லக்னோ: மகா கும்பமேளா பிப்., 26ம் தேதியுடன் நிறைவடைய உள்ள நிலையில், பிரயாக்ராஜ் செல்ல ரயில் நிலையங்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகின்றது.
உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ்ஜில் மகா கும்பமேளா நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இந்த மகா கும்பமேளா 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த வருடம் வந்துள்ள கும்பமேளா நிகழ்ச்சி 144 வருடங்களுக்குப் பிறகு வரும் கும்பமேளாவாகும். இந்த கும்பமேளா கடந்த மாதம் ஜனவரி 13ம் தேதி தொடங்கி பிப்ரவரி 26ம் தேதி நிறைவடைகிறது. பிரயாக்ராஜில் உள்ள கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய 3 நதிகள் சங்கமிக்கும் திரிவேணி சங்கமத்தில் இதுவரைக்கும் 50 கோடிக்கும் அதிகமான பக்தர்கள் புனித நீராடி வருகின்றனர்.
இதில் நீராடினால் பக்தர்கள் சிவலோகப் பதவியை அடைவார்கள் என இந்துக்கள் கருதுகின்றனர். பல முக்கிய அரசியல் கட்சி தலைவர்கள், தொழிலதிபர்கள், திரைபிரபலங்கள் உள்ளிட்ட பலரும் இந்த விழாவில் கலந்து கொண்டும் வருகின்றனர்.
இந்தநிலையில், உலகின் மிக பெரிய ஆன்மீக ஒன்றுகூடலான இந்த மகா கும்பமேளா முடிவுக்கு வர இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் பக்தர்களின் வருகையும் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. மகா கும்பமேளாவில் பங்கேற்று நீராட உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் தொடர்ந்து வந்து கொண்டிருப்பதாலும், கும்பமேளாவில் நீராடியவர் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்ல இருப்பதாலும் பிரயாக்ராஜ் ரயில், பேருந்து உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் கூட்டம் அதிகமாக உள்ளது.
தயவு செய்து அவதூறு பரப்புவதை நிறுத்துங்க.. நடிகர் ஸ்ரீயின் குடும்பத்தினர் வேண்டுகோள்..!
சபரிமலையில் நடிகர்கள் கார்த்தி ரவி மோகன் சுவாமி தரிசனம்!
Today gold rate: வரலாறு காணாத தொடர் உயர்வில் தங்கம் விலை... அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்!
வக்பு சட்டத்தை கண்டித்து.. கடை அடைப்பு போராட்டம் நெல்லையில் பரபரப்பு..!
கோடை விடுமுறையை மாணவர்கள் பயனுள்ள வகையில் கழிக்க வேண்டும்.. அமைச்சர் அன்பில் மகேஷ்..!
அது மட்டும் பண்ணாதீங்க...அமைச்சர்களுக்கு முதல்வர் கொடுத்த அட்வைஸ்
குடியரசுத் தலைவருக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட முடியுமா..? குடியரசு துணைத் தலைவர் ஜக்தீப் கேள்வி..!
good friday 2025 : புனித வெள்ளிக்கு ஏன் இந்த பெயர் வந்தது தெரியுமா?
என்னென்ன காயெல்லாமோ சாப்பிட்டிருப்பீங்க.. தோசைக்காய பப்பு டேஸ்ட் பண்ணிருக்கீங்களா..!
{{comments.comment}}