லதுசெய்யும் முதலமைச்சர் இந்த இரண்டு செயல்களாலும் இன்னும் இன்னும் உயர்கிறார்: வைரமுத்து
வந்தோம் போனோம் என்று இருக்க மாட்டோம்.. இஸ்லாமியர்களுக்கு உறுதுணையாக இருப்போம் - தவெக
எஸ்ஐ பணியில் சேர ஆசையா?.. தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் வெளியிட்ட சூப்பர் அப்டேட்!
சமயபுரம் மாரியம்மன் பச்சை பட்டினி விரதம்.. அம்மனே பக்தர்களுக்காக விரதம் இருக்கும் அதிசயம்!
தங்கம் விலை நேற்று புதிய உச்சம்...இன்று சவரனுக்கு ரூ.1,280 குறைவு... அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்!
தமிழ்நாட்டில் இன்றும் .. 17 மாவட்டங்களில்.. கன மழைக்கு வாய்ப்பு.. சென்னை வானிலை ஆய்வு மையம்!
உங்கள் வாழ்வில் இருந்து ஒருவரை நீக்கும்போது.. அதன் மதிப்பை உடனடியாக அறிய மாட்டீர்கள்.. செல்வராகவன்!
{{comments.comment}}