Live News

Live updates: தமிழகம் முழுவதும் அனல் பறக்கும் பிரச்சாரம்

author
  • Mar 26, 2024,02:24 PM IST
  • Share
Connect with me on
சென்னை: தமிழ்நாடு முழுவதும் தேர்தல் பிரச்சாரம் அனல் பறக்க ஆரம்பித்துள்ளது. கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல்,  தலைவர்கள், வேட்பாளர்கள் பிரச்சாரம் செய்து வருகின்றனர். முதல்வர் மு.க.ஸ்டாலின், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் இன்று தூத்துக்குடியில் பிரச்சாரம் செய்யவுள்ளனர். மேலும் முக்கிய செய்திகளுக்கு தொடர்ந்து இந்தப் பக்கத்துடன் இணைந்திருங்கள்.



Live Updates
  • Mar 26, 2024
    01:20 PM IST

    வாக்குப்பதிவு அன்று ஊதியத்துடன் விடுமுறை

    ஏப்ரல் 19,வாக்குப்பதிவு நாளன்று ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்க வேண்டும் என தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு அறிவித்துள்ளார்.  தனியார் நிறுவனங்களுக்கும் உத்தரவிட தொழிலாளர் நல ஆணையத்திற்கு மாநில தேர்தல் ஆணையம் கடிதம் எழுதியுள்ளது. மேலும் அரசியல் கட்சிகள் தேர்தல் அதிகாரிகளுக்கு முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளது.

  • Mar 26, 2024
    12:22 PM IST

    தமிழ்நாட்டில் ராகுல் காந்தி பிரச்சாரம்

    ஏப்ரல் முதல் வாரம் தமிழ்நாட்டில் நடைபெறும் இரண்டு பொதுக்கூட்டத்தில்  ராகுல் காந்தி பங்கேற்று பேச இருப்பதாக காங்கிரஸ்  கட்சி அறிவித்துள்ளது.

  • Mar 26, 2024
    12:13 PM IST

    கனிமொழி வேட்பு மனு தாக்கல்

    தூத்துக்குடி தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கனிமொழி கருணாநிதி வேட்பு மனு தாக்கல் செய்தார்.



  • Mar 26, 2024
    11:53 AM IST

    சௌமியா அன்புமணி தருமபுரியில் சாமி தரிசனம்

    தருமபுரி தொகுதியில் போட்டியிடும் பாமக வேட்பாளர் சௌமியா அன்புமணி நேற்று வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்ட நிலையில், இன்று தருமபுரியில் உள்ள அதியமான் கோட்டை காலபைரவர் கோவிலில் சுவாமி தரிசனம் செய்தார். அங்கு அவருக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சிறப்பு பூஜையில் கலந்து கொண்டார்.

  • Mar 26, 2024
    11:48 AM IST

    ஆம் ஆத்மியினர் கைது.. டெல்லி மெட்ரோவில் 144 தடை

    டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்ததை கண்டித்து பிரதமர் நரேந்திர மோடி இல்லத்தை முற்றுயிட முயன்ற ஆம் ஆத்மியினரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்தப் போராட்டத்தை தொடர்ந்து டெல்லி பட்டேல் சௌக் மெட்ரோ ரயில் நிலைய பகுதிகளில் 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது.

  • Mar 26, 2024
    11:45 AM IST

    பம்பர சின்னம் வழங்க கோரிய வழக்கு ஒத்திவைப்பு

    மதிமுகவுக்கு பம்பர சின்னம் ஒதுக்குமாறு தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடக் கோரி தொடரப்பட்ட வழக்கு இன்று பிற்பகல்  2:15 மணிக்கு ஒத்திவைக்கப்பட்டது.



