சவரன் ரூ.60,000த்தை தாண்டி புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை... குழப்பத்தில் வாடிக்கையாளர்கள்

Jan 22, 2025,12:06 PM IST

சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரண  தங்கத்தின் விலை சவரனுக்கு ஒரே நாளில் ரூ.600 அதிகரித்து ஒரு சவரன் ரூ.60,200க்கு விற்கப்பட்டு வருகிறது.

2025ம் ஆண்டு தொடங்கியதில் இருந்து தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருகிறது. இந்நிலையில், கடந்த ஜனவரி 14 மற்றும் 18 ஆகிய இரண்டு நாட்களில் மட்டும் சற்று குறைந்த தங்கம் மீண்டும் உயரத்தொடங்கியது. இன்று ஓரே நாளில் மட்டும் சவரனுக்கு ரூ.600 உயர்ந்து, இதுவரைக்கும் இல்லாத உயரத்திற்கு தங்கம் விலை சென்று புதிய உச்சத்தை தொட்டுள்ளது. இந்த விலை உயர்வு மேலும் அதிகரிக்கும் என்று நிபுணர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றுள்ள நிலையில், தங்கம் விலையில் மாற்றம் ஏற்படும் என்று எதிர் பார்க்கப்பட்டது. இதனையடுத்து நேற்று எந்த மாற்றமும் இன்றி பழைய விலையிலேயே இருந்த தங்கம் இன்று அதிரடியாக உயர்ந்துள்ளது.

சென்னையில் இன்றைய (22.01.2025) தங்கம் விலை....



சென்னையில் இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை  ரூ.7,525க்கும், 24 கேரட் ஒரு கிராம் ரூ.8,209க்கும் விற்கப்பட்டு வருகிறது. 

8 கிராம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை 60,200 ரூபாயாக உள்ளது.
10 கிராம் 22 கேரட்  தங்கம் இன்று ரூ.75,250 ஆக உள்ளது.
100 கிராம் 22 கேரட்  தங்கம் ரூ.7,52,500க்கு விற்கப்படுகிறது.

1 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 8,209 ரூபாயாக உள்ளது. 
8 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை ரூ.65,672 ஆக உள்ளது. 
10 கிராம் 24 கேரட்  தங்கம் இன்று ரூ.82,090 ஆக உள்ளது.
100 கிராம் 24 கேரட்  தங்கம் ரூ.8,20,900க்கு விற்கப்படுகிறது.

இந்தியாவில் முக்கிய நகரங்களில் தங்கம் விலை நிலவரம்

மும்பையில் 22 கேரட் தங்கம் விலை ரூ.7,525கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.8,209க்கும் விற்கப்படுகிறது.
டெல்லியில் 22 கேரட் தங்கம் விலை ரூ.7,540க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.8,224க்கும் விற்கப்படுகிறது.
கொல்கத்தாவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.7,525க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.8,209க்கும் விற்கப்படுகிறது.
பெங்களூருவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.7,525க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.8,209க்கும் விற்கப்படுகிறது.
கேரளாவில் 22 கேரட் தங்கம் விலை  ரூ.7,525க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.8,209க்கும் விற்கப்படுகிறது.
புனேவில் 22 கேரட் தங்கம் விலை  ரூ.7,525க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.8,209க்கும் விற்கப்படுகிறது.
அகமதாபாத்தில் 22 கேரட் தங்கம் விலை  ரூ.7,530க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.8,214க்கும் விற்கப்படுகிறது.

முக்கிய நாடுகளில் இன்றைய 22 கேரட் தங்கத்தின் விலை...

குவைத் - ரூ.7,045
மலேசியா - ரூ.7,069
ஓமன் - ரூ. 7,311
சவுதி ஆரேபியா - ரூ.7,224
சிங்கப்பூர் - ரூ.6,937
அமெரிக்கா - ரூ. 6,754
துபாய் - ரூ.7,202
கனடா - ரூ.7,352
ஆஸ்திரேலியா - ரூ.6,768

சென்னையில் இன்றைய வெள்ளி விலை....
.
தங்கம் விலை அதிரடியாக உயர்ந்துள்ள நிலையில், வெள்ளி விலை எந்த மாற்றமும் இன்றி, கடந்த 17ம் தேதி இருந்த விலையிலேயே இன்றும் இருந்து வருகிறது.
 
ஒரு கிராம் வெள்ளி விலை ரூபாய் 104 ஆக உள்ளது.
8 கிராம் வெள்ளி விலை ரூபாய் 832 ஆக உள்ளது.  
10 கிராம் வெள்ளியின் விலை ரூ.1040 ஆக உள்ளது.
100 கிராம் வெள்ளியின் விலை ரூ.10,400 ஆக உள்ளது.
1 கிலோ வெள்ளியின் விலை ரூ.1,04,000 ஆக உள்ளது.


செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

Today gold rate: வரலாறு காணாத தொடர் உயர்வில் தங்கம் விலை... அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்!

news

வக்பு சட்டத்தை கண்டித்து.. கடை அடைப்பு போராட்டம் நெல்லையில் பரபரப்பு..!

news

கோடை விடுமுறையை மாணவர்கள் பயனுள்ள வகையில் கழிக்க வேண்டும்.. அமைச்சர் அன்பில் மகேஷ்..!

news

அது மட்டும் பண்ணாதீங்க...அமைச்சர்களுக்கு முதல்வர் கொடுத்த அட்வைஸ்

news

குடியரசுத் தலைவருக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட முடியுமா..? குடியரசு துணைத் தலைவர் ஜக்தீப் கேள்வி..!

news

good friday 2025 : புனித வெள்ளிக்கு ஏன் இந்த பெயர் வந்தது தெரியுமா?

news

என்னென்ன காயெல்லாமோ சாப்பிட்டிருப்பீங்க.. தோசைக்காய பப்பு டேஸ்ட் பண்ணிருக்கீங்களா..!

news

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் ஏப்ரல் 18, 2025...யாருக்கு என்ன பலன் காத்திருக்கு?

news

ஹஜ் ஒதுக்கீடு ரத்து...பிரதமர் தலையிட முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்

அதிகம் பார்க்கும் செய்திகள்