டெல்லி: இந்தியா முழுவதும் நாளை 75வது குடியரசு தின விழா சிறப்பாக கொண்டாடப்படும் நிலையில், 1,132 பேருக்கு குடியரசுத் தலைவர் பதக்கங்கள் வழங்க உள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
இதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 24 பேருக்கும் குடியரசுத் தலைவர் பதக்கங்கள் வழங்கப்பட உள்ளது.
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை நடைமுறைப்படுத்திய நாளான ஜனவரி 26 ஆம் தேதியை குடியரசு தின விழாவாக கொண்டாடுகிறோம். இந்த குடியரசு தின விழா, இந்தியா முழுவதும் பெருமையுடனும், அரசியலமைப்புச் சட்டத்தை மதிக்கும் நாளாகவும் நாம் கொண்டாடுகிறோம்.
நாடு முழுவதும் உள்ள பள்ளி, கல்லூரிகள், அலுவலகங்கள், கட்சி அலுவலகங்கள், பொது இடங்கள் என அனைத்து இடங்களிலும் தேசிய கொடியேற்றுவது வழக்கம். அப்போது இந்திய சுதந்திரப் போராட்டத்தின் கலாச்சார நிகழ்வுகளை நினைவு கூறும் வகையில் பல்வேறு முக்கியமான கலை நிகழ்ச்சிகள் மற்றும் அணி வகுப்புகள் நடைபெறும்.
நாட்டின் தலைநகரான டில்லியில் உள்ள ராஜ்பாத்தில் இந்திய குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு தேசியக்கொடி ஏற்றி வைப்பார். பின்னர் பிரமாண்ட அணிவகுப்பும் நடைபெறும். பிரதமர் நரேந்திர மோடி, அமைச்சர்கள், பல்வேறு கட்சிகளின் தலைவர்கள், எம்பிக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு விழாவை சிறப்பிப்பர். இது மட்டுமல்லாமல் இந்திய அளவில் சிறப்பாக பணியாற்றிய காவல்துறை, தீயணைப்புத்துறை, ஊர்க்காவல் படை, உள்ளிட்டோருக்கு குடியரசுத் தலைவர் பதக்கங்கள் வழங்கப்படும். இதில் காவல் துறையின் நன்மதிப்பு செயல்பாடுகள் மற்றும் சாதனைகளின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவர்.
75வது குடியரசு தின விழாவின்போது, பல்வேறு பணிகளில் சிறந்து விளங்கும் 1132 பேருக்கு குடியரசு தலைவர் பதக்கங்கள் வழங்கப்படவுள்ளது. இதில் தமிழ்நாட்டைச் சேர்ந்தோர் 24 பேர் ஆவர்.
ஒவ்வொரு வருடமும் குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கு பெற வெளிநாட்டு தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்படும். இதன் அடிப்படையில் இந்த வருடம் பிரான்ஸ் அதிபருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இதனை ஏற்ற பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரன் குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்க உள்ளார். அந்நாட்டு ராணுவ குழுவும் குடியரசு தின விழா அணிவகுப்பில் பங்கேற்க உள்ளது.
எம்புரான் பட இயக்குனர்.. நடிகர் பிரித்விராஜுக்கு வருமான வரித்துறை அதிரடி நோட்டீஸ்
பாம்பன் பாலத்தை திறந்து வைக்க நாளை வருகிறார்.. பிரதமர் மோடி..பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்..!
தர்பூசணி விவசாயிகளுக்கு அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் - நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான்!
இலங்கையில் பிரதமர் மோடி.. ஜனாதிபதி மாளிகையில் அணி வகுப்பு மரியாதையுடன் வரவேற்பு..!
நீட் தேர்வு.. மாணவ மாணவியரின் தற்கொலைகளுக்கு.. தமிழக அரசு என்ன செய்யப் போகிறது: டாக்டர் ராமதாஸ்
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் ஏப்ரல் 05, 2025...யாருக்கு என்ன பலன் காத்திருக்கு?
தொடர் குறைவில் தங்கம் விலை... மகிழ்ச்சியில் வாடிக்கையாளர்கள்!
அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டார்.. சென்னை மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை அதிகாரி சதீஷ்குமார்!
தமிழ்நாட்டில்.. நேற்று போலவே இன்றும் மழை தொடரும்.. வெதர்மேன் தகவல்!
{{comments.comment}}