உலகிலேயே மிகப் பெரிய.. 206 அடி பிரமாண்ட அம்பேத்கர் சிலை.. விஜயவாடாவில் இன்று திறப்பு!

Jan 19, 2024,01:03 PM IST

விஜயவாடா: ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் உலகிலேயே மிகப்பெரிய, 206 அடி உயரம் கொண்ட அம்பேத்கர் சிலை இன்று  திறக்கப்படுகிறது.


81 அடி உயரத்தில் பீடமும்,  அதற்கு மேல் 125 அடி உயரத்தில் சிலையும் என  மொத்தம் 206 அடியில் அம்பேத்கர் சிலை நிறுவப்பட்டுள்ளது. 18.81 ஏக்கர் பரப்பளவில் ரூ.404.35 கோடி செலவில் இந்த சிலை நிறுவப்பட்டுள்ளது. இந்த சிலைக்காக 400 டன் எடையிலான ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் பயன்படுத்தப்பட்டுள்ளது. நாட்டின் மத சார்பற்ற சிலையாக இந்த சிலை வர்ணிக்கப்படுகிறது.


சிலை அமைக்கப்பட்ட இடத்திற்கு "ஸ்மிருதி வனம்" என்று பெயரிடப்பட்டுள்ளது. சிலை முழுக்க முழுக்க உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டுள்ளது. ஸ்மிருதி வனம் முழுவதும் சுற்றுலா தளமாக மாற்றப்டுகிறது. அதற்கேற்றார் போல அந்த இடம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. பொது மக்கள் வாக்கிங் போவதற்கும் அந்த வளாகத்தில் வசதி செய்யப்பட்டுள்ளது. 




சிலைக்கு கீழே பி.ஆர்.அம்பேத்கர் அனுபவ மையம் அமைக்கப்பட்டுள்ளது. அங்கு அம்பேத்கரின் வாழ்க்கையில் நடந்த முக்கிய நிகழ்வுகள், காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. 2000 இருக்கைகள் கொண்ட மாநாட்டு மையம், 8000 சதுர அடியில் உணவு அரங்கம், குழந்தைகள் விளையாட்டு இடம் மற்றும் வாகன நிறுத்துமிடம் ஆகியவையும் சிலை அமைந்துள்ள வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ளன.  


ஆந்திர மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி சிலையைத் திறந்து வைக்கவுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், பிற்படுத்தப்பட்ட சமூகங்கள் மற்றும் பெண்களின் வாழ்க்கையை அனைத்து துறைகளிலும் மாற்றி அமைத்த மாபெரும் ஆளுமை டாக்டர் அம்பேத்கர். டாக்டர் அம்பேத்கரின் உணர்வை உலக முழுவதும் பரப்புவதற்காக அமைக்கப்பட்டுள்ள இந்த சிலை திறப்பு விழாவில் அனைவரும் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுத்துள்ளார்.

சமீபத்திய செய்திகள்

news

Red Alert: 3 மாவட்டங்களுக்கு நாளை, நாளை மறு நாள் 2.. ரெட் அலர்ட்.. மிக மிக கன மழை பெய்யும்!

news

Rain Alert: டெல்டா மாவட்டங்களில்.. 2 நாட்களுக்கு மிக கன மழைக்கு வாய்ப்பு.. தமிழ்நாடு வெதர்மேன்

news

பாமக நிறுவனர் டாக்டர் ராமதாசுக்கு வேற வேலை இல்லை.. முதல்வர் மு.க. ஸ்டாலின்

news

அல்லு அர்ஜூனின் புஷ்பா 2.. டிக்கெட் விற்பனையில் புதிய சாதனை.. அமெரிக்காவில் அதிரடி சேல்ஸ்

news

பிறந்த நாளின்போது.. பிளக்ஸ் பேனர்கள், பட்டாசுகளைத் தவிர்க்க வேண்டும்.. துணை முதல்வர் உதயநிதிஸ்டாலின்

news

ராமதாஸ் குறித்த பேச்சுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும்.. அன்புமணி ராமதாஸ்

news

Perth Test: 295 ரன்கள் வித்தியாசத்தில்.. ஆஸ்திரேலியாவை வச்சு செய்து.. இந்தியா அபார வெற்றி!

news

பெண்கள், பெண் குழந்தைகள் நலனுக்காக.. தனி இணையதளம் தேவை.. தவெக தலைவர் விஜய்

news

Immunity Drinks: லேசான தலைவலி காய்ச்சலுக்கெல்லாம் டாக்டரிடம் ஓடாதீங்க.. இதை குடிச்சுப் பாருங்க!

அதிகம் பார்க்கும் செய்திகள்