பொங்கல்: ஜனவரி 12 டூ 14ம் தேதி வரை 19,484 சிறப்புப் பேருந்துகள்.. அமைச்சர் சிவசங்கர் அறிவிப்பு

Jan 08, 2024,04:37 PM IST
சென்னை:  பொங்கல் பண்டிகையையொட்டி சென்னையிலிருந்து மாநிலத்தின் பல்வேறு ஊர்களுக்கும் 19,484 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்து அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் கூறியுள்ளார்.

பொங்கல் பண்டிகை நெருங்கி விட்டது.  12ம் தேதி இரவிலிருந்தே மக்கள் சென்னையிலிருந்து பல்வேறு ஊர்களுக்கும் செல்வதற்காக ஆயத்தமாகி வருகின்றனர். இதையடுத்து சிறப்புப் பேருந்துகளை இயக்குவது குறித்து இன்று காலை அதிகாரிகளுடன் அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக்குப் பிறகு சிறப்புப் பேருந்துகள் குறித்த அறிவிப்பு வெளியானது.

அதன்படி சென்னையிலிருந்து ஜனவரி 12ம் தேதி முதல் 14ம் தேதி வரை சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும். மொத்தம் 19484 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளது. இதில் சென்னையிலிருந்து மட்டும் 11,006 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும். 



கோயம்பேடு, தாம்பரம், கிளாம்பாக்கம் ஆகிய பேருந்து நிலையங்களில் 11 முன்பதிவு மையங்கள் செயல்படும்.  இதில் கிளாம்பாக்கத்தில் மட்டும் 5 முன்பதிவு மையங்கள் இருக்கும்.
கிளாம்பாக்கம், கே.கே.நகர், பூந்தமல்லி, தாம்பரம், மாதவரம் பேருந்து நிலையங்களிலிருந்து  சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும். 

தென் மாவட்டங்களுக்குச் செல்லும் சிறப்புப் பேருந்துகள் அனைத்தும் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்தே இயக்கப்படும்.  கோயம்பேடு வருவோர், கிளாம்பாக்கம் பஸ் நிலையத்திற்கு வருவதற்கு எந்தத் விதமான தடையும் இல்லாத வகையில் இணைப்புப் பேருந்துகள் அதிக அளவில் இயக்கப்படும். 

பொங்கல் பண்டிகை முடிந்த பிறகு ஜனவரி 16ம் தேதி முதல் 18ம் தேதி வரை, தமிழ்நாட்டின் பல்வேறு ஊர்களிலிருந்தும் மொத்தம் 17,589 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

மதுரையை வச்சு செய்யும் வெயில்.. மேலும் சில நாட்கள் வெளுக்குமாம்.. அதிகரிக்கவும் வாய்ப்பு.. கேர்ஃபுல்

news

காட்டுத் தீயாய் பரவிய துணை முதல்வர் வதந்தி.. சிரித்துக் கொண்டே பதிலளித்த உதயநிதி ஸ்டாலின்!

news

ஜிம்பாப்வேயை உலுக்கும் பஞ்சம்.. அதை விரட்ட அரசு எடுத்த முடிவு.. .. அதிர்ச்சியில் நாடுகள்!

news

ஒரே நாடு ஒரே தேர்தல்.. ராம்நாத் கோவிந்த் குழு பரிந்துரைகளை ஏற்றது மத்திய அமைச்சரவை!

news

அழகாய் பூத்தது.. நீலகிரியில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை மலரும் நீலக்குறிஞ்சி சீசன் தொடங்கியது!

news

Thalaivettiyan Palayam: ஜிபி முத்து கொடுத்த சூப்பர் ஐடியாஸ்.. கூலாக கேட்டுக் கொண்ட அபிஷேக் குமார்!

news

"பாட்டி கதியே உங்களுக்கும்".. ராகுல்காந்திக்கு பாஜக தலைவர் மிரட்டல்.. முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்

news

தீபாவளி ரஷ்ஷை சமாளிக்க.. தனியார் பேருந்துகளை வாடகைக்கு எடுக்கும் தமிழக அரசு!

news

மீன்வளப் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா.. அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் புறக்கணித்தார்!

அதிகம் பார்க்கும் செய்திகள்