Zoom சிஇஓ மெசேஜ்: "அரை மணி நேரத்தில் மெயில் வரும்".. 1300 பேருக்கு வேலை போச்சு!
Feb 08, 2023,03:59 PM IST
டெல்லி: ஜூம் நிறுவனம் தனது ஊழியர்களில் 15சதவீதம் பேரை அதாவது 1300 பேரை வேலையை விட்டு நீக்கியுள்ளது. இதை அந்த நிறுவனத்தின் தலைமை செயலதிகாரி எரிக் யுவான் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக தனது பிளாக்கில் அவர் குறிப்பிட்டுள்ளார். அதில்,கடின உழைப்பாளிகளும், திறமையானவர்களும் கூட இதில் அடக்கம். கடுமையான சூழல் காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. வேலைநீக்கம் தொடர்பாக அவர்களுக்கு மெயில் அனுப்பப்படும். அமெரிக்காவைச் சேர்ந்தவர்களாக இருந்தால் அடுத்த அரை மணி நேரத்தில் அவர்களுக்கு மெயில் வந்து விடும். மற்றவர்களுக்கு பின்னர் தெரிவிக்கப்படும் என்று யுவான் குறிப்பிட்டுள்ளார்.
வேலை இழந்தோருக்கு 16 வார கால சம்பளம் உள்ளிட்ட பல்வேறு நிவாரணங்களையும் யுவான் அறிவித்துள்ளார்.
சமீப காலமாக பல்வேறு நிறுவனங்கள் ஆட்குறைப்பில் இறங்கியுள்ளன. டிவிட்டர், மைக்ரோசாப்ட், கூகுள் என பெரும் பெரும் நிறுவனங்களும் ஆட்குறைப்பில் ஈடுபட்டுள்ள நிலையில் அந்த வரிசையில் தற்போது ஜூமும் இணைந்துள்ளது.