போபால்: மத்திய பிரதேசத்தில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 11 பேர் பலியானார்கள். 60க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள ஹர்தா என்ற இடத்தில் உள்ள பட்டாசு ஆலையில் இன்று பிற்பகல் பெரும் தீவிபத்து ஏற்பட்டது. இதில் சிக்கி பட்டாசுகள் வெடித்துச் சிதறின. சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக பட்டாசு வெடித்து சிதறியது. அந்த இடமே போர்க்களம் போல காணப்பட்டது.
தீயணைப்புப் படையினர் விரைந்து வந்து தீயை அணைக்க கடுமையாக போராடினர். விபத்தில் சிக்கிய பலர் அங்கிருந்து மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்களில் பெரும்பாலானோரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக காவல் துறை தகவல்கள் தெரிவிக்கின்றன. தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து தீயை கட்டுக்குள் கொண்டு வரும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
உதவிக்கு தேசிய பேரிடர் மீட்புப் படையும் அழைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் ரிஷி கர்க் தெரிவித்தார். தீ விபத்தின் போது சுமார் 150 தொழிலாளர்கள் வளாகத்தில் இருந்ததாக தெரிகிறது. பட்டாசு ஆலை விபத்தில் சிக்கி உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா 4 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என அம்மாநில முதல்வர் மோகன் யாதவ் அறிவித்துள்ளார்.
பிரதமர் மோடி இரங்கல்
இந்த சம்பவம் குறித்து பிரதமர் நரேந்திர மோடியும் இரங்கல் தெரிவித்துள்ளார். விபத்தில் உயிர் இழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சமும், காயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும் வழங்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.
இந்த விபத்தின் போது தீ கொழுந்து விட்டு எரிந்ததில் அருகில் இருந்த வீடுகளுக்கும் தீ பரவி உள்ளது. இதனால் அந்தப்பகுதி முழுவதும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்ட வருகின்றனர்.
Red Alert: 3 மாவட்டங்களுக்கு நாளை, நாளை மறு நாள் 2.. ரெட் அலர்ட்.. மிக மிக கன மழை பெய்யும்!
Rain Alert: டெல்டா மாவட்டங்களில்.. 2 நாட்களுக்கு மிக கன மழைக்கு வாய்ப்பு.. தமிழ்நாடு வெதர்மேன்
பாமக நிறுவனர் டாக்டர் ராமதாசுக்கு வேற வேலை இல்லை.. முதல்வர் மு.க. ஸ்டாலின்
அல்லு அர்ஜூனின் புஷ்பா 2.. டிக்கெட் விற்பனையில் புதிய சாதனை.. அமெரிக்காவில் அதிரடி சேல்ஸ்
பிறந்த நாளின்போது.. பிளக்ஸ் பேனர்கள், பட்டாசுகளைத் தவிர்க்க வேண்டும்.. துணை முதல்வர் உதயநிதிஸ்டாலின்
ராமதாஸ் குறித்த பேச்சுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும்.. அன்புமணி ராமதாஸ்
Perth Test: 295 ரன்கள் வித்தியாசத்தில்.. ஆஸ்திரேலியாவை வச்சு செய்து.. இந்தியா அபார வெற்றி!
பெண்கள், பெண் குழந்தைகள் நலனுக்காக.. தனி இணையதளம் தேவை.. தவெக தலைவர் விஜய்
Immunity Drinks: லேசான தலைவலி காய்ச்சலுக்கெல்லாம் டாக்டரிடம் ஓடாதீங்க.. இதை குடிச்சுப் பாருங்க!
{{comments.comment}}