சென்னை: வடகிழக்கு பருவமழை விடைபெற்றுள்ள நிலையில், 1871ம் ஆண்டுக்குப் பிறகு நீண்ட காலம் நீடித்த 3வது பருவ மழை என்ற பெயர் 2024 சீசனுக்குக் கிடைத்துள்ளது.
தமிழ்நாட்டில் 2024 ஆம் ஆண்டு வடகிழக்கு பருவமழை அக்டோபர் 15ஆம் தேதி தொடங்கி பரவலாக மழை பெய்து வந்தது. பிறகு வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து மத்தியில் வங்கக்கடலில் மாறி மாறி காற்று சுழற்சிகள் உருவாகி நல்ல மழையை கொடுத்தது.
பெங்கல் புயல் உருவாகி வட தமிழ்நாடு, உள் மாவட்டங்கள், தென் மாவட்ட கடலோரப் பகுதிகளில் பரவலாக அதிக கன மழை முதல் முதல் மிக கனமழை வரை கொட்டி தீர்த்தது. இதனால் ஆறு, குளங்கள், ஏரிகள் அணைகள், என அனைத்து நீர்நிலைகளும் நிரம்பி பல்வேறு பகுதிகள் சேதத்தை சந்தித்தன. பொதுவாகவே வடகிழக்கு பருவமழை அக்டோபர் மாதம் தொடங்கி டிசம்பர் மாதத்தில் முடிவடையும். ஆனால் இந்த வருடம் அக்டோபரில் தொடங்கிய வடகிழக்கு பருவமழை டிசம்பரில் முடிவடையாமல் ஜனவரி வரை நீடித்தது.
2024 வடகிழக்கு பருவமழை மொத்தம் நூறு நாட்கள் நீடித்து, இயல்பை விட 33 சதவிகிதம் கூடுதலாக பெய்திருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்த நிலையில் 1871ம் ஆண்டிலிருந்து இந்த வருடம் வரையிலான கணக்கீடுகளின் அடிப்படையில், இதுதான் 3வது மிக நீளமான வட கிழக்குப் பருவ மழை என்று தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.
டாப் 10 நீண்ட வட கிழக்குப் பருவ மழைக்கால பட்டியல்:
வருடம் - முடிவுக்கு வந்த தேதி
1925 - 30.01.1926
1933 - 28.01.1934
2024 - 27.01.2025
2004 - 25.01.2005
1920 - 25.01.1921
1934 - 24.01.1935
1914 - 23.01.1915
2021 - 22.01.2022
1994 - 22.01.1995
1905 - 20.01.1906
2020 - 19.01.2021
கடந்த 15 வருட காலத்தில் நீடித்த வட கிழக்குப் பருவ மழைக்காலம் குறித்த பட்டியல்:
வருடம் - முடிவுக்கு வந்த தேதி
2024 - 27.01.2025
2023 - 14.01.2024
2022 - 12.01.2023
2021 - 22.01.2022
2020 - 19.01.2021 (2021 ஜனவரியில் வரலாறு காணாத மழை பெய்தது)
2019 - 10.01.2020
2018 - 02.01.2019
2017 - 15.01.2018
2016 - 04.01.2017
2015 - 07.01.2016
2014 - 04.01.2015
2013 - 18.01.2014
2012 - 11.01.2013
2011 - 10.01.2012
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
மினி பஸ்களில்.. இனி மினிமம் டிக்கெட் ரூ. 4.. அதிகபட்சம் 10 ரூபாய்.. புதிய கட்டண விகிதம் அறிவிப்பு
வெயில் தொடங்கி விட்ட போதும்.. ஜனவரி 30 முதல் பிப்ரவரி 3 வரை.. மிதமான மழைக்கு வாய்ப்பு!
ஸ்ரீஹரிகோட்டாவில் செஞ்சுரி அடிக்கும் இஸ்ரோ.. நாளை 100வது செயற்கைக் கோளை ஏவுகிறது!
தலித் ஊழியரை பொய் வழக்கில் சிக்க வைத்ததாக.. இன்போசிஸ் இணை நிறுவனர் உள்ளிட்டோர் மீது வழக்கு
ஸ்ரீரங்கம் கோவில் பார்க்கிங் அருகே.. ஓட ஓட விரட்டி வெட்டிக் கொல்லப்பட்ட ரவுடி அன்பு!
தமிழக வெற்றிக் கழகத்தில்.. அடுத்தபடியாக.. பூத் கமிட்டி நிர்வாகிகளை நியமிக்க விஜய் உத்தரவு!
வன்னியர்களுக்கு அதிக துரோகம் செய்த ஒரே முதல்வர் யார் தெரியமா.. டாக்டர் அன்புமணி பேச்சு
சீமான் என்ன பாஜகவின் கொள்கை பரப்புச் செயலாளரா?.. விசிக தலைவர் திருமாவளவன் கேள்வி!
அமெரிக்கா செல்லவுள்ளார் பிரதமர் மோடி.. டிரம்ப்புடன் முக்கியப் பேச்சு.. எப்போது, எத்தனை நாட்கள்?
{{comments.comment}}