ஆடல் கலையே தேவன் தந்தது.. சீனாவில் பரதநாட்டியம்.. அசத்தலான சீன மாணவியின் அரங்கேற்றம்!

Aug 13, 2024,06:30 PM IST

பீஜிங்:   சீனாவைச் சேர்ந்த லீ முசி என்ற 13 வயது பள்ளி மாணவி சீனாவில் பரத நாட்டியம் அரங்கேற்றம் செய்து வரலாறு படைத்து அசத்தியுள்ளார்.


பரதநாட்டியம் தமிழகத்தை சேர்ந்த ஒரு பாரம்பரிய நடனமாகும். இந்த நடனம் தமிழ்நாட்டில் தோன்றி, தென்னிந்தியா மட்டுமல்லாமல், இந்தியா முழுவதும் பரவியுள்ளது. உலகம் முழுவதும் பல நாடுகளிலும் பரதநாட்டியம் புகழ் பெற்றும் விளங்குகிறது. 2000 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழகத்தில் தோன்றியது பரதம்.




இந்தகைய சிறப்பு வாய்ந்த பரதநாட்டியத்தை சீனாவில் உள்ள குருவிடம் பயின்று, அங்கேயே அரங்கேற்றம் செய்த முதல் நபர் என்ற பெருமையினை பெற்றுள்ளார் லீ முசி. 13 வயதுடைய சீனாவை பூர்விகமாக கொண்ட லீ முசி பரதநாட்டிய கலையை கற்று முறையாக அரங்கேற்றம் செய்து புதிய வரலாற்றை நடைத்துள்ளார்.


சமீபத்தில் சீனாவில் நடந்த இந்த அரங்கேற்ற நிகழ்வில் பிரபல பரதநாட்டிய நடன கலைஞர் லீலா சாம்சன் மற்றும் இந்திய பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளனர். இந்திய தூதர் பிரதீப் ராவத்தின் மனைவி ஸ்ருதி ராவத் சிறப்பு  விருந்தினராக கலந்து கொண்டார். சுமார் 2 மணி நேரம் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்காக, சென்னையில் இருந்து விமானம் மூலம் இசைக்கலைஞர்கள் வரவழைக்கப்பட்டிருந்தனர். வரலாற்று சிறப்பு மிக்க இந்த நடன விழாவை ஏராளமான சீன மக்கள் கண்டு ரசித்துள்ளனர்.


13 வயதுடைய  லீ முசி சுமார் 10 ஆண்டு காலமாக பரத கலையை கற்று பயிற்சி பெற்றுள்ளார். லீ முசியின் அரங்கேற்றம் குறித்து அவரது ஆசிரியர் லீலா சாம்சன் கூறுகையில், "தென்னிந்தியாவைச் சேர்ந்த பாரம்பரிய நடனமான பரதநாட்டியம், ஒரு சீன மாணவியால் சீன ஆசிரியர் கொண்டு சீனாவில்  அரங்கேற்றம் செய்யப்படுவது இதுவே முதல் முறை. எனவே, இது பரதநாட்டியத்தில் ஒரு மைல்கல் மட்டுமல்லாது ஒரு வரலாற்று தருணமும் ஆகும். லீ முசியின் பரதநாட்டிய அரங்கேற்றமானது எங்களுக்கு ஒரு திருவிழாவைப் போன்றது" என்றார்.


இது குறித்து லீ முசி கூறுகையில், "பரதநாட்டியம் ஒரு அழகான நடனக் கலை மட்டுமல்லாமல், இந்திய கலாசாரத்தின் உருவகமாகவும் இருக்கிறது. பரதநாட்டிய நடனத்தின் அழகான அசைவுகள் எனக்கு மிகவும் பிடிக்கும். இந்திய கலாசாரத்தில் நான் மிகவும் ஆர்வமாக உள்ளேன். பரதநாட்டியமானது ஏற்கனவே எனது தினசரி வாழ்வின் செயல்பாடுகளில் ஓர் அங்கமாக மாறிவிட்டது" என்றார். இந்த மாத இறுதியில் சென்னையில் லீ முசி நடனமாட உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்


சமீபத்திய செய்திகள்

news

தோனி அதிரடி.. கடைசி நேர போராட்டம் வீண்.. மீண்டும் ஒரு தோல்வி.. ஏமாற்றத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ்

news

தமிழக அரசு நிறைவேற்றிய மசோதாக்களை ஜனாதிபதிக்கு அனுப்பியது சட்டவிரோதம்.. உச்சநீதிமன்றம்

news

உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில்.. இனி முதல்வர் ஸ்டாலினே பல்கலைக்கழக வேந்தர்.. பி.வில்சன்

news

உச்சநீதிமன்றத் தீர்ப்பு வரவேற்கத்தக்கது .. துணைவேந்தர்களை உடனே நியமிக்க வேண்டும்.. டாக்டர் ராமதாஸ்

news

Tamil Nadu leads.. பேரறிவாளவன் வழக்குக்குப் பின்.. சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்திய உச்சநீதிமன்றம்!

news

ஆளுநருக்கு எதிரான.. உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வரலாற்று சிறப்புமிக்கது‌.. முதல்வர் ஸ்டாலின் மகிழ்ச்சி!

news

Summer Food tips.. அடிக்கும் அதிரடி வெயிலுக்கு.. கருப்பு கவுனி அரிசி மோர் கூழ் சூப்பரப்பு!

news

ஏப்ரல் 10.. சம்பவம் காத்திருக்கு.. குட் பேட் அக்லி படத்திற்கு.. யுஏ சான்றிதழ்.. ரசிகர்கள் வெயிட்டிங்

news

ஆளுநர் ஆர்.என். ரவியை உடனடியாகப் பதவி நீக்கம் செய்ய வேண்டும்: திருமாவமவன்!

அதிகம் பார்க்கும் செய்திகள்