Live News

Tamil Nadu Budget 2024 Live Updates: மெட்ரோ ரயில் திட்டத்திற்கு ரூ. 12,000 கோடி

author
  • Mar 10, 2024,11:33 PM IST
  • Share
Connect with me on

சென்னை:  தமிழ்நாடு சட்டசபையில் தமிழ்நாடு அரசின் 2024-25ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு இன்று தாக்கல் செய்கிறார். பட்ஜெட் குறித்த விவரங்களை அறிய எங்களுடன் இணைந்திருங்கள்.


Live Updates
  • Feb 19, 2024
    11:57 AM IST

    சென்னை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு ஒன்றிய அரசு நிதி தாமதம்

    சென்னை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு ஒன்றிய அரசு நிதி வழங்குவதில் தாமதம் ஏற்படுத்துவதாக  நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு குற்றம் சாட்டி உள்ளார்.  ஒன்றிய அரசின் செயல்பாட்டால் தமிழக அரசுக்கு நிதி சுமை ஏற்படுவதாக அமைச்சர் பேச்சு.

  • Feb 19, 2024
    11:57 AM IST

    25 கோடியில் ஆட்டிசம் உடையோருக்கு உயர்திறன் மையம்

    ராமநாதபுரம், ஏற்காட்டில் ரூ 56 கோடி செலவில் ரேடார்கள் அமைக்கப்படும். மாநில நெடுஞ்சாலைகள் ஆணையம் அமைத்திடும் சட்ட முன்வடிவு நடப்பு கூட்ட தொடரில் அறிமுகப்படுத்தப்படும். 25 கோடியில் ஆட்டிசம் உடையோருக்கு உயர்திறன் மையம் சென்னையில் அமைக்கப்பட உள்ளது.

  • Feb 19, 2024
    11:54 AM IST

    ஐந்து மாவட்டங்களில் இலவச வைஃபை வசதி

    சென்னை, மதுரை, கோவை, திருச்சி, சேலம்,உள்ளிட்ட ஐந்து மாவட்டங்களில் 1000 இடங்களில் இணைய வைஃபை வசதி ஏற்படுத்தப்படும்.

  • Feb 19, 2024
    11:54 AM IST

    50 ஆயிரம் இளைஞர்களுக்கு அரசு பணி

    அடுத்த இரண்டு ஆண்டுகளில் 50 ஆயிரம் இளைஞர்களுக்கு அரசு பணி வழங்கப்படும். ஜூன் மாதத்திற்குள் பத்தாயிரம் அரசு பணியிடங்கள் நிரப்பப்படும். இதுவரை 60,567 இளைஞர்களுக்கு பணி நியமனம் வழங்கப்பட்டுள்ளது.


  • Feb 19, 2024
    11:52 AM IST

    உயர் மட்ட மேம்பாலங்கள் அமைத்தல்

    திருவான்மியூர் உத்தண்டி வரை போக்குவரத்து நெரிசலை குறைக்க ரூபாய் 665 கோடியில் 14 புறவழிச் சாலைகள் மற்றும் உயர் மட்ட மேம்பாலங்கள் அமைக்கப்படும்.  சொத்து வரி திரும்பப் பெறும் திட்டம்  அனைத்து முன்னாள் படை வீரர்களுக்கும் விரிவுபடுத்தப்படும். இதனால் ஒரு லட்சத்து இருபது ஆயிரம் முன்னாள் படை வீரர்கள் பயனடைவர்.

  • Feb 19, 2024
    11:45 AM IST

    கைத்தறி கைவினைப் பொருட்களின் விற்பனை வணிகவளாகம்

    சென்னையில் கைத்தறி, கைவினைப் பொருட்கள் விற்பனைக்காக ரூபாய் 227 கோடியில் வணிக வளாகம் அமைக்கப்படும். தமிழ்நாடு இந்தியாவில் பிற மாநிலங்களில் உற்பத்தியாகும் கைத்தறி, கைவினைப் பொருட்கள் விற்பனை செய்யப்படும். ரூபாய் 500 கோடியில் ஜவுளி தொழில் மேம்பாட்டு திட்டத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்படும். கரூர், ஈரோடு, விருதுநகர், மாவட்டங்களில் சிறிய ஜவுளி பூங்காக்கள் அமைக்க  20 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும்.


