"பாரத் அரிசி".. மத்திய அரசின் அடுத்த அதிரடித் திட்டம்.. ஒரு கிலோ அரிசி ஜஸ்ட் ரூ. 29தான்!

Feb 03, 2024,01:56 PM IST

சென்னை: அரிசி விலை அதிகரித்துக்கொண்டே வருவதால், ஏழை மக்களின் நலனுக்காக மத்திய அரசு ரூ.29க்கு "பாரத் அரிசி" வழங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.


விலைவாசி உயர்வால் சாதாரண மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். சாதாரண  மக்களின் சுமையை குறைக்கும் நோக்கத்தில் மத்திய அரசு பாரத் அரிசி என்ற பெயரில் சில்லறை விலைக்கு கிலோ ரூ.29க்கு அரிசி வழங்கும் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்த திட்டத்தின் மூலம் சாராண மக்கள் பயன்பெறுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.




இந்த அரிசி அடுத்த வாரம் முதல் விற்பனைக்கு வர உள்ளது. ஆன்லைன் மூலமாகவும் அந்த அரிசி விற்பனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 5 மற்றும் 10 கிலோ பேக்குகளில் இந்த அரிசி வழங்கப்படும். ஏற்கனவே பாரத் ஆட்டா கிலோ ரூ.27.50க்கும் பாரத் தால் கிலோ ரூ.60க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த வரிசையில், தற்போது பாரத் அரிசியும் விற்பனைக்கு வந்துள்ளது.



இது தொடர்பாக பத்திரிகையாளர் சந்திப்பில் மத்திய உணவுத்துறை செயலர் சஞ்சீவ் சோப்ரா கூறுகையில்,  விலை ஏற்றத்தை கட்டுப்படுத்தும் நோக்கில் பல்வேறு அரிசி ரகங்கள் ஏற்றுமதிக்கு மத்திய அரசு கடந்த ஓராண்டாக கட்டுப்பாடுகளை விதித்தது. அரிசி விலை சில்லறை மற்றும் மொத்த விற்பனை சந்தைகளில் 15 சதவீதம் அளவுக்கு அதிகரித்துள்ளது. விலை உயர்வால் சாதாரண மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த விலை ஏற்றத்தை கட்டுப்படுத்தும் நோக்கில் பாரத் அரிசி என்ற பெயரில் மானிய விலையில் சில்லறை விற்பனை சந்தைகளில் ரூ. 29க்கு ஒரு கிலோ அரிசி விற்பனை செய்ய மத்திய அரசு முடிவு செய்து இந்த திட்டத்தை அறிவித்துள்ளது.


மேலும். இணைய வழியில் இணைய வணிக வலைத்தளங்கள் மூலம் பாரத் அரிசி விற்பனை செய்யப்படும். அடுத்த வாரம் முதல் இந்த அரிசி சந்தைகளில் கிடைக்கும். ஐந்து கிலோ மற்றும் 10 கிலோ பைகளாக இவை விற்பனை செய்யப்படும். பாரத் அரிசி விற்பனைக்காக முதல் கட்டமாக 5 லட்சம் டன் அரிசியை மத்திய அரசு ஒதுக்க உள்ளது என்று கூறியுள்ளார்.

சமீபத்திய செய்திகள்

news

ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது.. கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

மகாத்மா காந்தி பிறந்த மாதத்தில்.. புதிய மதுபானக் கொள்கையை அறிமுகப்படுத்தும் ஆந்திர அரசு!

news

ஐபிஎல் 2025 வருது வருது.. நவம்பரில் வீரர்கள் ஏலம்.. துபாயா, தோஹாவா இல்லாட்டி அபுதாபியா?

news

பெண் உதவியாளரை நாசப்படுத்தியதாக.. அரபி குத்து, காவாலா பாடல் புகழ் ஜானி மாஸ்டர் கைது!

news

சபாஷ் பாஸ்கர்.. மாற்றுத் திறனாளி பயணியிடம் காட்டிய கனிவு.. வேற லெவல் மாற்றத்தில் சென்னை எம்டிசி!

news

வங்கதேசத்துடன் கிரிக்கெட் போட்டி கூடாது.. சென்னையில் போராட்டத்தில் குதித்த இந்து மக்கள் கட்சி

news

என்ன தலைவா.. கடைசியில நீயும் அரசியல்வாதி ஆகிட்டியே?.. விஜய் போட்ட டிவீட்.. கதறும் கட்சிகள்!

news

அதீத பணிச்சுமை.. வீடு திரும்பிய இளம் பெண்.. படுக்கையில் சரிந்து பரிதாப மரணம்!

news

நவராத்திரி விற்பனை கண்காட்சி.. சென்னையில்.. செப்டம்பர் 21 முதல் கோலாகல தொடக்கம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்