Live News

Live News Today: சென்னையில் நாளை 44 புறநகர் ரயில்கள் ரத்து

author
  • Feb 17, 2024,06:00 PM IST
  • Share
Connect with me on
சென்னை: ரஷ்யாவின் மிக முக்கிய எதிர்க்கட்சித் தலைவரான அலெக்ஸி நவ்லனியின் திடீர் மரணம் அங்கு பெரும் பரபரப்பையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. மக்கள் தெருக்களில் இறங்கி போராடத் தொடங்கியுள்ளனர். டெல்லியில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அரசு இன்று சட்டசபையில் நம்பிக்கை கோரும் தீர்மானத்தைக் கொண்டு வந்துள்ளது. இன்சாட் 3டிஎஸ் செயற்கைக் கோள் இன்று விண்ணில் செலுத்தப்படவுள்ளது. மேலும் செய்திகளுக்குத் தொடர்ந்து எங்களுடன் இணைந்திருங்கள்.


Live Updates
  • Feb 17, 2024
    04:40 PM IST

    பாய தயாராகும் ஜிஎஸ்எல்வி எப் 14 ராக்கெட்

    இந்திய வானிலையை துல்லியமாகக் கணிக்கும் இன்சாட் 3 டிஎஸ்  செயற்கைகோளை சுமந்து செல்லும் ஜிஎஸ்எல்வி எப்14 ராக்கெட் மாலை 5.35 அளவில் விண்ணில் ஏவப்பட உள்ளது. இதற்காக ஸ்ரீஹரிகோட்டா ஏவு தளத்தில் அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன.

  • Feb 17, 2024
    04:39 PM IST

    இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய வீரர் ஜெய்ஸ்வால் சதம்

    ராஜ் கோட்டில் நடைபெறும் இங்கிலாந்துக்கு எதிரான 3வது டெஸ்ட் தொடரில் இந்திய வீரர் ஜெய்ஸ்வால் 122 பந்துகளை எதிர் கொண்டு 5 சிக்ஸர்கள், 9 பவுண்டரிகள் விளாசி சதம் அடித்தார்.

  • Feb 17, 2024
    04:15 PM IST

    பாஜக தேசிய பொதுக்குழு கூட்டம்

    டெல்லியில் பாஜக தேசிய பொதுக்குழு கூட்டம் துவங்கியது. இதில் பிரதமர் நரேந்திர மோடி, அமித்ஷா, ஜே.பி நட்டா உள்ளிட்ட பாஜக மூத்த தலைவர்கள் பலரும் பங்கேற்னர்.

  • Feb 17, 2024
    04:11 PM IST

    மெட்ரோவில் பயணிக்கும் பெண்களின் கவனத்திற்கு..!

    மெட்ரோவில் பயணிக்கும் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் பெண் பாதுகாவலர்கள் அடங்கிய பிங்க் ஸ்குவாட் என்ற திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதில் தற்காப்புக் கலைகளில் தேர்ச்சி பெற்ற 23 பெண்கள் இடம்பெற்றுள்ளனர். மேலும் மெட்ரோ ரயிலில் பயணிக்கும் பெண்களுக்கு ஏதேனும் புகார் இருந்தால் 1860 425 15 15 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் எனவும் அறிவித்துள்ளது.



  • Feb 17, 2024
    03:40 PM IST

    வெடி விபத்தில் உயிரிழந்தோருக்கு ரூ 3 லட்சம் நிவாரணம்

    சாத்தூர் வெடி விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு தலா 3 லட்சம் நிவாரணமும், விபத்தில் காயம் அடைந்தவருக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் நிவாரணமும் வழங்க முதல்வர் மு க ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

  • Feb 17, 2024
    03:30 PM IST

    வெள்ள பாதிப்பு அறிக்கை வழங்கினார் திருப்புகழ்

    சென்னை வெள்ள பாதிப்புக்கு நிரந்தர தீர்வு காண்பதற்கான அறிக்கையை ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி திருப்புகழ் முதல்வர் 

    மு க ஸ்டாலினிடம் வழங்கினார்.

