மக்களவைத் தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகின்றன. இதற்கான வாக்கு எண்ணிக்கை தொடங்கியுள்ளது. முதலில்த பால் வாக்குகள் எண்ணப்படும். பின்னர் இவிஎம்களில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி தொடங்கும். மீண்டும் ஆட்சியமைக்குமா பாஜக.. பாஜகவிடமிருந்து ஆட்சியைத் தட்டிப் பறிக்குமா இந்தியா கூட்டணி.. பரபரக்கும் தேர்தல் முடிவுகளைக் காண தென்தமிழ் இணையதளத்துடன் நேரலையாக இணைந்திருங்கள்.
தர்மபுரி தொகுதியில் திமுக வேட்பாளர் ஆ. மணி வெற்றி பெற்றுள்ளார்.
மதுரை தொகுதியில் சிபிஎம் வேட்பாளர் சு. வெங்கடேசன் 3,61,287 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
திருச்சூர் தொகுதியில் பாஜக வேட்பாளர் சுரேஷ் கோபி வெற்றி பெற்றுள்ளார்.
கர்நாடகா- மாண்டியா தொகுதியில் முன்னாள் முதல்வரான எச்.டி குமாரசாமி வெற்றி பெற்றுள்ளார்.
பஞ்சாப் முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் வேட்பாளருமான சரன்ஜித் சிங் சன்னி 1,76 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
ரேபரேலி தொகுதியில் 4 லட்சம் வாக்குகள் பெற்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வெற்றி பெற்றார்.
விளங்கோடு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் 35,910 வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் வேட்பாளர் தாரகை கத்பர்ட் வெற்றி பெற்றார்.
ஆந்திரா சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்றுள்ள சந்திரபாபு நாயுடுவுக்கு முதல்வர் மு க ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சி மட்டுமே 100 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. இந்த நிலையில் டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் ராகுல் காந்தி ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.
வங்கக் கடல் காற்று சுழற்சி.. தமிழ்நாடு, இலங்கையை நோக்கி நகரக் கூடும்.. வானிலை மையம்
ஏக்கம் (ஒரு பக்க சிறுகதை)
நிக்கோபார் தீவு அருகே.. காற்றழுத்தத் தாழ்வு உருவாக ஆரம்பித்து விட்டது.. தமிழ்நாடு வெதர்மேன்
நவம்பர் 22 - இன்றைய நல்ல நேரம், செய்ய வேண்டிய வழிபாடு
மங்களகரமான வெள்ளிக்கிழமையில் பண மழையில் நனையப் போகும் 2 ராசிக்காரர்கள்
Orange alert: தமிழ்நாட்டில் ஒரிரு இடங்களில் 26 மற்றும் 27 தேதிகளில் மிக கன மழை எச்சரிக்கை!
ஜாமின் கிடைத்ததைத் தொடர்ந்து.. புழல் சிறையிலிருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி
அமெரிக்கா கோர்ட் பிடிவாரண்ட்.. அதானியை உடனடியாக கைது செய்ய வேண்டும்.. ராகுல்காந்தி ஆவேசம்
விஜய் பங்கேற்கும்.. அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ள மாட்டார் திருமாவளவன்!