தமிழ்நாடு தேர்தல் களத்தில்.. தமிழ் மாநில காங்கிரஸ்.. கடைசியாக வெற்றியை சுவைத்தது எப்போது?

Feb 26, 2024,06:47 PM IST

சென்னை: தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி கடைசியாக 2001ம் ஆண்டுதான் தேர்தல் களத்தில் வென்றுள்ளது. அதன் பிறகு அக்கட்சி இதுவரை வெற்றியைச்  சுவைக்காத நிலையே தொடர்கிறது.


ஒரு பெரும் "கலகத்தில்" பிறந்த கட்சிதான் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி. பெரும் புயலுக்கு மத்தியில்தான் அந்தக் கட்சி பிறந்தது. 


கலகத்தில் பிறந்த தமாகா




1996ம் ஆண்டு நடந்த ஒரே சமயத்தில் நடந்த சட்டசபைத் தேர்தல் மற்றும் லோக்சபா தேர்தலின்போது, அதிமுகவுடன் காங்கிரஸ் கூட்டணி வைக்கக் கூடாது என்று மறைந்த தலைவர் ஜி.கே.மூப்பனார் போர்க்கொடி உயர்த்தினார். ஆனால் அப்போது காங்கிரஸ் தலைவராக இருந்த பி.வி. நரசிம்மராவ் அதை நிராகரித்தார். அதிமுகவுடன் கூட்டணி வைக்க முடிவு செய்தார். இதனால் தமிழ்நாடு காங்கிரஸில் பெரும் போர் வெடித்தது. ஜி.கே.மூப்பனார் தலைமையில் கட்சி உடைந்தது. தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியை உருவாக்கினார் மூப்பனார். திமுகவுடன் கை கோர்த்தார். இந்த கூட்டணிக்கு பெரும் பலமாக, பாலமாக அமைந்தவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி இந்தத் தேர்தல்களில் மிகப் பெரிய வெற்றியை ஈட்டியது. 


40 சட்டசபைத் தொகுதிகளில் போட்டியிட்ட தமாகா, 39 தொகுதிகளை வென்றது. அதேபோல 20 நாடாளுமன்றத் தொகுதிகளில் போட்டியிட்டு 20 தொகுதிகளிலும் வெற்றி பெற்றது. மிகப் பெரிய அரசியல் சக்தியாக அப்போது தமாகா விஸ்வரூபம் எடுத்து நின்றது. திமுக - தமாக கூட்டணியின் அதிரடியான வெற்றியால் அதிமுகவே ஆடிப் போனது.  ஆனால் காலத்தின் கோலமாய் நிலைமை  போகப் போக தலைகீழாக மாறியது.


1998ல் சரிந்த தமாகா செல்வாக்கு




மத்தியில் கூட்டணி ஆட்சி கவிழ்ந்து, 1998ம் ஆண்டு நடந்த  லோக்சபா தேர்தலின்போது மீண்டும் திமுகவுடன்  கூட்டணி வைத்து போட்டியிட்ட தமாகாவுக்கு இந்த முறை தோல்வி காத்திருந்தது. 20 தொகுதிகளில் போட்டியிட்ட அக்கட்சிக்கு வெறும் 3 தொகுதிகளில் மட்டுமே வெற்றி கிடைத்தது.  இரண்டே வருடங்களில் தமாகாவின் செல்வாக்கு சரிந்து போனது. 


இதைத் தொடர்ந்து 2001 சட்டசபைத் தேர்தலில் வேறு மாதிரியான பாதையைத் தேர்வு செய்தார் ஜி.கே.மூப்பனார்.  அதாவது யாரை எதிர்த்து கட்சி ஆரம்பித்தாரோ அவர்களுடனேயே கை கோர்த்தார். அதிமுக, காங்கிரஸ் கட்சிகளுடன் இம்முறை சட்டசபைத் தேர்தலில்  அவர் கூட்டணி வைத்தார். இதில் தமாகவுக்கு 23 இடங்கள் கிடைத்தன. இதுதான் தமாகாவுக்கு அரசியல் ரீதியாக தேர்தல் களத்தில் கிடைத்த கடைசி வெற்றியாகும்.


மாறிய தமாகாவின் நிலைப்பாடுகள்




இந்தத் தேர்தல் தோல்விக்குப் பின்னர் மூப்பனாரின் காலம் முடிவடைந்தது. அவரது காலத்திற்குப் பின்னர் ஜி.கே.வாசன் தமாகாவின் தலைவர் ஆனார். அவரும் அடிக்கடி தனது நிலைப்பாடுகளை மாற்றி வந்ததால் தொடர் தோல்வியையே தமாகா சந்தித்து வந்தது. 2001 தேர்தலுக்குப் பிறகு தேர்தல் களத்தில்  1999 நாடாளுமன்றத் தேர்தல், 2016 சட்டசபைத் தேர்தல், 2019 நாடாளுமன்றத் தேர்தல், 2021 சட்டசபைத் தேர்தலில் தமாகா போட்டியிட்டது. ஆனால் எல்லாத் தேர்தல்களிலும் அக்கட்சிக்கு தோல்வியே கிடைத்தது.  இதில் 2021 தேர்தலில் இரட்டை இலை சின்னத்தில் தமாகா போட்டியிடும் நிலை ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.


தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி முதலில் திமுகவுடன் கூட்டணி அமைத்தது. பின்னர் அதிமுக கூட்டணிக்கு மாறியது. அதைத் தொடர்ந்து மக்கள் நலக் கூட்டணியில் ஒருமுறை இருந்தது. பின்னர் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு இடம் பெயர்ந்தது. தற்போது மீண்டும் அதே தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு வந்துள்ளது. இந்த முறையாவது அது நீண்ட காலமாக காத்திருக்கும் வெற்றிக் கனி அதன் கைக்கு வந்து சேருமா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

சமீபத்திய செய்திகள்

news

ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது.. கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

மகாத்மா காந்தி பிறந்த மாதத்தில்.. புதிய மதுபானக் கொள்கையை அறிமுகப்படுத்தும் ஆந்திர அரசு!

news

ஐபிஎல் 2025 வருது வருது.. நவம்பரில் வீரர்கள் ஏலம்.. துபாயா, தோஹாவா இல்லாட்டி அபுதாபியா?

news

பெண் உதவியாளரை நாசப்படுத்தியதாக.. அரபி குத்து, காவாலா பாடல் புகழ் ஜானி மாஸ்டர் கைது!

news

சபாஷ் பாஸ்கர்.. மாற்றுத் திறனாளி பயணியிடம் காட்டிய கனிவு.. வேற லெவல் மாற்றத்தில் சென்னை எம்டிசி!

news

வங்கதேசத்துடன் கிரிக்கெட் போட்டி கூடாது.. சென்னையில் போராட்டத்தில் குதித்த இந்து மக்கள் கட்சி

news

என்ன தலைவா.. கடைசியில நீயும் அரசியல்வாதி ஆகிட்டியே?.. விஜய் போட்ட டிவீட்.. கதறும் கட்சிகள்!

news

அதீத பணிச்சுமை.. வீடு திரும்பிய இளம் பெண்.. படுக்கையில் சரிந்து பரிதாப மரணம்!

news

நவராத்திரி விற்பனை கண்காட்சி.. சென்னையில்.. செப்டம்பர் 21 முதல் கோலாகல தொடக்கம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்