"அடித்து நொறுக்கிய பேய் மழை.. 50 வருடங்களில் இது 6வது முறை".. தமிழ்நாடு வெதர்மேன்

Dec 05, 2023,06:30 PM IST

சென்னை: கடந்த 50 வருடங்களில் சென்னை மாநகரம் மிக மிகப் பெரிய மழையை சந்தித்தது இது 6வது முறையாகும் என்று தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.


எப்புர்ரா என்று இன்னும் கூட பலருக்கு நம்ப முடியவில்லை. அந்த அளவுக்கு கொட்டித் தீர்த்து விட்ட கன மழையுடன் ஆந்திராவில் கரையைக் கடந்து விட்டது மிச்சாங் புயல். இப்படி ஒரு காட்டு காட்டும் என்று யாருமே எதிர்பார்க்கவில்லை. பெரும் மழைக்கு வாய்ப்புண்டு என்று எல்லோரும் எதிர்பார்த்தனர். ஆனால் அடித்து புரட்டிப் போட்டு அல்லோகல்லப்பட்டுத்தி விடும் என்பதை யாரும் எதிர்பார்க்கவில்லை.


இந்த நிலையில் இந்த பெரு மழை குறித்த ஒரு பின்னோக்குப் பார்வை பதிவைப் போட்டுள்ளார் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான். அந்த பதிவு:




கடந்த 50 ஆண்டுகளில் இதுவரை மொத்தமே ஆறு முறைதான் சென்னை மிகப் பெரிய மழைப் பொழிவை சந்தித்துள்ளது. 1976, 1985, 1996, 2005, 2015, 2023 ஆகிய ஆண்டுகளில் சென்னை மாநகரம் மிகப் பெரிய அளவிலான மழையை சந்தித்துள்ளது.  இந்த ஆண்டு  சென்னை நகரம் 2000 மில்லி மீட்டர் மழை அளவைத் தாண்டியுள்ளது.


நுங்கம்பாக்கம் கடந்த 48 மணி நேரத்தில் 469 மில்லி மீட்டர் மழையைப் பெற்றுள்ளது.  இதில் பெருமளவிலான மழையானது ஞாயிற்றுக்கிழமை இரவு முதல் திங்கள்கிழமை இரவு வரையிலான காலகட்டத்தில் பெய்துள்ளது. மொத்த நகரமும் 24 மண நேரத்தில் 400 முதல் 500 மில்லி மீட்டர் அளவிலான மழையைப் பெற்றுள்ளது. 


ஆவடிதான் மிக  பாதிப்பை சந்தித்துள்ளது. இங்கு மட்டும் 564 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. பூந்தமல்லி 483 மில்லி மீட்டர் மழையைச் சந்தித்துள்ளது. இதனால்தான் கூவம் ஆற்றில் நீர்ப்போக்கு அதிகரித்து பெரும் பாதிப்பை ஏற்படுத்தி விட்டது.  


தாம்பரம் 409 மில்லி மீட்டர் அளவிலான மழைப்பொழிவைப் பெற்றுள்ளது. இதில் பெருமளவிலான மழையானது அடையாறு ஆற்றின் நீர்பிடிப்புப் பகுதியில் கிடைத்துள்ளது. இதனால் அடையாற்றிலும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.


3வதாக கொசஸ்தலையாரும் நிரம்பி வழிந்துள்ளது. ஒரு கட்டத்தில் பூண்டி நீர்த்தேக்கத்திலிருந்து 45,000 கன அடி நீர் வெளியேற்றப்பட்டுள்ளது. இதுவும் நகருக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.


ஆக மொத்தத்தில் கடந்த 50 ஆண்டுகளில் வரலாறு படைத்த மழை ஆண்டுகளில் ஒன்றாக 2023 இணைந்து விட்டது மட்டும் உண்மை என்று கூறியுள்ளார் வெதர்மேன்.

சமீபத்திய செய்திகள்

news

ரஜினியை சீமான் சந்தித்து விட்டு வந்த மறு நாளே.. கோவை வடக்கு நாதக நிர்வாகிகள் கூண்டோடு விலகல்!

news

Drumsticks price.. என்னடா இது.. முருங்கைக்கு வந்த கிராக்கி.. விர் விலை உயர்வு.. இல்லத்தரசிகள் கவலை!

news

Kooran movie.. நாம எத்தனை வழக்கு போடறோம்.. ஒரு நாய் நம்ம மேல கேஸ் போட்டா எப்படி இருக்கும்!

news

வங்கக் கடல் காற்று சுழற்சி.. தமிழ்நாடு, இலங்கையை நோக்கி நகரக் கூடும்.. வானிலை மையம்

news

ஏக்கம் (ஒரு பக்க சிறுகதை)

news

நிக்கோபார் தீவு அருகே.. காற்றழுத்தத் தாழ்வு உருவாக ஆரம்பித்து விட்டது.. தமிழ்நாடு வெதர்மேன்

news

நவம்பர் 22 - இன்றைய நல்ல நேரம், செய்ய வேண்டிய வழிபாடு

news

மங்களகரமான வெள்ளிக்கிழமையில் பண மழையில் நனையப் போகும் 2 ராசிக்காரர்கள்

news

Orange alert: தமிழ்நாட்டில் ஒரிரு இடங்களில் 26 மற்றும் 27 தேதிகளில் மிக கன மழை எச்சரிக்கை!

அதிகம் பார்க்கும் செய்திகள்