  • Feb 17, 2024
    03:28 PM IST

    நிர்மலா சீதாராமனுக்கு முதல்வர் மு க ஸ்டாலின் கண்டனம்

    திராவிட மாடல் பிரிவினையை தூண்டுவதாக கூறுவதை விட நகைச்சுவை வேறு ஏதும் இருக்க முடியாது என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு முதல்வர் மு க ஸ்டாலின் கண்டம் தெரிவித்துள்ளார்.

  • Feb 17, 2024
    03:09 PM IST

    732 கோடியில் திட்டப் பணிகளுக்கு அடிக்கல்

    ரூபாய் 732 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட உள்ள புதிய திட்ட பணிகளுக்கு சென்னை தலைமை செயலகத்தில் காணொளி வாயிலாக முதல்வர் மு க ஸ்டாலின் இன்று அடிக்கல் நாட்டினார்.

  • Feb 17, 2024
    03:08 PM IST

    வயநாட்டில் முழு அடைப்பு போராட்டம்

    கேரளாவின் வயநாடு மாவட்டத்தில் நேற்றும் ஒருவரை  யானை தாக்கி உயிரிழந்ததை அடுத்து அனைத்துக் கட்சிகள் சார்பாக இன்று அங்கு முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. முழு அடைப்புப் போராட்டத்தால் கர்நாடகா மற்றும் நீலகிரியில் உணவுப் பொருள் ஏற்றி சென்ற சரக்கு லாரி கூடலூரிலேயே நிறுத்தி வைக்கப்பட்டது.  இந்த மார்க்கத்தில் இரு மாநில அரசு பேருந்துகளும் இயக்கப்படவில்லை.

  • Feb 17, 2024
    03:00 PM IST

    சென்னையில் நாளை 44 புறநகர் ரயில்கள் ரத்து

    சென்னையில் கோடம்பாக்கம்- தாம்பரம் இடையேயான புறநகர் ரயில் சேவையில், நாளை காலை 11 மணி முதல் பிற்பகல் 3.15 மணி வரை பராமரிப்பு பணிகள் நடைபெறுகின்றன. இதனால் இந்த நேரத்தில் இயக்கப்படும் 44 புறநகர் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், தாம்பரம்- செங்கல்பட்டு இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாகவும் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.


  • {{val.updatedDate | dateToISO | date : "MMM dd, yyyy" }}
    {{val.updatedDate | dateToISO | date : "hh:mm a" }} IST

    {{val.headLine}}

மேலும்

சமீபத்திய செய்திகள்

news

ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது.. கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

மகாத்மா காந்தி பிறந்த மாதத்தில்.. புதிய மதுபானக் கொள்கையை அறிமுகப்படுத்தும் ஆந்திர அரசு!

news

ஐபிஎல் 2025 வருது வருது.. நவம்பரில் வீரர்கள் ஏலம்.. துபாயா, தோஹாவா இல்லாட்டி அபுதாபியா?

news

பெண் உதவியாளரை நாசப்படுத்தியதாக.. அரபி குத்து, காவாலா பாடல் புகழ் ஜானி மாஸ்டர் கைது!

news

சபாஷ் பாஸ்கர்.. மாற்றுத் திறனாளி பயணியிடம் காட்டிய கனிவு.. வேற லெவல் மாற்றத்தில் சென்னை எம்டிசி!

news

வங்கதேசத்துடன் கிரிக்கெட் போட்டி கூடாது.. சென்னையில் போராட்டத்தில் குதித்த இந்து மக்கள் கட்சி

news

என்ன தலைவா.. கடைசியில நீயும் அரசியல்வாதி ஆகிட்டியே?.. விஜய் போட்ட டிவீட்.. கதறும் கட்சிகள்!

news

அதீத பணிச்சுமை.. வீடு திரும்பிய இளம் பெண்.. படுக்கையில் சரிந்து பரிதாப மரணம்!

news

நவராத்திரி விற்பனை கண்காட்சி.. சென்னையில்.. செப்டம்பர் 21 முதல் கோலாகல தொடக்கம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்