டெல்லி: பல்கேரியாவைச் சேர்ந்த மறைந்த மர்மப் பெண்மணி பாபா வாங்கா, 2024ம் ஆண்டில் நடக்கும் என்று கணித்ததில் 2 விஷயங்கள் நிஜமாகியுள்ளன. இதனால் அவர் கூறியுள்ள மற்ற கணிப்புகளும் நிஜமாகுமா என்ற பரபரப்பான எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
பல்கேரியாவைச் சேர்ந்தவர் பாபா வாங்கா. இவர் பார்வையற்றவர். இளம் வயதில் நல்ல பார்வையுடன், இயல்பான பெண்ணாகத்தான் இருந்தார். ஆனால் என்று அவருக்குப் பார்வை பறி போனதோ அன்று முதல் இவர் வித்தியாசமாக பேச ஆரம்பித்து விட்டார். அதாவது எதிர்காலத்தில் நடக்கப் போவது குறித்து அவர் கணிப்புகளை கூற ஆரம்பித்தார்.
பால்கன் நாடுகளின் நாஸ்டிரடாமஸ் என்ற செல்லப் பெயர் இவருக்கு உண்டு. பாபா வாங்கா கணிப்புகள் பல நிஜமாகியுள்ளன. அமெரிக்காவில் நடந்த தீவிரவாதத் தாக்குதல், இளவரசி டயானாவின் மரணம் உள்ளிட்டவற்றை இவர் சரியாக கணித்திருந்தார். ரஷ்யாவின் செர்னோபிள் அணு விபத்து, இங்கிலாந்தின் பிரெக்ஸிட் உள்ளிட்டவையும் நடந்துள்ளன.
இந்த நிலையில் 2024ம் ஆண்டுக்கும் அவர் பலவற்றை கணித்துள்ளார். அதில் சில நிஜமாகியுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அதாவது புற்றுநோய்க்கு ரஷ்யர்கள் தடுப்பு மருந்து கண்டுபிடிப்பார்கள் மற்றும் ஜப்பான், இங்கிலாந்தில் பொருளாதார நெருக்கடி ஏற்படும் என்று அவர் கணித்திருந்தார். இது நிஜமாகியுள்ளது.
சமீபத்தில்தான் ரஷ்ய அதிபர் விலாடிமிர் புடின் புற்றுநோய் தடுப்பூசி குறித்துக் கூறியிருந்தார். ரஷ்ய விஞ்ஞானிகள், புற்றுநோய்க்கான தடுப்பூசியைக் கண்டுபிடிக்கும் முயற்சிகளில் இறுதிக் கட்டத்தை நெருங்கி விட்டதாக அறிவித்தார். விரைவில் இந்த தடுப்பூசி நோயாளிகளுக்கு வழங்கப்படும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.
அதேபோல உலகம முவுவதும் குறிப்பாக ஐரோப்பாவில் பெரும் பொருளாதார நெருக்கடி ஏற்படும் என்று பாபா வாங்கா கணித்திருந்தார். அதில் ஜப்பான், இங்கிலாந்தில் இது நிஜமாகியுள்ளது. அந்த நாடுகள் பொருளாதார நெருக்கடியை சந்திக்க ஆரம்பித்துள்ளன. கடந்த ஆண்டு இறுதியிலேயே ரிசெசனுக்குப் போய் விட்டது இங்கிலாந்து. அங்கு தற்போது ஜிடிபி விகிதமானது 0.3 சதவீதம் சரிந்துள்ளது. ஜப்பானிலும் இதே நிலைதான்.
பாபா வாங்கா சொன்ன விஷயங்களில் 2 நடந்து விட்டது பலரையும் பரபரப்பில் ஆழ்த்தியுள்ளது. இந்த ஆண்டு அவர் சொன்ன பிற சம்பவங்களும் நடக்குமோ என்ற பரபரப்பு அதிகரித்துள்ளது. பாபா வாங்கா கணித்துள்ள பிற நிகழ்வுகள்:
- ஐரோப்பிய நாடுகளில் தீவிரவாதத் தாக்குதல்கள் அதிகரிக்கும். ஒரு பெரிய நாடு அடுத்த ஆண்டு மிகப் பெரிய அளவில் உயிரி ஆயுதங்களைப் பயன்படுத்தும்.
- 2024ம்ம் ஆண்டில், மிகப்பெரிய அளவில் வெள்ளம், புயல் போன்ற பேரிடர் சீற்றங்கள் நடைபெறும்.
- சைபர் அட்டாக்குகள் அதிகரிக்கும். மின்சார கட்டமைப்பு உள்ளிட்டவற்றை ஹேக்கர்கள் தகர்த்து பெரும் பாதிப்பை ஏற்படுத்துவார்கள்.
- ரஷ்ய அதிபர் விலாடிமிர் புடினைக் கொலை செய்ய உள்நாட்டைச் சேர்ந்த தலைவரே முயற்சிப்பார்.
- குவான்ட்ம் கம்ப்யூட்டிங் துறையில் மிகப் பெரிய சாதனை படைக்கப்படும்.
பார்க்கலாம், இதில் என்னவெல்லாம் நிஜமாகப் போகிறது என்று.
{{comments.comment}}