காஸியாபாத்: உத்தரப் பிரதேச மாநிலம் காஸியாபாத்தில் 19 வயதேயான கல்லூரி மாணவன் மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜிம் ஒன்றில் டிரெட்மில்லில் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தபோது அந்த மாணவனுக்கு மாரடைப்பு வந்து மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். இவ்வளவு சின்ன வயதில் மாரடைப்பு வரும் அளவுக்கு அவருக்கு உடலில் எந்த பிரச்சினையும் இல்லை என்று கூறப்படுகிறது. பிறகு எப்படி மாரடைப்பு ஏற்பட்டது என்று தெரியவில்லை.
அந்த மாணவரின் பெயர் சித்தார் குமார் சிங். கல்லூரியில் 2ம் ஆண்டு படித்து வருகிறார். சரஸ்வதி விஹார் பகுதியில் உள்ள ஜிம்முக்கு இவர் உடற்பயிற்சி செய்யச் செல்வது வழக்கம். சம்பவத்தன்றும் அந்த மாணவன் உடற்பயிற்சிக்கு சென்றிருந்தார். அப்போது டிரெட்மில்லில் அவர் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தபோது அவருக்கு கடுமையான நெஞ்சு வலி வந்துள்ளது. அப்படியே சிறிது நேரம் சமாளிக்கப் போராடியவர் பின்னர் அது முடியாமல் அப்படியே மயங்கிச் சரிந்தார்.
உடனடியாக அருகில் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தவர்கள் ஓடி வந்து அவரை எழுப்ப முயற்சித்தனர். பிறகு அவரை அருகில் இருந்த மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சித்தார்த் குமார் சிங்கைப் பரிசோதித்த டாக்டர்கள் அவர் மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்து விட்டதாக தெரிவித்தனர்.
Cyclone Fengal: தமிழ்நாட்டில் இன்று 3 மாவட்டங்களில் அதி கன மழைக்கு வாய்ப்பு.. நாளை 11 மாவட்டங்கள்!
கனமழை எதிரொலி.. கடலோர மாவட்ட ஆட்சியர்கள் தயார் நிலையில் இருக்கவும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு
புயல் எங்கு எப்போது கரையைக் கடக்கும்.. IMD சென்னை தலைவர் பாலச்சந்திரன் சொல்வது என்ன?
திமுகவை விமர்சித்து விஜய் பேசுவது தவறில்லை.. அவரது எழுச்சி பிரமாதமாக இருக்கிறது.. நடிகர் பார்த்திபன்
Heavy rain alert.. சென்னையில் 8 ஆவின் பாலகங்கள்.. 24 மணி நேரமும் செயல்படும் என அறிவிப்பு!
Healthy Soups.. ஜிலுஜிலு மழைக்கேற்ற.. சூப்பரான கமகம வெஜிட்டபிள் சூப்.. செமையா இருக்கும்!
Cyclone Fengal.. நாளை உருவாகிறது புயல்.. சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் மிக கன மழை பெய்யும்
அதே இடம்.. அதே புயல்.. OMG.. 99 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் மிரட்ட வரும் Depression!
Chennai Rains.. சென்னையில் 5 நாட்களுக்கு மழை நீடிக்கும்.. தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான்
{{comments.comment}}