இடுப்பில் கட்டிய துண்டுடன்.. சித்தி மீது புகார் கூறிய சிறுவன்.. ஆந்திராவில் பரபரப்பு!

May 16, 2023,09:35 AM IST
எலூரு, ஆந்திரப் பிரதேசம்: ஆந்திர மாநிலத்தில் ஒரு 11 வயது சிறுவன் போலீஸில் கொடுத்த சாதாரண புகாரை போலீஸார் விசாரிக்கப் போனபோது, அவனது சித்தி செய்த கொடுமைகள் வெளிச்சத்திற்கு வந்து போலீஸார் அதிர்ச்சி அடைந்தனர்.

எலூரு பகுதியைச் சேர்ந்தவர் 38 வயதான லட்சுமி. இவர் கோத்தபேட்டா என்ற இடத்தில் வசித்து வருகிறார். சமீபத்தில் இவர் மீது எலூரு காவல் நிலையத்தில் 11வயதான சிறுவன் ஒருவன் புகார் கொடுத்தான். என்ன காமெடி என்றால் அந்த சிறுவன் சட்டை போடமல், இடுப்பில் ஒரு துண்டை மட்டும் சுற்றியபடி வந்திருந்தான். அவனைப் பார்த்த போலீஸார் என்னடா இது என்று அவனை கூப்பிட்டு விசாரித்தனர். அப்போது சிறுவன் அவர்களிடம், லட்சுமி எனது வளர்ப்புத் தாய். எனது நண்பனின் பிறந்த நாளுக்கு நான் போக வேண்டும். இதற்காக வெள்ளைச் சட்டை கேட்டேன். சித்தி கொடுக்க மறுக்கிறார். அதனால்தான் துண்டைக் கட்டியபடி வந்தேன் என்று கூறியுள்ளான்.



புகாரைக் கேட்ட போலீஸார் சிரித்துக் கொண்டனர். இதெல்லாம் ஒரு பிரச்சினையாடா என்று கேட்ட அவர்கள், அவனது  சித்தியை காவல் நிலையத்துக்கு வரவழைத்தனர். அப்போதுதான் தனது சித்தி தனக்கு செய்த  கொடுமைகளை ஒவ்வொன்றாக பட்டியலிட ஆரம்பித்தான் சிறுவன்.

அதாவது சிறுவனின் தந்தை பெயர் மல்லிகார்ஜூன ராவ். இவர் ஒரு சாதாரண கூலித் தொழிலாளி  ஆவார். சரியான வருமானம் இல்லை. லட்சுமி, மல்லிகார்ஜுனாவின் 2வது மனைவி ஆவார். சிறுவனின் தாயார் இறந்து விட்டார். மல்லிகார்ஜூனா வேலைக்குப் போன பின்னர் சிறுவனை சித்திரவதை செய்து வந்துள்ளார் லட்சுமி. இரும்புக் கம்பியை பழுக்கக் காய்ச்சி சூடு போடுவது, அடிப்பது என்று கொடுமை செய்து வந்துள்ளார்.

முன்பு இப்படித்தான் ஒருமுறை கடுமையாக அடித்ததில் காயமடைந்த சிறுவனை மருத்துவமனையில் சேர்த்துக் காப்பற்றினார்களாம். இதையெல்லாம் கேட்டு அதிர்ச்சி அடைந்த போலீஸார் லட்சுமியை கடுமையாக எச்சரித்தனர். இனிமேல்இது போல கொடுமைப்படுத்தக் கூடாது என்று எழுதி வாங்கிக் கொண்டு அனுப்பி வைத்தனர்.

சமீபத்திய செய்திகள்

news

மாநில உரிமைகளைப் பாதுகாப்பது குறித்து ஆராய ஜோசப் குரியன் தலைமையில் குழு.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

அதிமுக பொதுக்குழு கூட்டம் மே 2ல் நடைபெறும்:எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு!

news

நெல்லையில்.. சக மாணவரை வெட்டிய எட்டாம் வகுப்பு மாணவர்: தமிழகம் எங்கே போகிறது? டாக்டர். அன்புமணி

news

தமிழ்நாட்டில் இன்று ஒரு சில இடங்களில்..பலத்த காற்றுடன் மழைக்கு வாய்ப்பு..!

news

ஆங்கில வழி பாடநூல்களின் தலைப்புகள் எல்லாம் இந்தி: மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் கண்டனம்!

news

இந்தியில் வெளியாகியுள்ள 'ஜாட்' திரைப்படத்தைத் தடை செய்ய வேண்டும் - நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான்!

news

கோடை விடுமுறையை முன்னிட்டு.. தனியார் பேருந்துகளை வாடகைக்கு எடுத்து இயக்க எஸ்இடிசி முடிவு..!

news

சித்திரை திருவிழாவுக்கு வாருங்கள்.. அன்போடு அழைக்கும் மதுரை மீனாட்சி அம்மன் கோவில்!

news

பாமகவில் உட்கட்சி பூசல்கள் சரியாகி விட்டது.. கௌரவத் தலைவர் ஜி கே மணி தகவல்

அதிகம் பார்க்கும் செய்திகள்