  • Mar 26, 2024
    11:42 AM IST

    பஞ்சாபில் பாஜக கூட்டணி பேச்சுவார்த்தை தோல்வி

    பஞ்சாபில் சிரோன்மணி அகாலி தளத்துடன் கூட்டணி அமைத்து போட்டியிட பாஜக நடத்திய பேச்சுவார்த்தை  தோல்வியில் முடிந்துள்ளது. இதில் பாஜகவின் நிபந்தனைகளை சிரோன்மணி அகாலிதளம் ஏற்க மறுத்ததாக கூறப்படுகிறது. இந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததால் பஞ்சாபில் உள்ள 13 தொகுதிகளிலும் பாஜக தனித்துப் போட்டியிடுவதாக அறிவித்துள்ளது. மகாராஷ்டிராவில் ஏக்நாத் சிண்டே தலைமையிலான சிவசேனா, அஜித் பவார் ஆகிய கட்சிகளுடன் பாஜக கூட்டணி பேச்சுவார்த்தை இழுபறியில் உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஏற்கனவே பாஜக, ஒடிசாவில் பிஜு ஜனதா தளத்துடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தியது தோல்வியில் முடிந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் பாஜக கூட்டணி பேச்சுவார்த்தை அடுத்தடுத்து தோல்வி அடைந்து வருவதால் அக்கட்சியின் மேலிடம் அதிர்ச்சி அடைந்து வருகிறதாம்.

  • Mar 26, 2024
    11:16 AM IST

    அதிமுக,பாஜக மீது வழக்கு பதிவு

    ஊட்டியில் தேர்தல் விதிமுறைகளை மீறி ஊர்வலம் சென்றதாக பாஜக மாவட்ட செயலாளர் மோகன்ராஜ், அதிமுக மாவட்ட செயலாளர் வினோத் ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

  • Mar 26, 2024
    11:12 AM IST

    தூத்துக்குடியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் 5 மணிக்குப் பிரச்சாரம்

    தூத்துக்குடி தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கனிமொழியை ஆதரித்து தூத்துக்குடி காமராஜர் காய்கறி சந்தையில் இன்று காலை வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார் முதல்வர் மு க ஸ்டாலின். இதனைத் தொடர்ந்து இன்று மாலை 5 மணிக்கு எட்டயபுரம் அருகே சிந்தலக்கரையில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு திமுக வேட்பாளர் கனிமொழி மற்றும் ராமநாதபுரம் வேட்பாளர் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்  நவாஸ் கனிக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்க உள்ளார். இதனை முடித்துவிட்டு விருதுநகர் செல்ல இருக்கிறார் முதல்வர் மு க ஸ்டாலின்.





  • Mar 26, 2024
    11:06 AM IST

    தூத்துக்குடியில் எடப்பாடி பழனிச்சாமி 4 மணிக்குப் பிரச்சாரம்

    தூத்துக்குடியில் அதிமுக சார்பாக போட்டியிடும் சிவகாமி வேலுமணிக்கு ஆதரவாக எடப்பாடி பழனிச்சாமி இன்று மாலை 4 மணிக்கு சிதம்பரம் பேருந்து நிலையம் அருகே தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள இருக்கிறார்.



  • {{val.updatedDate | dateToISO | date : "MMM dd, yyyy" }}
    {{val.updatedDate | dateToISO | date : "hh:mm a" }} IST

    {{val.headLine}}

மேலும்

சமீபத்திய செய்திகள்

news

ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது.. கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

மகாத்மா காந்தி பிறந்த மாதத்தில்.. புதிய மதுபானக் கொள்கையை அறிமுகப்படுத்தும் ஆந்திர அரசு!

news

ஐபிஎல் 2025 வருது வருது.. நவம்பரில் வீரர்கள் ஏலம்.. துபாயா, தோஹாவா இல்லாட்டி அபுதாபியா?

news

பெண் உதவியாளரை நாசப்படுத்தியதாக.. அரபி குத்து, காவாலா பாடல் புகழ் ஜானி மாஸ்டர் கைது!

news

சபாஷ் பாஸ்கர்.. மாற்றுத் திறனாளி பயணியிடம் காட்டிய கனிவு.. வேற லெவல் மாற்றத்தில் சென்னை எம்டிசி!

news

வங்கதேசத்துடன் கிரிக்கெட் போட்டி கூடாது.. சென்னையில் போராட்டத்தில் குதித்த இந்து மக்கள் கட்சி

news

என்ன தலைவா.. கடைசியில நீயும் அரசியல்வாதி ஆகிட்டியே?.. விஜய் போட்ட டிவீட்.. கதறும் கட்சிகள்!

news

அதீத பணிச்சுமை.. வீடு திரும்பிய இளம் பெண்.. படுக்கையில் சரிந்து பரிதாப மரணம்!

news

நவராத்திரி விற்பனை கண்காட்சி.. சென்னையில்.. செப்டம்பர் 21 முதல் கோலாகல தொடக்கம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்