சென்னை: சென்னையில் இன்று நடந்த விமானப்படை சாகச கண்காட்சிக்கு பிறகு நடந்த நிகழ்வுகள் மக்களிடையே கடும் அதிருப்தியையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளன. போதிய போக்குவரத்து வசதிகள் செய்யப்படாதது, தண்ணீர் வசதி சரிவர செய்யப்படாதது, மக்களை அதிருப்திக்குள்ளாகியது என்றால், 4 பேர் பல்வேறு காரணங்களால் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மெரீனா கடற்கரையில், பிரமாண்ட விமானப்படை சாகச கண்காட்சி நடந்தது. இதில் பல லட்சம் பேர் கலந்து கொண்டனர். லிம்கா சாதனைப் புத்தகத்திலும் இது இடம் பெற்றது. கிட்டத்தட்ட 15 லட்சம் பேர் கலந்து கொண்டதாக கணக்கிடப்பட்டுள்ளது. இதுவரை எல்லாமே ஓகேதான். ஆனால் அதன் பிறகு நடந்தவைதான் மக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தி விட்டது.
தெற்கு ரயில்வே போதிய ரயில் வசதியை செய்யவில்லை என்று மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இதனால் வீடு திரும்ப முயன்ற பல லட்சம் பேருக்கும் ரயில்கள் கிடைக்காமல் பெரும் அவதிக்குள்ளாகினர். ரயில் நிலையங்களில் கூட்டம் கட்டுக்கடங்காமல் இருந்தது. அதேபோல மெட்ரோ நிலையங்களிலும் மக்கள் பெருமளவில் அலைமோதினர். அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் கூடுதல் பேருந்துகள் ஏற்பாடு செய்திருந்த போதிலும் அது போதிய அளவில் இல்லை.
இதை விட பெரிய கொடுமையாக சாலைகளில் போக்குவரத்து நெரிசல் பல மணி நேரம் மக்களை ஸ்தம்பிக்க வைத்து விட்டது.ஒரே நேரத்தில் பல லட்சம் மக்கள் ரயில்கள், மெட்ரோ, பஸ்களை நாடி வந்ததாலும், வாகனங்கள் ஆயிரக்கணக்கில் சாலைகளில் வந்ததாலும், மக்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டு விட்டது. பல மணி நேரம் மக்கள் சாலைகளில் கடும் வெயிலில் காத்துக் கிடக்கும் அவதியும் ஏற்பட்டது.
இவை எல்லாவற்றையும் விட அதிர்ச்சிகரமானதாக 4 பேர் மயக்கம், நெஞ்சு வலி உள்ளிட்ட காரணங்களால் உயிரிழந்துள்ளனர் என்ற தகவல் அதிர வைப்பதாக உள்ளது. இத்தனை பெரிய கூட்டம் கூடும்போது அதற்கேற்றார் வகையில் அனைத்து அரசுத் துறைகளும் ஒருங்கிணைந்த தேவையான ஏற்பாடுகளைச் செய்திருக்க வேண்டாமா என்ற கேள்வி எழுந்துள்ளது. தற்போது செய்திருந்ததை விட இன்னும் மிகச் சிறப்பான வகையில் அனைத்து தேவையான ஏற்பாடுகளையும் செய்திருக்க வேண்டும். இத்தனை லட்சம் பேர் கூடும் இடத்தில் அதற்கேற்றார் போல ஏற்பாடுகளும் பிரமாண்டமாக இருந்திருக்கலாம் என்பது மக்களின் கருத்தாக உள்ளது.
