பாட்னாவில் 15 கட்சிதான்.. இப்போது 26.. பெங்களூரை கலக்கப் போகும் எதிர்க்கட்சிகள் சந்திப்பு!

Jul 17, 2023,10:25 AM IST
பெங்களூரு: பெங்களூரில் இன்று நடைபெறும் எதிர்க்கட்சிகளின் 2வது ஆலோசனைக்  கூட்டத்தில் 26 கட்சிகள் கலந்து கொள்ளவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

வருகிற லோக்சபா தேர்தலை எப்படி சந்திப்பது, பாஜகவை எப்படி வீழ்த்துவது என்ற முஸ்தீபுகளில் எதிர்க்கட்சிகள் இறங்கியுள்ளன. தேர்தலை சந்திப்பதற்கு முன்பு எதிர்க்கட்சிகளிடையே ஒற்றுமையை ஏற்படுத்தும் முயற்சிகளை அவை தொடங்கியுள்ளன.

காங்கிரஸ் தலைமையில் செயல்பட சில கட்சிகளுக்கு தயக்கம் உள்ளது. அதேசமயம் தனியாக செயல்படவும் அவர்களுக்குத் தைரியம் இல்லை. இந்த நிலையில்தான் எங்களது தலைமை முக்கியம் இல்லை. அனைவரும் இணைந்து ஒற்றுமையுடன் செயல்படுவதே முக்கியம் என்று காங்கிரஸ் பெருந்தன்மையுடன் கூறி விட்டது. இதைத் தொடர்ந்து ஜூன் 23ம் தேதி பாட்னாவில் முதல் எதி��்க்கட்சித் தலைவர்கள் கூட்டம் நடைபெற்றது.

அக்கூட்டத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், டெல்லி முதல்வர் அரவிந்த்கெஜ்ரிவால், மேற்கு  வங்காள முதல்வர் மமதா பானர்ஜி உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர். இதைத் தொடர்ந்து தற்போது 2வது கூட்டம் இன்று பெங்களூருவில் நடைபெறுகிறது. இக்கூட்டத்தில்  26 கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தக் கூட்டத்திற்கு முன்னதாக டெல்லி அரசுக்கு எதிராக மத்திய அரசு கொண்டு வந்த அவசரச் சட்டத்தை எதிர்ப்பதாக காங்கிரஸ் அறிவித்தது. இதனால் ஆம் ஆத்மிக்கும், காங்கிரஸுக்கும்இடையே நிலவி வந்த பூசல் ஓயும் என்று தெரிகிறது.

பாட்னா கூட்டம் முடிந்த நிலையில் தேசியவாத காங்கிரஸ் கட்சி மகாராஷ்டிராவில் உடைந்தது. சரத் பவாரின் தம்பி அஜீத் பவார், மூத்த தலைவர் பிரபுல் படேல் ஆகியோர் பாஜகவுடன் கூட்டணி வைத்து அங்கு போய் விட்டனர்.  அஜீத் பவார் துணை முதல்வராகி விட்டார். இதனால் இன்றைய கூட்டத்துக்குப் பின்னர் என்ன மாதிரியான பின் விளைவுகள் ஏற்படும் என்பது தெரியவில்லை. ஒரு பக்கம் செந்தில் பாலாஜி ரூபத்தில் திமுகவுக்கும் ஏகப்பட்ட அழுத்தங்கள் தரப்படுகின்றன. ஒவ்வொரு எதிர்க்கட்சியும் ஒவ்வொரு விதமான சிக்கலை சந்தித்துக்கொண்டுதான் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகள்

news

சென்னை மக்களே.. ரெடியா.. 12ம் தேதி முதல் கன மழை வெளுக்கும்.. தமிழ்நாடு வெதர்மேன் தந்த அலர்ட்!

news

அண்ணாமலைக்குப் பின்னாடி.. விஜய்க்கு சீமான் கொடுத்த இடம்.. அந்த அன்புத்தம்பிதான் ஹைலைட்டே!

news

தவெக விஜய்க்கு பின்னால் இருக்கும் விஐபி யார்?.. பரபரக்கும் அரசியல் களம்.. அட, இவர் தானாமே!!

news

Delhi Ganesh.. 400க்கும் மேற்பட்ட படங்கள்.. ஹீரோ டு காமெடியன்.. மறக்க முடியாத டெல்லி கணேஷ்

news

நவம்பர் 10 - இன்றைய நல்ல நேரம், செய்ய வேண்டிய வழிபாடு

news

விருச்சிக ராசிக்காரர்களே.. மகிழ்ச்சியான செய்திகள் வீடு தேடி வரும் நாள்

news

மெட்ராஸ் நல்ல மெட்ராஸ்.. வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த ரிப்பன் மாளிகையை சுற்றிப் பார்க்க அரிய வாய்ப்பு

news

2028 அதிபர் தேர்தலுக்குத் தயாராகப் போகிறாரா கமலா ஹாரிஸ்.. அடுத்த திட்டம் என்ன?

news

நவ. 14, 15 கன மழை எச்சரிக்கை.. சென்னையில் முன்னெச்சரிக்கை பணிகள் தீவிரம்.. மேயர்பிரியா அப்டேட்!

அதிகம் பார்க்கும் செய்திகள்