இருக்கும் சுங்கச் சாவடிகளிலேயே பல பிரச்சினைகள்.. தமிழகத்தில் மேலும் 3 டோல்கேட் திறப்பு.. எங்கு?

Sep 05, 2024,07:38 PM IST

சென்னை: தமிழகத்தில்  விழுப்புரம் மாவட்டம் நங்கிளி கொண்டான், திருவண்ணாமலை மாவட்டம் கரியமங்கலம், கிருஷ்ணகிரி  மாவட்டம் நாகம்பட்டி ஆகிய 3 இடங்களில் புதிய சுங்கச்சாவடிகள் அமைக்கப்படுகிறது.


நாடு முழுவதும் சுமார் 800 சுங்கச் சாவடிகளை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அமைத்துள்ளது. தற்போது தமிழகத்தில் சுமார் 60க்கும் மேற்பட்ட  சுங்கச்சாவடிகள் இயங்கி வருகின்றன. இந்த சுங்கச்சாவடிகளில் சுங்க கட்டணமாக முன்னர் எல்லாம் ஓட்டுனர்களிடம் இருந்து ரொக்கமாக பணம் வசூலிக்கப்பட்டு வந்தது. தற்போது ஃபாஸ்ட் டேக் முறையில் இணைய வழியில் பணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. இதனால், வாகன ஓட்டிகள் நீண்ட நேரம் காத்திருக்க தேவையில்லை. இந்த கட்டண முறை ஆண்டிற்கு 2 முறை மாற்றி அமைக்கப்பட்டு வருகிறது.




அதேசமயம் பல சுங்கச் சாவடிகளுக்கு மக்களிடையே கடும் எதிர்ப்பும் நிலவி வருகிறது. குறிப்பாக மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள கப்பலூர் சுங்கச் சாவடிக்கு  எதிராக நீண்ட காலமாக மக்கள் போராடி வருகின்றனர். பல இடங்களில் காலாவதியாகி விட்ட சுங்கச் சாவடிகளாலும் மக்கள் பாதிப்புக்குள்ளாகி வருவதாக குற்றச்சாட்டு உள்ளது. இவற்றை நீக்க வேண்டும் என்று நேற்றுதான் அமைச்சர் எ.வ. வேலு கூறியிருந்தார்.


இந்நிலையில், தமிழகத்தில் மேலும் 3 இடங்களில் புதிதாக சுங்கச்சாவடிகள் அமைக்க தேசிய நெடுஞ்சாலை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அதற்கான கட்டண வீதமும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி விழுப்புரம் மாவட்டம் நங்கிலி கொண்டான், கிருஷ்ணகிரி மாவட்டம் நாகம்பட்டி மற்றும் தி.மலை மாவட்டம் காரியமங்கலம் ஆகிய மூன்று இடங்களில் சுங்கச்சாவடிகளுக்கான கட்டண வீதங்களை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அறிவித்துள்ளது.


விழுப்புரம் நங்கிளி கொண்டான், சுங்கச்சாவடியில் ஒருமுறை சென்றுவர ரூபாய் 60 முதல் 400 வரை கட்டணம் வசூலிக்கப்படும், ஒரே நாளில் சென்று திரும்பி வருவதற்கான கட்டணம் ரூபாய் 95 முதல் 600 வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது எனவும் கரியமங்கலம் சுங்கச்சாவடியில் ஒருமுறை சென்று வர ரூபாய் 55 முதல் 370 வரை சுங்கக்கட்டணம் வசூலிக்கப்படும், ஒரே நாளில் சென்று திரும்பி வருவதற்கான கட்டணம் ரூபாய் 85 முதல் 555 வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.


செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

Orange alert: தமிழ்நாட்டில் ஒரிரு இடங்களில் 26 மற்றும் 27 தேதிகளில் மிக கன மழை எச்சரிக்கை!

news

ஜாமின் கிடைத்ததைத் தொடர்ந்து.. புழல் சிறையிலிருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி

news

அமெரிக்கா கோர்ட் பிடிவாரண்ட்.. அதானியை உடனடியாக கைது செய்ய வேண்டும்.. ராகுல்காந்தி ஆவேசம்

news

விஜய் பங்கேற்கும்.. அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ள மாட்டார் திருமாவளவன்!

news

தனுஷ் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் விவாகரத்து வழக்கில் இறுதிக் கட்டம்.. 27ம் தேதி தீர்ப்பு வழங்கப்படுகிறது!

news

கடுப்பா இருக்கா பாஸ்.. வாங்க கடிக்கிறோம்.. கலகலன்னு சிரிங்க.. மைன்ட் free ஆகி.. face பிரெஷ்ஷாய்ரும்!

news

ஆசிரியை ரமணியின் குடும்பத்திற்கு ரூ. 5 லட்சம் உதவி.. தாயாரிடம் வழங்கினார் அமைச்சர் கோவி.செழியன்

news

Chennai Lakes.. நீர் இருப்பில் மாற்றம் இல்லை.. புதிய காற்றழுத்தத் தாழ்வுக்காக ஏரிகள் வெயிட்டிங்!

news

Rain forecast: 5 மாவட்டங்களில் இன்று மிக கன மழைக்கு வாய்ப்பு.. 7 மாவட்டங்களில் கன மழை!

அதிகம் பார்க்கும் செய்திகள்