எடப்பாடி பழனிச்சாமி கண்டனம்
இந்த நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி ஒரு அறிக்கை விடுத்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
இந்திய பாதுகாப்புத் துறையின் முக்கிய அங்கங்களுள் ஒன்றான இந்திய விமானப் படையின் 92வது துவக்க நாள் விழாவை முன்னிட்டு, விமானப் படையின் தீரத்தை பறைசாற்றும் வண்ணம் சென்னையில் இன்று வான் சாகச நிகழ்ச்சி அரங்கேறியது. இதற்கான அறிவிப்பு முன்கூட்டியே வெளியான நிலையில், லட்சக்கணக்கான மக்கள் பார்வையிடக் கூடுவர் என்பது அறிந்து, போக்குவரத்து, அடிப்படை வசதிகள் உள்ளிட்ட ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக தமிழ்நாடு அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இருப்பினும், இன்றைய நிகழ்ச்சியில் நிர்வாக ரீதியிலான ஏற்பாடுகளும், கூட்டத்தையும்- போக்குவரத்தையும் ஒழுங்கு படுத்துவதற்கு காவல்துறையினரும் போதிய அளவில் இல்லாததால், மக்கள் கடும் கூட்ட நெரிசலில் சிக்கி, குடிநீர் கூட கிடைக்காத நிலை ஏற்பட்டு, மேலும் வெயிலின் தாக்கத்தால் பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அதில் இதுவரை 5 பேர் உயிரிழந்துள்ளதாகவும் வரும் செய்திகள் அதிர்ச்சியும் , மிகுந்த வேதனையும் அளிக்கின்றன.
உயிரிழந்தோர் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலும் வருத்தங்களும். இதுபோன்ற முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நிகழ்வைக் கூட முறையாக ஒருங்கிணைக்கத் தவறிய நிர்வாகச் சீர்கேடே உருவான திமுக அரசுக்கு எனது கடும் கண்டனங்கள். இந்தியாவின் பல்வேறு நகரங்களில் ராணுவ விமானப் படையின் தீரத்தை பறைசாற்றும் நிகழ்வுகள் இதுவரையில் சிறப்பாக நடைபெற்று வந்துள்ளன,ஆனால் இன்று தமிழகத்தில் நிகழ்பெற்ற நிகழ்வில் உயிர்சேதம் ஏற்பட்டிருப்பது மிகவும் வருத்தத்துக்குரியது. இந்நிகழ்வுக்கு முறையான பாதுகாப்பு கொடுக்க தவறிய இந்த அரசுக்கு என் கடும் கண்டனங்கள் என்று அவர் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
நவம்பர் 1ம் தேதி.. 11 மாவட்டங்களில் பரவலாக கன மழைக்கு வாய்ப்பு.. வானிலை மையம் தகவல்!
Draft electoral Roll: தமிழ்நாட்டிலேயே மிகப் பெரிய தொகுதி சோழிங்கநல்லூர்.. சிறிய தொகுதி கீழ் வேளூர்!
அதிமுகவை தவெக தலைவர் விஜய் விமர்சிக்காதது ஏன் தெரியுமா?.. எடப்பாடி பழனிசாமி பலே விளக்கம்!
பத்தவச்சுட்டியே பரட்டை.. விஜய் பேச்சால் சலசலப்பு.. கப்சிப்பாக்க அதை கையில் எடுக்குமா திமுக?
Deepavali Rush: சென்னையில் மெட்ரோ ரயில் சேவை.. நாளை நீட்டிப்பு.. இரவு 12 மணி வரை இயங்கும்!
தம்பி விஜய் கூட இருக்கிற ரசிகர்களில் பாதிப் பேர்.. எனக்குதான் ஓட்டுப் போடுவாங்க.. சீமான்
இனி இன்னும் கடுமையாக விமர்சிப்பார்கள்.. 2026ல் நமது இலக்கை அடைவோம்.. தவெகவினருக்கு விஜய் அழைப்பு!
Deepavali: தமிழ்நாடு முழுவதும் பள்ளி கல்லூரிகளுக்கு.. நாளை அரை நாள் விடுமுறை அறிவிப்பு!
ரூ. 98 கோடி திட்டங்களை தொடங்கி வைத்து.. ரூ. 426 கோடி திட்டங்களைத் திறந்து வைத்த.. முதல்வர் ஸ்டாலின்
{{comments.comment}}