17 வயது சிறுவனை.. விரட்டி விரட்டி வெட்டிக் கொன்ற கும்பல்.. 2 பேர் கைது.. !

Nov 15, 2023,12:59 PM IST

சென்னை: பட்டப்பகலில் 17 வயது சிறுவன் ஓட ஓட விரட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரியை சேர்ந்த அந்த சிறுவன், தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தான். சிறுவன் வீட்டில் இருக்கும் நேரம் பார்த்து இரண்டு பேர் சிறுவனை கொல்ல முயற்சித்துள்ளனர். அங்கிருந்து தப்பித்து அவன் ஓடியுள்ளான். ஆனாலும் விடாத அந்தக் கும்பல், ஓட  ஓட விரட்டி வெட்டி கொலை செய்துள்ளனர்.


ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த சிறுவனை அருகில் இருந்தவர்கள் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். தீவிர சிகிச்சை அளித்த நிலையில், சிகிச்சை பலனின்றி  சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான். 




சம்பவம் அறிந்த போலீசார் விரைந்து வந்து விசாரித்து வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.  இந்த கொலை தொடர்பாக தனசேகர், மற்றும் வினோத் ஆகிய இருவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.


இந்த கொலைக்கு என்ன காரணம், சிறுவனை ஏன் கொன்றனர், பின்புலம் எதுவும் இருக்கிறதா? என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிறுவன் என்றும் பாராமல் கொடூரமாக கொலை செய்யத் துணிந்தது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

நீட் விவகாரத்தில் ஏப்ரல் 9ல்.. சட்டமன்ற அனைத்து கட்சி ஆலோசனை கூட்டம்.. முதல்வர் மு.க ஸ்டாலின்

news

நாளும் நல்லதுசெய்யும் முதலமைச்சர் இந்த இரண்டு செயல்களாலும் இன்னும் இன்னும் உயர்கிறார்: வைரமுத்து

news

வந்தோம் போனோம் என்று இருக்க மாட்டோம்.. இஸ்லாமியர்களுக்கு உறுதுணையாக இருப்போம் - தவெக

news

எஸ்ஐ பணியில் சேர ஆசையா?.. தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் வெளியிட்ட சூப்பர் அப்டேட்!

news

சமயபுரம் மாரியம்மன் பச்சை பட்டினி விரதம்.. அம்மனே பக்தர்களுக்காக விரதம் இருக்கும் அதிசயம்!

news

தங்கம் விலை நேற்று புதிய உச்சம்...இன்று சவரனுக்கு ரூ.1,280 குறைவு... அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்!

news

தமிழ்நாட்டில் இன்றும் .. 17 மாவட்டங்களில்‌.. கன மழைக்கு வாய்ப்பு.. சென்னை வானிலை ஆய்வு மையம்!

news

உங்கள் வாழ்வில் இருந்து ஒருவரை நீக்கும்போது.. அதன் மதிப்பை உடனடியாக அறிய மாட்டீர்கள்.. செல்வராகவன்!

news

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் ஏப்ரல் 04, 2025...யாருக்கு என்ன பலன் காத்திருக்கு?

அதிகம் பார்க்கும் செய்திகள்