Live News

Live news: ஓ.பி.எஸ்.ஸுக்கு எதிராக ஓ. பன்னீர்செல்வம் போட்டி!

author
  • Mar 25, 2024,07:22 PM IST
  • Share
Connect with me on
சென்னை: தமிழ்நாட்டில் லோக்சபா தேர்தல் பிரச்சாரம் சூடு பிடித்துள்ளது. அதிமுக வேட்பாளர்கள் மற்றும் அதன் கூட்டணிக் கட்சி வேட்பாளர்கள் பங்குனி உத்திரமான இன்று நல்ல நாள் என்பதால் இன்று வேட்பு மனு தாக்கல் செய்தனர். அதேபோல திமுகவைச் சேர்ந்த பல வேட்பாளர்களும் இன்று வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். நாளை பத்தாம் வகுப்பு தொடங்கவுள்ள நிலையில் நடிகர் விஜய் உள்ளிட்ட தலைவர்கள் மாணவ, மாணவியருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.




Live Updates
  • Mar 25, 2024
    07:12 PM IST

    ஓ.பி.எஸ்.ஸுக்கு எதிராக இன்னொரு ஓபிஎஸ் போட்டி!

    ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தை எதிர்த்து மதுரை மாவட்டம் உசிலம்பட்டி மேக்கிழார்பட்டியைச் சேர்ந்த ஓ. பன்னீர் செ்லவம் என்பவர் சுயேச்சையாக போட்டியிட மனு தாக்கல் செய்துள்ளார்.




  • Mar 25, 2024
    06:47 PM IST

    10ம் வகுப்பு மாணவர்களுக்கு விஜய் வாழ்த்து

    தமிழ்நாட்டிலும் புதுச்சேரியிலும் பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வுகளை நாளை எழுதவுள்ள என்னருமை தம்பி, தங்கைகள் அனைவரும் நல்ல மதிப்பெண்கள் பெற்று வெற்றி பெற, நெஞ்சார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன் - தமிழக வெற்றிக் கழகம் கட்சித் தலைவர் விஜய் வாழ்த்து.

  • Mar 25, 2024
    06:41 PM IST

    ஓபிஎஸ் எந்த சின்னத்தில் போட்டி..?

    லோக்சபா தேர்தலில் வாளி, பலா, திராட்சை இவற்றில் ஏதேனும் ஒற்றைச் சின்னத்தை ஒதுக்க தேர்தல் ஆணையத்திடம் விண்ணப்பித்து இருக்கிறேன். பாஜக கூட்டணியில் நான் சுயேச்சை சின்னத்தில் போட்டியிடுவதற்கு சின்னம் ஒதுக்கக்கோரி விண்ணப்பித்துள்ளேன் என  ஓபிஎஸ் பேட்டி அளித்துள்ளார். அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழு என்ற பெயரில் ஓபிஎஸ் ராமநாதபுரத்தில் சுயேட்சை சின்னத்தில் போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

  • Mar 25, 2024
    05:50 PM IST

    சென்னையில் ஐபிஎல் இறுதிப் போட்டி நடைபெறும்

    17வது ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டி சென்னையில் நடைபெறும். மே 26ம் தேதி ஐபிஎல் இறுதிப் போட்டி சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் என்று பிசிசிஐ அறிவிப்பு.

  • Mar 25, 2024
    05:24 PM IST

    டெல்லியில் நடிகை குஷ்பு ஹோலி கொண்டாட்டம்

    பாஜகவைச் சேர்ந்த நடிகை குஷ்பு டெல்லியில் தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர்களுடன் சேர்ந்து ஹோலி கொண்டாடி மகிழ்ந்தார். தேசிய மகளிர் ஆணைய உறுப்பினராகவும் குஷ்பு இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


  • Mar 25, 2024
    04:39 PM IST

    விளவங்கோடு இடைத் தேர்தல்.. காங்கிரஸ் வேட்பாளர் டாக்டர் தாரகை

    விளவங்கோடு சட்டசபை இடைத் தேர்தல் காங்கிரஸ் வேட்பாளராக டாக்டர் தாரகை அறிவிப்பு. திருநெல்வேலி லோக்சபா காங்கிரஸ் வேட்பாளராக ராபர்ட் புரூஸ் அறிவிப்பு. மயிலாடுதுறை வேட்பாளர் இன்னும் அறிவிக்கப்படவில்லை.



