Deepavali on the way: நவம்பர் 9ஆம் தேதி முதல்.. 10,975 சிறப்பு பேருந்துகள்.. கிளம்பலாமா!

Oct 28, 2023,06:29 PM IST

சென்னை: தீபாவளித் திருநாளையொட்டி நவம்பர் 9ம் தேதி 10,975 சிறப்புப் பேருந்துகளை இயக்க தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது.


தமிழ்நாட்டில் தீபாவளி பண்டிகை வரும் நவம்பர் 12ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது.  இப்பண்டிகை ஐப்பசியில் வரும் அமாவாசை நாளில் கொண்டாடுகிறோம். அம்பாள் நரகாசுரனை வரம் செய்த நாளாக தீபாவளி பண்டிகை கொண்டாடுவதால் அன்று லட்சுமியை வழிபடும் தினமாகவும் உள்ளது.


இப்பண்டிகை வாழ்வில் இருளைப் போக்கி, ஒளியை கொடுக்கும் பண்டிகையாக  மகிழ்ச்சியை கொடுக்கிறது. அந்நாளில் வீடுகள் தோறும் தீபங்கள் ஏற்றப்பட்டு புத்தாடை உடுத்தி, பட்டாசு வெடித்து, ஒருவருக்கொருவர் இனிப்புகள் பரிமாறி மிகவும் சிறப்பாக தீபாவளி பண்டிகையை கொண்டாடி மகிழ்கிறோம். 




முன்பெல்லாம் சொந்த ஊர்களை விட்டு வெளியேறி வெளியூர்களில் வசித்து வந்தோர் குறைவாக இருந்தனர். ஆனால் இன்று காலம் மாறி விட்டது. சொந்த ஊர்களை விட்டு வெளியூர்களில்தான் பலரும் வசிக்கின்றனர்.. வேலை நிமித்தமாக இடம் பெயர்ந்தோர்தான் பெரும்பாலானவர்கள்.


தீபாவளி, பொங்கல் திருநாட்களில் குடும்பத்தோடு சொந்த ஊர்களுக்குச் சென்று பண்டிகைகளை இவர்கள் கொண்டாடுவது வழக்கம். இதனால் அந்த சமயத்தில், பஸ், ரயில், விமானம் என எல்லாவற்றிலும் கூட்டம் அலை மோதும். இந்த சமயத்தில் சிறப்புப் பேருந்துகள், ரயில்கள் இயக்கப்படும். அந்த வகையில் இந்த தீபாவளிக்கும் சிறப்புப் பேருந்துகளை இயக்க அரசு திட்டமிட்டுள்ளது. அதுதொடர்பான ஆலோசனைக் கூட்டம் இன்று  சென்னையில் போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் தலைமையில் நடந்தது. அக்கூட்டத்தின் முடிவில் வழக்கமான பேருந்துகளோடு (6300 பேருந்துகள்), கூடுதலாக 4675 சிறப்புப் பேருந்துகள் என மொத்தம் 10,975 சிறப்புப் பேருந்துகளை இயக்க முடிவு செய்யப்பட்டது.


நவம்பர் 9ம் தேதி முதல் இந்த சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும். இதுதவிர சொந்த ஊர்களுக்குச் சென்றோர் சென்னை திரும்புவதற்கு வசதியாக நவம்பர் 13ம் தேதியும் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும்.


சிறப்புப் பேருந்துகள் எங்கிருந்து செல்லும்


சென்னை மாதவரம் புதிய பேருந்து நிலையம், தாம்பரம் மெப்ஸ் பஸ் நிலையம், கோயம்பேடு பேருந்து நிலையம்  உள்ளிட்டவற்றிலிருந்து சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


சமீபத்திய செய்திகள்

news

Orange alert: தமிழ்நாட்டில் ஒரிரு இடங்களில் 26 மற்றும் 27 தேதிகளில் மிக கன மழை எச்சரிக்கை!

news

ஜாமின் கிடைத்ததைத் தொடர்ந்து.. புழல் சிறையிலிருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி

news

அமெரிக்கா கோர்ட் பிடிவாரண்ட்.. அதானியை உடனடியாக கைது செய்ய வேண்டும்.. ராகுல்காந்தி ஆவேசம்

news

விஜய் பங்கேற்கும்.. அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ள மாட்டார் திருமாவளவன்!

news

தனுஷ் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் விவாகரத்து வழக்கில் இறுதிக் கட்டம்.. 27ம் தேதி தீர்ப்பு வழங்கப்படுகிறது!

news

கடுப்பா இருக்கா பாஸ்.. வாங்க கடிக்கிறோம்.. கலகலன்னு சிரிங்க.. மைன்ட் free ஆகி.. face பிரெஷ்ஷாய்ரும்!

news

ஆசிரியை ரமணியின் குடும்பத்திற்கு ரூ. 5 லட்சம் உதவி.. தாயாரிடம் வழங்கினார் அமைச்சர் கோவி.செழியன்

news

Chennai Lakes.. நீர் இருப்பில் மாற்றம் இல்லை.. புதிய காற்றழுத்தத் தாழ்வுக்காக ஏரிகள் வெயிட்டிங்!

news

Rain forecast: 5 மாவட்டங்களில் இன்று மிக கன மழைக்கு வாய்ப்பு.. 7 மாவட்டங்களில் கன மழை!

அதிகம் பார்க்கும் செய்திகள்