தர்மபுரி: தர்மபுரி மாவட்டம் தொப்பூர் கணவாயில் சேலம்- பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது.
2 லாரிகள், 3 கார்கள் அடுத்தடுத்து மோதி தீப்பிடித்து எரிந்ததால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விபத்தில் சிக்கிய வாகனங்களில் 2 லாரிகள், 2 கார்கள் முழுமையாக எரிந்து சாம்பலாகின. தொப்பூர் கணவாயில் அடிக்கடி சாலை விபத்து நடப்பது தொடர் கதையாகி வருவது கவலையை ஏற்படுத்தியுள்ளது.
தர்மபுரியிலிருந்து நெல் ஏற்றிக் கொண்டு ஒரு லாரி சேலம் நோக்கி போய்க் கொண்டிருந்தது. அப்போது தொப்பூர் கணவாய் இரட்டைப் பாலத்தின் மீது போய்க் கொண்டிருந்தபோது, அந்த லாரி, தனக்கு முன்னால் போய்க் கொண்டிருந்த இன்னொரு லாரியுடன் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 3 கார்களும் சிக்கிக் கொண்டன.
மோதிய வேகத்தில் ஒரு காரும், லாரியும் பாலத்திற்கு கீழே போய் விழுந்தன. விபத்தில் சிக்கி ஒரு லாரியும், 2 கார்களும் முழுமையாக தீப்பிடித்து எரிந்தன. நெல் ஏற்றி வந்த லாரி முழுமையாக தீப்பிடித்து எரிந்து விட்டது.
தீயணைப்பு வாகனங்களும், ஆம்புலன்களும் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளன. விபத்தில் இதுவரை 3 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களின் நசுங்கிப் போன உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. அவர்கள் எந்த ஊரைச் சேர்ந்தவர்கள் என்ற விவரமும் இதுவரை தெரியவில்லை.
நெல் ஏற்றி வந்த லாரி மோதி விபத்தை ஏற்படுத்தியது தொடர்பான சிசிடிவி கேமராக் காட்சிகள் பதற வைப்பதாக உள்ளன. முன்னால் சென்று கொண்டிருந்த லாரியை நெல் ஏற்றி வந்த லாரி வேகமாக முந்த முயன்றதால்தான் இந்த விபத்து நடந்துள்ளது தெரிய வந்துள்ளது.
Political Talk.. எம்ஜிஆர் ஜெயலலிதா எழுதிய வரலாற்றை.. வலுக்கட்டாயமாக அழிக்கிறதா அதிமுக?
மாநாட்டில் விஜய் கலக்கிவிட்டார்.. இப்படி பேசுவார் என நினைச்சுக் கூட பார்க்கலை.. எஸ்.ஏ.சந்திரசேகர்
தங்கம் விலை விடாமல் தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருவது ஏன்.. நிபுணர்கள் தரும் விளக்கம் இதுதான்!
கிண்டி அரசு மருத்துவமனை டாக்டரைக் கத்தியால் குத்திய விக்னேஷுக்கு.. ஜாமீன் மறுப்பு!
Rain alert: நவம்பர் 26, 27, 28.. தமிழ்நாட்டில் மிக கன மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் தகவல்
TVK.. மாவட்டச் செயலாளர்களாக யாரைப் போடலாம்.. தீவிரமாக களம் குதித்த விஜய்யின் தவெக!
AIADMK.. கள ஆய்வுக் கூட்டங்களில் தொடர்ந்து மோதல்.. வெடிக்கும் தொண்டர்கள்.. திகைப்பில் தலைமை!
Lunch box recipe: கோவக்காய் வேர்க்கடலை பொறியல்.. ஒரு விசில்.. ஒரு பொறியல்.. ஓஹோ டேஸ்ட்!
Special Story: சிங்கம் கழுகு கூட்டணியா.. சிலாகிக்கும் NTK.. சீமான் விளக்கம்.. ரஜினி சந்திப்பு ஏன்?
{{comments.comment}}