  • Mar 25, 2024
    03:46 PM IST

    படகு அல்லது பாய்மரப் படகு சின்னம் கேட்கும் சீமான்

    நாம் தமிழர் கட்சிக்கு ஏற்கனவே  மைக் சின்னம் ஒதுக்கப்பட்ட நிலையில், நாம் தமிழர் கட்சிக்கு படகு அல்லது பாய்மர படகு சின்னம் கேட்டு சீமான் தேர்தல் ஆணையத்திடம்  கோரிக்கை விடுத்துள்ளார்.  எந்த சின்னத்தை ஒதுக்குவது என்பது தொடர்பாக இன்று மாலை தேர்தல் ஆணையம் முடிவு செய்ய உள்ளதாக கூறப்படுகிறது.




  • Mar 25, 2024
    02:56 PM IST

    வடசென்னையில் திமுக- அதிமுகவினர் கடும் மோதல்

    வட சென்னையில் யார் முதலில் மனு தாக்கல் செய்வது என்பது தொடர்பாக, திமுக - அதிமுகவினர் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. திமுக வேட்பாளர் கலாநிதிக்கு 2ம் எண் டோக்கன் வழங்கப்பட்டது. அதிமுக வேட்பாளர் ராயபுரம் மனோவுக்கு 7ம் எண் டோக்கன் வழங்கப்பட்டது. நாங்கள் தான் முதலில் வந்தோம். ஆனால் எப்படி திமுகவுக்கு இரண்டாவது டோக்கன் கொடுக்கப்பட்டது என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். ஒரு மணி நேரம வாதத்திற்குப் பின்னர் அதிமுக வேட்பாளர் மனோ முதலில் வேட்பு மனு தாக்கல் செய்தார். இந்த நிலையில் தற்போது வேட்பு மனு தாக்கல் செய்ய வந்த திமுக வேட்பாளர், அமைச்சரை வெளியே விடாமல் தடுத்து அதிமுகவினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இப் போராட்டத்திற்கு திமுகவினர் எதிர்ப்பு தெரிவித்தால் இரு கட்சிகளிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவுகிறது.

  • Mar 25, 2024
    02:30 PM IST

    வீரப்பன் மகள் வேட்பு மனு தாக்கல்

    கிருஷ்ணகிரியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் வீரப்பனின் மகள் வித்யா ராணி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேட்பு மனு தாக்கல் செய்தார்.

  • Mar 25, 2024
    02:13 PM IST

    கணவருடன் வந்து வேட்புமனு தாக்கல் செய்த சவுமியா அன்புமணி

    தருமபுரி தொகுதியில் போட்டியிடும் பாமக வேட்பாளர் சவுமியா அன்புமணி ராமதாஸ் தன் கணவருடன் வந்து வேட்பு மனு தாக்கல் செய்தார். அதே தொகுதியில் திமுக சார்பில் ஆ. வேலுமணி வேட்புமனு தாக்கல் செய்தார்.  மதுரையில் மீண்டும் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் சு.வெங்கடேசன் வேட்புமனு தாக்கல் செய்தார்.


  • {{val.updatedDate | dateToISO | date : "MMM dd, yyyy" }}
    {{val.updatedDate | dateToISO | date : "hh:mm a" }} IST

    {{val.headLine}}

மேலும்

சமீபத்திய செய்திகள்

news

Orange alert: தமிழ்நாட்டில் ஒரிரு இடங்களில் 26 மற்றும் 27 தேதிகளில் மிக கன மழை எச்சரிக்கை!

news

ஜாமின் கிடைத்ததைத் தொடர்ந்து.. புழல் சிறையிலிருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி

news

அமெரிக்கா கோர்ட் பிடிவாரண்ட்.. அதானியை உடனடியாக கைது செய்ய வேண்டும்.. ராகுல்காந்தி ஆவேசம்

news

விஜய் பங்கேற்கும்.. அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ள மாட்டார் திருமாவளவன்!

news

தனுஷ் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் விவாகரத்து வழக்கில் இறுதிக் கட்டம்.. 27ம் தேதி தீர்ப்பு வழங்கப்படுகிறது!

news

கடுப்பா இருக்கா பாஸ்.. வாங்க கடிக்கிறோம்.. கலகலன்னு சிரிங்க.. மைன்ட் free ஆகி.. face பிரெஷ்ஷாய்ரும்!

news

ஆசிரியை ரமணியின் குடும்பத்திற்கு ரூ. 5 லட்சம் உதவி.. தாயாரிடம் வழங்கினார் அமைச்சர் கோவி.செழியன்

news

Chennai Lakes.. நீர் இருப்பில் மாற்றம் இல்லை.. புதிய காற்றழுத்தத் தாழ்வுக்காக ஏரிகள் வெயிட்டிங்!

news

Rain forecast: 5 மாவட்டங்களில் இன்று மிக கன மழைக்கு வாய்ப்பு.. 7 மாவட்டங்களில் கன மழை!

அதிகம் பார்க்கும் செய்திகள்