டெல்லி: மத்திய பட்ஜெட் 2024-25 இன்று தாக்கல் செய்யப்படுகிறது. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் லோக்சபாவில் பட்ஜெட்டைத் தாக்கல் செய்யவுள்ளார். மேலும் செய்திகளுக்கு நேரலையில் இணைந்திருங்கள்.
புதிய வருமான வரி விகிதங்கள்
வருட வருமானம் ரூ. 3 லட்சம் வரை - வரி இல்லை
ரூ. 3 முதல் 7 லட்சம் - 5%
ரூ. 7 முதல் 10 லட்சம் - 10%
ரூ. 10 முதல் ரூ. 12 லட்சம் - 15%
ரூ. 12 முதல் ரூ. 15 லட்சம் - 20%
ரூ. 15 லட்சத்திற்கு மேல் - 30%
இறால் உணவு, மீன் உணவு மீதான இறக்குமதி வரி ஐந்து சதவீதமாக குறைக்கப்படும். இதனால் இவற்றின் விலை குறையும். இணைய வழி வணிக நிறுவனங்களுக்கான TDS 0.1% குறைக்கப்படும் என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.
தங்கம், வெள்ளி மீதான சுங்கவரி 6 சதவீதமாக குறைக்கப்படும். அதேபோல் பிளாட்டின மீதானம் சுங்கவரி 6.5 சதவீதமாக குறைக்கப்படும். சுங்க வரி குறைக்கப்படுவதால் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை குறையும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
புற்றுநோயாளிகளுக்கான மேலும் மூன்று மருந்துகளுக்கு சுங்க வரியில் இருந்து முற்றிலும் விலக்கு அளிக்கப்படும். செல்போன் மற்றும் சார்ஜர்களுக்கான சுங்கவரி 15 சதவீதமாக குறைக்கப்படும். இதனால் செல்போன் விலை குறைய வாய்ப்பு
பாட்னா டூ பூர்னியா விரைவு சாலை, பக்சால் டூ பாகல்பூர் விரைவு சாலை, புத்தகயா டூ வைஷாலி சாலை போன்ற புதிய சாலை கட்டப்படும். இந்த விரைவு சாலைகள் மற்றும் கங்கை நதியில் ரூபாய் 26 ஆயிரம் கோடியில் இரண்டு பாலங்கள் அமைக்கப்படும். ஆந்திராவை பின்தங்கிய மாவட்டங்களுக்கு கூடுதல் சிறப்பு நிதி வழங்கப்படும். இதற்காக ரூபாய் 15,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
சிறு குறு நடுத்தர தொழில்கள், புதிய இயந்திரங்கள் வாங்குவதற்கு கடன்கள் உத்திரவாத திட்டம் செயல்படுத்தப்படும். கடன் உத்திரவாத திட்டத்திற்கு ரூபாய் 100 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும். நகர்ப்புறங்களில் ஒரு கோடி ஏழை, நடுத்தர குடும்பங்களுக்கு வீட்டு வசதி திட்டத்திற்கான ரூபாய் 10 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும். இந்த ஒரு கோடி வீடுகளில் சூரிய ஒளி மின்சார வசதி ஏற்படுத்தப்படும்.
வீட்டு வசதி திட்டங்களுக்கு ரூபாய் ரூ. 2.2 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும். அதேபோல் 63 ஆயிரம் பழங்குடி கிராமங்களில் வசிக்கும் ஐந்து கோடி பழங்குடி மக்கள் பயன்பெறும் வகையில் சிறப்பு திட்டம் செயல்படுத்தப்படும்.
நாடு முழுவதும் 12 இடங்களில் புதிய தொழில் பூங்காக்கள் அமைக்கப்படும்.
Orange alert: தமிழ்நாட்டில் ஒரிரு இடங்களில் 26 மற்றும் 27 தேதிகளில் மிக கன மழை எச்சரிக்கை!
ஜாமின் கிடைத்ததைத் தொடர்ந்து.. புழல் சிறையிலிருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி
அமெரிக்கா கோர்ட் பிடிவாரண்ட்.. அதானியை உடனடியாக கைது செய்ய வேண்டும்.. ராகுல்காந்தி ஆவேசம்
விஜய் பங்கேற்கும்.. அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ள மாட்டார் திருமாவளவன்!
தனுஷ் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் விவாகரத்து வழக்கில் இறுதிக் கட்டம்.. 27ம் தேதி தீர்ப்பு வழங்கப்படுகிறது!
கடுப்பா இருக்கா பாஸ்.. வாங்க கடிக்கிறோம்.. கலகலன்னு சிரிங்க.. மைன்ட் free ஆகி.. face பிரெஷ்ஷாய்ரும்!
ஆசிரியை ரமணியின் குடும்பத்திற்கு ரூ. 5 லட்சம் உதவி.. தாயாரிடம் வழங்கினார் அமைச்சர் கோவி.செழியன்
Chennai Lakes.. நீர் இருப்பில் மாற்றம் இல்லை.. புதிய காற்றழுத்தத் தாழ்வுக்காக ஏரிகள் வெயிட்டிங்!
Rain forecast: 5 மாவட்டங்களில் இன்று மிக கன மழைக்கு வாய்ப்பு.. 7 மாவட்டங்களில் கன மழை!