"12 வயசுதான்".. 2 முதியவர்களுக்கு "ஸ்கெட்ச்" போட்டு.. பதை பதைக்க வைத்த காஸியாபாத் Crime!

Dec 31, 2022,08:54 PM IST

காஸியாபாத்: உத்தரப் பிரதேச மாநிலம் காஸியாபாத்தில் 12 வயது சிறுவன் ஒருவன், முதிய தம்பதியை திட்டமிட்டுக் கொன்று, கொள்ளையடித்த செயல்  அனைவரையும் அதிர வைத்துள்ளது.

12 வயது பையனுக்கு இப்படி ஒரு கிரிமில் புத்தியா என்று பலரும் அதிர்ந்து போயுள்ளனர். காஸியாபாத்தில் நடந்த இந்த சம்பவத்தால் உத்தரப் பிரதேசமே விக்கித்துப் போயுள்ளது.


காஸியாபாத்தில் வசித்து வந்தவர் 60 வயதான இப்ராகிம். இவர் பழைய இரும்புப் பொருட்களை வாங்கி விற்கும் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்தார். இவரும்,  இவரது மனைவி ஹஸ்ராவும்  நவம்பர் 22ம் தேதி இவர்களது வீட்டு வளாகத்தில் பிணமாக கண்டெடுக்கப்பட்டனர். இருவரும் டாய்லெட்டுக்கு அருகே வீட்டுக்கு வெளியே  இவர்களது உடல்கள் கிடந்தன. கழுத்தில் துணியைச் சுற்றி இறுக்கி இருவரையும் கொலை செய்திருப்பது தெரிய வந்தது.

விசாரணையில் இறங்கிய போலீஸாருக்கு முதலில் சரியான துப்பு கிடைக்கவில்லை. ஆனால் தீவிர விசாரணையில் அவர்களுக்குப் பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. இந்த துணிகர கொலையில் ஈடுபட்டது வெறும் 12 வயதேயான சிறுவன் என்று தெரியவந்து மலைத்துப் போய்விட்டனர். இந்த சிறுவன், கொலை செய்யப்பட்ட  தம்பதிக்கு ஏற்கனவே தெரிந்த பையன்தான். 

இப்ராகிடமும் நிறைய பணம், நகை இருப்பதை  அறிந்து அந்த சிறுவன் அதை கொள்ளையடிக்கத் திட்டமிட்டுள்ளான். இதற்காக தன்னைப் போன்ற சிலரை கூட்டு சேர்த்துக் கொண்டு கொள்ளையடிக்க முயன்றுள்ளான். அது வெற்றி பெறவில்லை. இதையடுத்து அவர்களைக் கொலை செய்ய அந்த சிறுவன் முடிவு செய்துள்ளான்.  இதுதொடர்பாக மஞ்ஜேஷ், சிவம் , சந்தீப் ஆகியோரை அணுகியுள்ளான். அவர்களும் ஒப்புக் கொள்ளவே, திட்டமிட்டு கொலைசெய்துள்ளனர். கொலை செய்த பின்னர் வீட்டில் இருந்த பணம், மொபைல் போன், நகை ஆகியவற்றைத் திருடியுள்ளனர்.

தற்போது அந்த சிறுவன், மஞ்ஜேஷ், சிவம் ஆகியோரைப் போலீஸார் கைது செய்துள்ளனர். சந்தீப் இன்னும் சிக்கவில்லை. 


சமீபத்திய செய்திகள்

news

Rain alert: நவம்பர் 26, 27, 28.. தமிழ்நாட்டில் மிக கன மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் தகவல்

news

Political Talk.. எம்ஜிஆர் ஜெயலலிதா எழுதிய வரலாற்றை.. வலுக்கட்டாயமாக அழிக்கிறதா அதிமுக?

news

மாநாட்டில் விஜய் கலக்கிவிட்டார்.. இப்படி பேசுவார் என நினைச்சுக் கூட பார்க்கலை.. எஸ்.ஏ.சந்திரசேகர்

news

TVK.. மாவட்டச் செயலாளர்களாக யாரைப் போடலாம்.. தீவிரமாக களம் குதித்த விஜய்யின் தவெக!

news

AIADMK.. கள ஆய்வுக் கூட்டங்களில் தொடர்ந்து மோதல்.. வெடிக்கும் தொண்டர்கள்.. திகைப்பில் தலைமை!

news

Special Story: சிங்கம் கழுகு கூட்டணியா.. சிலாகிக்கும் NTK.. சீமான் விளக்கம்.. ரஜினி சந்திப்பு ஏன்?

news

ரஜினியை சீமான் சந்தித்து விட்டு வந்த மறு நாளே.. கோவை வடக்கு நாதக நிர்வாகிகள் கூண்டோடு விலகல்!

news

Kooran movie.. நாம எத்தனை வழக்கு போடறோம்.. ஒரு நாய் நம்ம மேல கேஸ் போட்டா எப்படி இருக்கும்!

news

Govt Holidays 2025: ஏப்ரல் 14ம் தேதி தமிழ்ப் புத்தாண்டு விடுமுறை.. எந்த மாதத்தில் அதிக லீவு?

அதிகம் பார்க்கும் செய்திகள்