காத்மாண்டு: நேபாள தலைநகர் காத்மாண்டு அருகே 19 பேருடன் சென்ற பயணிகள் விமானம் ஓடுபாதையில் சறுக்கி விபத்துக்குள்ளானதில் 18 பேர் பலியாகியுள்ளனர்.
நேபாளம் தலைநகர் காத்மாண்டு விமான நிலையத்தில் இருந்து 19 பயணிகளுடன் விமானம் ஒன்று புறப்பட்டது. காத்மாண்டு திரிபுவன் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட சவுரியா ஏர்லைன்ஸ் விமானம் விழுந்து நொறுங்கியது. ஓடுதளத்தில் சென்ற போது ஓடுபாதை சறுக்கி விமானம் விபத்துக்குள்ளானது. ஒடுபாதையில் சறுக்கிய விமானம் சில மணி துளிகளில் தீப்பிடித்து எரிந்தது. இந்த கோர விபத்தில் 18 பேர் உடல் கருகி பலியானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.
இந்த விபத்து குறித்து அறிந்த மீட்பு படையினர் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.இந்த விமான விபத்தால் காத்மாண்டு திரிபுவன் சர்வதேச விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. விமானத்தில் பணியாளர்கள் உட்பட 19 பேர் இருந்த நிலையில், அவர்களின் நிலை என்ன என்பது தெரியாமல் இருந்தது.இதனால் அங்கு பெரும் பதற்றம் நிலவியது. இந்நிலையில் , தீயை அணைத்து மீட்பு பணிகள் நடைபெற்ற நிலையில், 18 பேர்களின் உடல் கருகிய நிலையில் மீட்கப்பட்டுள்ளது. விமானி மணிஷ் ஷக்யா படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நேபாளத்தில் கடந்த 2010ம் ஆண்டு முதல் 12 விமான விபத்துக்கள் நடந்துள்ளன. நேபாள நாட்டில் விமான விபத்து என்பது அடிக்கடி நடைபெற்று வருகிறது. சராசரியாக ஆண்டுக்கு ஒரு விமான விபத்து நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Rain alert: நவம்பர் 26, 27, 28.. தமிழ்நாட்டில் மிக கன மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் தகவல்
Political Talk.. எம்ஜிஆர் ஜெயலலிதா எழுதிய வரலாற்றை.. வலுக்கட்டாயமாக அழிக்கிறதா அதிமுக?
மாநாட்டில் விஜய் கலக்கிவிட்டார்.. இப்படி பேசுவார் என நினைச்சுக் கூட பார்க்கலை.. எஸ்.ஏ.சந்திரசேகர்
TVK.. மாவட்டச் செயலாளர்களாக யாரைப் போடலாம்.. தீவிரமாக களம் குதித்த விஜய்யின் தவெக!
AIADMK.. கள ஆய்வுக் கூட்டங்களில் தொடர்ந்து மோதல்.. வெடிக்கும் தொண்டர்கள்.. திகைப்பில் தலைமை!
Special Story: சிங்கம் கழுகு கூட்டணியா.. சிலாகிக்கும் NTK.. சீமான் விளக்கம்.. ரஜினி சந்திப்பு ஏன்?
ரஜினியை சீமான் சந்தித்து விட்டு வந்த மறு நாளே.. கோவை வடக்கு நாதக நிர்வாகிகள் கூண்டோடு விலகல்!
Kooran movie.. நாம எத்தனை வழக்கு போடறோம்.. ஒரு நாய் நம்ம மேல கேஸ் போட்டா எப்படி இருக்கும்!
Govt Holidays 2025: ஏப்ரல் 14ம் தேதி தமிழ்ப் புத்தாண்டு விடுமுறை.. எந்த மாதத்தில் அதிக லீவு?
{{comments.comment}}