சென்னை: தமிழக வெற்றிக் கழக கட்சியின் முதல் பொதுக்குழு கூட்டம் இன்று தவெக தலைவர் விஜய் தலைமையில் நடைபெற்றது. இந்த பொதுக்குழு கூட்டத்தில் 17 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
தமிழக வெற்றிக்கழகம் என்னும் கட்சியை தொடங்கினார் நடிகர் விஜய். தவெகவின் ஓர் ஆண்டு காலம் நிறைவு விழா சமீபத்தில் தான் நடந்து முடிந்தது. அதற்கு முன்னர் தவெக கட்சியின் முதல் மாநாடு மிக பிரமாண்டமாக விக்கிரவாண்டி, வி.சலையில் நடைபெற்றது. இந்நிலையில், இன்று சென்னை திருவான்மியூரில் உள்ள ராமசந்திரா கன்வென்ஷன் சென்டரில் தவெக முதல் பொதுக்குழு கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் 17 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தவெக பொதுக்குழுவின் 17 தீர்மானங்கள்:
1. இஸ்லாமியர்களின் உரிமைகளைப் பறிக்கும் வக்ஃபு சட்டத் திருத்த மசோதாவை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும்.
2. மீனவர் போராட்டத்திற்கு ஆதரவு மற்றும் அவர்களின் பிரச்சனைகளுக்கு நிரந்தரத் தீர்வு எட்டப்பட வேண்டும்.
3. பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைக்க கூடாது.
4. இரு மொழிக் கொள்கையில் உறுதி.
5. நாடாளுமன்றத் தொகுதி மறுசீரமைப்பு தேவையில்லை.
6. மாநில அரசுகளுக்கு அதிகாரங்கள் பகிர்ந்து அளிக்கப்பட வேண்டும்.
7. பாலியல் வன்கொடுமை வழக்குகளை விசாரிக்க சிறப்பு விரைவு நீதிமன்றங்கள் தேவை.
8. அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களை நம்ப வைத்து ஏமாற்ற வேண்டாம்.
9. சட்ட ஒழுங்கு சீர்கேட்டுக்கு காரணமான திமுக அரசு கண்டனம்.
10. டாஸ்மாக் ரூ.1000 கோடி முறைகேடு விவகாரத்தில் உரிய விசாரணை நடத்த வேண்டும்.
11. சமூகநீதியை நிலை நிறுத்த, சாதிவாரி கணக்கெடுப்புக்கான ஆய்வு நடத்த வேண்டும்.
12. இலங்கைத் தமிழர் பிரச்சினைக்குப் பொது வாக்கெடுப்பு ஒரே தேர்வு.
13. பன்னாட்டு அரங்குக்குத் தந்தை பெரியார் பெயரை சூட்டுக.
14. கொள்கைத் தலைவர்கள் வழியில் பயணிப்போம்.
15. தலைவருக்கே முழு அதிகாரம்.
16. கழகப் புதிய நிர்வாகிகளுக்கு வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்.
17. கழகத்திற்காக அயராது பாடுபட்டு மறைந்த கழகச் செயல் வீரர்களுக்கு இரங்கல்.
தோனி கடைசி ஓவர்களில் களம் இறங்குவது ஏன் தெரியுமா?.. பிளமிங் சொல்லும் காரணம் இதுதான்!
எட்டயபுரத்தில்.. கர்நாடக சங்கீத மேதை முத்துசுவாமி தீட்சிதரின்.. 250 வது ஜெயந்தி விழா கொண்டாட்டம்!
கிப்லி டிரெண்டில் கை கோர்த்தார் எடப்பாடி பழனிச்சாமி.. அசத்தல் புகைப்படங்களை ஷேர் செய்து மகிழ்ச்சி!
புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை... சவரன் 67,000த்தை கடந்தது!
ஈகைத் திருநாளாம் ரமலான் பண்டிகையை முன்னிட்டு.. இஸ்லாமிய மக்களுக்கு தலைவர்கள் வாழ்த்து..!
Attn passengers: ஏப்ரல் 1 முதல் 30 வரை.. தென்காசி டூ செங்கோட்டை இடையே பயணிகள் ரயில் சேவை ரத்து..!
ரமலான்.. இஸ்லாமியர்களின் பெரு நாள், புனித நாள்.. சமூக நல்லிணக்கத்தின் திருநாள்!
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் மார்ச் 31, 2025...யாருக்கு என்ன பலன் காத்திருக்கு?
விடாமல் துரத்திய ஜடேஜா, தோனி.. கடைசி வரை போராடித் தோற்றது சென்னை சூப்பர் கிங்ஸ்
{{comments.comment}}