  • Feb 19, 2024
    11:38 AM IST

    திருப்பரங்குன்றத்தில் ரோப் கார்

    திருப்பரங்குன்றம் , திருநீர்மலை கோயில்களில் ரோப் கார் வசதிகள் ஏற்படுத்தப்படும். ரூ.5,718 கோடி மதிப்பிலான 6,071 ஏக்கர் கோயில் நிலங்கள் மீட்பு. 1,000 ஆண்டுகள் பழமை வாய்ந்த கோயில்களில் ரூ.100 கோடி மதிப்பில் திருப்பணிகள். பள்ளிவாசல்கள், தேவாலயங்கள் புனரமைப்புத் திட்டம்.

  • Feb 19, 2024
    11:34 AM IST

    தஞ்சையில் கல்லணை கால்வாய் புனரமைப்பு

    கல்லணை கால்வாய் ரூபாய் 400 கோடி செலவில் புனரமைக்கப்படும். தஞ்சை, புதுக்கோட்டை மாவட்டங்களில் 2 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி செய்யப்படும். ஆதிதிராவிட இளைஞர்களுக்கான தொழில்முனைவோர் கடன் திட்டம் - ரூ.50 கோடி ஒதுக்கீடு. 35% வட்டி மானியத்துடன் ரூ.10 லட்சம் வரை கடன் பெறலாம். அயோத்திதாசப் பண்டிதர் குடியிருப்புகள் மேம்பாட்டுத் திட்டம் - ரூ.230 கோடி ஒதுக்கீடு

  • Feb 19, 2024
    11:32 AM IST

    தமிழ்நாட்டில் புதிய நீரூற்று மின் நிலையங்கள்

    தமிழ்நாட்டில் 12 இடங்களில் புதிய நீரூற்று மின் நிலையங்கள் அமைக்கப்படும். இதற்காக ரூபாய் 60 ஆயிரம் கோடியில் பொதுத்துறை மற்றும் தனியார் பங்களிப்புடன் மின் திட்டங்கள் செயல்படுத்தப்படும்.

  • Feb 19, 2024
    11:30 AM IST

    தமிழ்நாடு செயற்கை நுண்ணறிவு இயக்கம்

    வளர்ந்து வரும் செயற்கை நுண்ணறிவு ஏ ஐ தொழில்நுட்பத்தை ஆக்கபூர்வமாக பயன்படுத்துவது குறித்த திட்டமிடல் முதலமைச்சர் மு க ஸ்டாலின் தலைமையில் தமிழ்நாடு செயற்கை நுண்ணறிவு இயக்கம் உருவாக்கப்படும். சென்னை பிராட்வே பேருந்து நிலையம் மேம்படுத்தப்படும். குறளகம் நவீனப்படுத்தப்படும்.

  • {{val.updatedDate | dateToISO | date : "MMM dd, yyyy" }}
    {{val.updatedDate | dateToISO | date : "hh:mm a" }} IST

    {{val.headLine}}

மேலும்

சமீபத்திய செய்திகள்

news

ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது.. கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

மகாத்மா காந்தி பிறந்த மாதத்தில்.. புதிய மதுபானக் கொள்கையை அறிமுகப்படுத்தும் ஆந்திர அரசு!

news

ஐபிஎல் 2025 வருது வருது.. நவம்பரில் வீரர்கள் ஏலம்.. துபாயா, தோஹாவா இல்லாட்டி அபுதாபியா?

news

பெண் உதவியாளரை நாசப்படுத்தியதாக.. அரபி குத்து, காவாலா பாடல் புகழ் ஜானி மாஸ்டர் கைது!

news

சபாஷ் பாஸ்கர்.. மாற்றுத் திறனாளி பயணியிடம் காட்டிய கனிவு.. வேற லெவல் மாற்றத்தில் சென்னை எம்டிசி!

news

வங்கதேசத்துடன் கிரிக்கெட் போட்டி கூடாது.. சென்னையில் போராட்டத்தில் குதித்த இந்து மக்கள் கட்சி

news

என்ன தலைவா.. கடைசியில நீயும் அரசியல்வாதி ஆகிட்டியே?.. விஜய் போட்ட டிவீட்.. கதறும் கட்சிகள்!

news

அதீத பணிச்சுமை.. வீடு திரும்பிய இளம் பெண்.. படுக்கையில் சரிந்து பரிதாப மரணம்!

news

நவராத்திரி விற்பனை கண்காட்சி.. சென்னையில்.. செப்டம்பர் 21 முதல் கோலாகல தொடக்கம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்