அதிமுகவை உடைக்க ஆரம்பிக்கிறதா பாஜக?.. 14 மாஜி எம்எல்ஏக்கள் அதிரடியாக பாஜகவில் இணைந்தனர்!

Feb 07, 2024,06:23 PM IST

டெல்லி: அதிமுகவைச் சேர்ந்த 14 முன்னாள் எம்எல்ஏக்கள் உள்பட 18 பேர் இன்று டெல்லி பாஜக தலைமையகத்தில் நடந்த நிகழ்ச்சியில் அக்கட்சியில் தங்களை இணைத்துக் கொண்டனர். இதன் மூலம் அதிமுக கோட்டைக்குள், பாஜக ஓட்டையைப் போட ஆரம்பித்துள்ளதா என்ற பரபரப்பு கிளம்பியுள்ளது.


அதிமுக பாஜக கூட்டணியில் மிகப்பெரிய விரிசல் ஏற்பட்டு இருவரும் ஆளுக்கு ஒரு பக்கம்உள்ள திரும்பி நிற்கின்றனர்.  இந்தக் கூட்டணியை மீண்டும் இணைக்க ஒரு முயற்சி நடந்து வருகிறது.  ஆனால் அதற்குப் பலன் கிடைக்குமா என்று தெரியவில்லை.


கதவுகளைத் திறந்து வைத்திருக்கிறோம் என்று அமித்ஷா பேட்டி கொடுத்தால், உடனே அவங்க வேண்டுமானால் திறந்து வைத்துக் கொள்ளட்டும், நாங்க அடைச்சுட்டோம் என்று டி. ஜெயக்குமார் அதிரடியாக பதிலளிக்கிறார்.


இந்த நிலையில் டெல்லியில் இன்று ஒரு அதிரடி நிகழ்வு நடந்துள்ளது. இது அதிமுகவைக் குறி வைத்து நடந்திருப்பதால், பாஜக தனது வேலையைக் காட்ட ஆரம்பித்து விட்டதா என்ற பரபரப்பு கிளம்பியுள்ளது. டெல்லி பாஜக தலைமையகத்தில் மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் முன்னிலையில் 14 மாஜி அதிமுக எம்எல்ஏக்கள் உள்பட 18 பேர் பாஜகவில் இணைந்தனர்.




இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, கோவை தெற்கு எம்எல்ஏ வானதி சீனிவாசன், மத்திய இணை அமைச்சர் எல். முருகன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர். இன்று கட்சியில் இணைந்த முன்னாள் எம்எல்ஏக்கள், எம்பி ஆகியோர் நீண்ட காலத்துக்கு முன்பு மக்கள் பிரதிநிதிகளாக இருந்தவர்கள்.


பாஜகவில் இணைந்த முன்னாள் எம்எல்ஏக்கள் பட்டியல்:


சின்னசாமி

துரைசாமி

தங்கராசு 

சேலஞ்சர் துரை

கு வடிவேல்

கந்தசாமி

கோமதி சீனிவாசன்

எஸ்.எம்.வாசன்

முத்துக்கிருஷ்ணன்

பி.எஸ்.அருள்

என். ஆர்.ராஜேந்திரன்

குருநாதன்

வி.ஆர்.ஜெயராமன்

பாலசுப்ரமணியன்

சந்திரசேகர் 


முன்னாள் எம்பி:


எம்.வி.ரத்தினம்


அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் மக்கள் பிரதிநிதிகளை கட்சியில் இணைத்துள்ளதன் மூலம் அதிமுகவுக்கு ஒரு மெசேஜை பாஜக விடுத்துள்ளதாக பார்க்கப்படுகிறது. கூட்டணி அமைந்தால் கட்சி தப்பும், இல்லாவிட்டால் இதுபோல பலர் இழுக்கப்படுவார்கள் என்ற மெசேஜாக அது பார்க்கப்படுகிறது. 


பாஜக எந்த அளவுக்கு போகும், அதிமுக என்ன மாதிரி செய்து சேதத்திலிருந்து தப்பும் என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

சமீபத்திய செய்திகள்

news

சிஎஸ்கே பந்து வீச்சாளர்களை வச்சு செய்த ராஜஸ்தான் ராயல்ஸ்.. 182 ரன்கள் குவித்து அதிரடி!

news

ஷவ்வால் மாத பிறை தெரிந்தது.. தமிழ்நாட்டில் நாளை ரம்ஜான் பெரு விழா.. தலைமை காஜியார் அறிவிப்பு

news

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக "செஞ்சுரி" அடித்த அஸ்வின்.. 100வது போட்டியில் ஆடுகிறார்!

news

வெளுத்து வாங்கும் வெயில்.. 1 டூ 5ம் வகுப்புக்கு.. இறுதித் தேர்வுகளை 17ம் தேதியுடன் முடிக்க உத்தரவு!

news

பிரதமர் மோடியைச் சந்திக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி?.. 6ம் தேதி மதுரையில் சந்திப்பு என தகவல்!

news

எம்புரான் படத்தில் குஜராத் கலவரம் குறித்த காட்சி.. மன்னிப்பு கேட்டார் நடிகர் மோகன்லால்

news

கன்னியாகுமரி நகராட்சியானது.. மேலும் 6 நகராட்சிகளும் பிறந்தன.. வெளியானது அரசாணை.. !

news

தமிழக அரசுப் பள்ளிகளில்.. தமிழ் படித்தவர்களுக்கு வேலை இல்லையா?.. டாக்டர் ராமதாஸ் ஆதங்கம்!

news

பிறை தெரிந்தது.. சவூதி அரேபியா, வளைகுடா நாடுகளில் ரம்ஜான் கொண்டாட்டம்.. இந்தியாவில் நாளை!

அதிகம் பார்க்கும் செய்திகள்