சென்னை: சென்னையில் ஏசி பஸ்கள் உட்பட அனைத்து பேருந்துகளிலும் பயணம் செய்ய ரூபாய் 2000 மதிப்பிலான விருப்பம்போல் பயணம் செய்யும், மாதாந்திர சலுகை பயண அட்டை இன்று அறிமுகப்படுத்தினார் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர்.
தமிழ்நாடு அரசு பேருந்து கழக சார்பில் ஏற்கனவே குளிர்சாதன பேருந்துகள் மட்டும் நீங்கலாக அரசு பேருந்துகள், மற்றும் டீலக்ஸ் பேருந்துகளில் பயணம் செய்ய ரூபாய் 1000 மாதாந்திர பயண அட்டை பெற்று மக்கள் பயனடைந்து வருகின்றனர். மேலும் போக்குவரத்து துறையில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்த 2025-26 ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் போக்குவரத்துத் துறைக்காக ரூ. 12,964 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.
அதன்படி, சென்னை போக்குவரத்து துறை புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது சென்னையில் ஏ.சி பேருந்து உட்பட அனைத்து மாநகர பேருந்துகளிலும் பயணிக்க ரூபாய் 2000 மாதாந்திர பயண அட்டை பெற்றுக்கொண்டு பயணம் செய்யலாம். அதேபோல் மக்கள் விருப்பம் போல் ஏற்கனவே பயன்படுத்தி வந்த மாதாந்திர ரூ.1000 பயண அட்டையும் பெற்றுக்கொண்டு பயணம் செய்யலாம் எனவும் அறிவித்துள்ளது. இந்த நடைமுறை இன்று முறை அமல்படுத்தப்பட்டுள்ளது.
சென்னை, மாநகர் போக்குவரத்துக் கழக பயணிகளின் வசதிக்காக குளிர்சாதன பேருந்து உட்பட அனைத்து பேருந்துகளிலும் பயணம் செய்யும் வகையிலான ரூ.2000/- மதிப்புமிக்க பயணம் செய்யும் (TAYPT) மாதாந்திர பயண அட்டை திட்டத்தை மாண்புமிகு போக்குவரத்துத் துறை அமைச்சர் திரு. சிவசங்கர் இன்று மந்தைவெளி பேருந்து நிலையத்தில், அறிமுகப்படுத்தினார். இந்த நிகழ்வில் மாநகர் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் டாக்டர். பிரபு, இணை மேலாண் இயக்குநர் திரு. செ. நடராஜன், தலைமை நிதி அலுவலர், மாநகர் போக்குவரத்துக் கழக பொது மேலாளர்கள், தொழிற்சங்க பிரதிநிதிகள் மற்றும் உயர் அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மாதாந்திர சலுகைப் பயணச்சீட்டு விற்பனை மையங்கள்:
அடையாறு, அம்பத்தூர் தொழிற்பேட்டை, அம்பத்தூர் ஓ.டி, அண்ணாநகர் (மேற்கு), ஆவடி, அயனாவரம், பிராட்வே, கோயம்பேடு, சென்ட்ரல் ரயில் நிலையம், கிண்டி தொழிற்பேட்டை, ஐயப்பன் தாங்கல், கிளாம்பாக்கம், கே.கே நகர், எம்.கே.பி நகர், மந்தவெளி, பல்லாவரம், பெரம்பூர், பூந்தமல்லி, செங்குன்றம், சைதாப்பேட்டை, ஸ்ரீபெரும்புதூர், தி.நகர், தாம்பரம் (மேற்கு), திருவான்மியூர், திருவெற்றியூர், தண்டையார்பேட்டை, வடபழனி, வள்ளலார் நகர், வேளச்சேரி, ஐ.சி.எப் போன்ற இடங்களில் மாதாந்திர பயணச்சீட்டு அட்டையை பெற்றுக்கொள்ளலாம்.
நீட் விவகாரத்தில் ஏப்ரல் 9ல்.. சட்டமன்ற அனைத்து கட்சி ஆலோசனை கூட்டம்.. முதல்வர் மு.க ஸ்டாலின்
தமிழ்நாட்டில் இன்றும் .. 17 மாவட்டங்களில்.. கன மழைக்கு வாய்ப்பு.. சென்னை வானிலை ஆய்வு மையம்!
பாஜக தலைவர் மாற்றம் உறுதி... அண்ணாமலையே சூசகமாக தகவல்!
நெருப்புடா.. நெருங்குடா.. இன்று முதல் விஜய்க்கு ஒய் பிரிவு பாதுகாப்பு அமல்..!
நாளும் நல்லதுசெய்யும் முதலமைச்சர் இந்த இரண்டு செயல்களாலும் இன்னும் இன்னும் உயர்கிறார்: வைரமுத்து
வந்தோம் போனோம் என்று இருக்க மாட்டோம்.. இஸ்லாமியர்களுக்கு உறுதுணையாக இருப்போம் - தவெக
எஸ்ஐ பணியில் சேர ஆசையா?.. தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் வெளியிட்ட சூப்பர் அப்டேட்!
உங்கள் வாழ்வில் இருந்து ஒருவரை நீக்கும்போது.. அதன் மதிப்பை உடனடியாக அறிய மாட்டீர்கள்.. செல்வராகவன்!
கூலி படத்தின் முக்கிய அப்டேட் இன்று வெளியீடு.. வெறி வெயிட்டிங்கில் ரசிகர்கள்!!
{{comments.comment}}