9 வருடத்திற்கு முன்பு பலாத்காரம்.. பாஜக எம்எல்ஏவுக்கு 25 வருட சிறை.. தகுதி நீக்கம் செய்யப்பட்டார்!

Dec 23, 2023,06:19 PM IST

லக்னோ: உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த பாஜக எம்எல்ஏ ராம்துலால் கான்ட் என்பவருக்கு, 9 ஆண்டுக்கு முன்பு தொடரப்பட்ட பாலியல் பலாத்கார வழக்கில் 25 வருட கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் சட்டசபையிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.


மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின்படி 2 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டாலே சட்டசபை அல்லது நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவி இழந்து விடுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி தகுதி நீக்கம் செய்யப்படுவோர் அடுத்த 6 ஆண்டுகளுக்கு தேர்தல்களில் போட்டியிடவும் முடியாது.


சோன்பத்ரா என்ற இடத்தில் ஒரு பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் சிக்கியவர் கான்ட். கடந்த 9 வருடமாக விசாரணை நடந்த நிலையில் தற்போது அவருக்கு 25 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.  இதுதவிர ரூ. 10 லட்சம் அபராதமும் அவருக்கு விதிக்கப்பட்டுள்ளது.




பலாத்காரம் செய்யப்பட்ட பெண்ணுக்கு இப்போது திருமணமாகி அவருக்கு குழந்தையும் உள்ளது. இந்தப் பெண்ணிடம் அந்த அபராதத் தொகையை செலுத்த கோர்ட் உத்தரவிட்டுள்ளது. 


கடந்த சில ஆண்டுகளில் உ.பி. சட்டசபையில் பல உறுப்பினர்கள் தண்டனை பெற்று இப்படி தகுதிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். கடந்த 2022ம் ஆண்டு சமாஜ்வாடி எம்எல்ஏ ஆசம்கான், பாஜக எம்எல்ஏ விக்ரம் சிங் சைனி ஆகியோர் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர். இதே போல 2020ம் ஆண்டு குல்தீப் சிங் செங்கார் என்ற எம்எல்ஏ பாலியல் பலாத்கார வழக்கில் தண்டனை பெற்று தகுதிநீக்கம் செய்யப்பட்டார்.


இந்த ஆண்டு ஆசம் கானின் மகன் அப்துல்லா ஆசம் கான் தகுதிநீக்கம் செய்யப்பட்டார்.  தற்போது இன்னொரு பாஜக எம்எல்ஏ தகுதிநீக்கம் ஆகியுள்ளார்.

சமீபத்திய செய்திகள்

news

பிறை தெரிந்தது.. சவூதி அரேபியா, வளைகுடா நாடுகளில் ரம்ஜான் கொண்டாட்டம்.. இந்தியாவில் நாளை!

news

அதிமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை குறித்து மத்திய அமைச்சர் அமித்ஷா விளக்கம்

news

Weather Forecast: அடுத்த 2 நாட்களுக்கு 2 டிகிரி வரை வெப்ப நிலை அதிகரிக்கும்.. வானிலை மையம்

news

திமுகவிற்கு போட்டியாக யாரும் இல்லை: திமுக எம்.பி. கனிமொழி திட்டவட்ட பதில்!

news

இமைகளின் இசையில் இளைப்பாறி.. இதழ்களின் இடையில் .. உதயமாகிறேன் (கவிதை)

news

நிலநடுக்கம்... மியான்மரில் பலி எண்ணிக்கை 1,000த்தை கடந்தது!

news

மேல்பாதி திரெளபதி அம்மன் கோவிலில்.. விரைவில் ஆலய நுழைவுப் போராட்டம்.. சீமான் அறிவிப்பு

news

அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் திடீர் என டெல்லி பயணம்!

news

உகாதி திருநாள்.. தெலுங்கு, கன்னடப் புத்தாண்டைக் கொண்டாடத் தயாராகும் மக்கள்

அதிகம் பார்க்கும் செய்திகள்