எச்ஐவி ரத்தத்தால் வந்த ஆபத்து.. உ.பி.யில் விபரீதம்.. 14 சிறார்களுக்கு பாதிப்பு!

Oct 25, 2023,02:09 PM IST

லக்னோ: உத்தரபிரதேசத்தில் முறையாக பரிசோதிக்காத ரத்தம் செலுத்தப்பட்டதால் 14 சிறுவர்களுக்கு எச்ஐவி தொற்று ஏற்பட்டுள்ளது. மருத்துவர்களின் அஜாக்கிரதை தான் இதற்கு காரணம் என்று கூறப்பட்டுள்ளது. 


உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் அரசினர் லாலா லஜ்பத் ராய் மருத்துவமனை உள்ளது. அங்கு தற்போது 180க்கும் மேற்பட்ட சிறுவர்கள் வைரஸ் பாதிப்புக்குள்ளாகி சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சிறுவர்களுக்கு ரத்தம் குறைவாக இருந்ததினால் (தலசீமியா) மருத்துவமனையில் ரத்தம் ஏற்றப்பட்டது. 




அப்போது பரிசோதிக்கப்படாத நிலையில் இருந்த ரத்தத்தை சிறுவர்களுக்கு ஏற்றியதால், ரத்தம் ஏற்றப்பட்ட 14 சிறுவர்களுக்கு எச்ஐவி, ஹெபாடிடிஸ் பி, சி உள்ளிட்ட  நோய்த்தொற்று பரவியுள்ளது. இதனை பரிசோதனையில் உறுதி செய்துள்ளனர் மருத்துவர்கள். 


இந்த சம்பவம்  அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு மருத்துவர்கள் தான் காரணம் என்று பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். மருத்துவர்கள் தான் பொறுப்பேற்க வேண்டும் என்றும் பொதுமக்கள் குமுறல் வெளியிட்டுள்ளனர்.


கான்பூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த சம்பவம் தொடர்பாக போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சமீபத்திய செய்திகள்

news

TVK Flag: 5 வருடத்திற்கு பட்டொளி வீசிப் பறக்கப் போகும்.. விக்கிரவாண்டியில் ஏற்றப்படும் தவெக கொடி!

news

எங்களுக்கு டைமெல்லாம் கிடையாது.. உணர்வுப்பூர்வமா வேலை பண்றோம்.. தவெக நிர்வாகிகள் அசத்தல்!

news

ஆரம்பமே அமர்க்களமா இருக்கே.. விஜய் கட்சியின் கட் அவுட்கள் ஒரு நல்ல தொடக்கம்.. செல்வப்பெருந்தகை

news

வி. சாலை எல்லையில்.. இரு கைகளையும் விரித்தபடி.. இதய வாசல் திறந்து வைத்து காத்திருப்பேன்.. விஜய்

news

Sprituality: வீட்டில் செல்வம் சேர.. விளக்கேற்றி வழிபடும்போது.. தவறாமல் இந்த மந்திரத்தை சொல்லுங்க!

news

Gold Rate: வியாழக்கிழமை குறைந்திருந்த தங்கம் இன்று மீண்டும் உயர்ந்தது... எவ்வளவு தெரியுமா?

news

Deepavali Special Story: இப்பெல்லாம் யாருங்க துணி எடுத்து தைக்கிறாங்க.. நலிவடையும் சிறு டெய்லர்கள்!

news

தீவிர புயலாகவே கரையைக் கடந்தது.. டானா.. தமிழ்நாட்டிலும் ஒரு சில இடங்களில்.. இன்று மழைக்கு வாய்ப்பு!

news

அக்டோபர் 25 - இன்றைய நல்ல நேரம், செய்ய வேண்டிய வழிபாடு

அதிகம் பார்க்கும் செய்திகள்