Yearender 2024.. உலகிலேயே மோசமான விமான நிறுவனம் இன்டிகோ.. 2024ல் ஒரு சோகம்!
டெல்லி: 2024ம் ஆண்டில் உலகின் மோசமான விமான நிறுவனங்களின் பட்டியலில் இண்டிகோ நிறுவனம் 103வது இடத்தை பிடித்துள்ளது. அதாவது உலகிலேயே மோசமான சேவை என்ற பெயரை இண்டிகோ பெற்றுள்ளது.
இருப்பினும் இந்த பட்டியலை நிராகரிப்பதாக இண்டிகோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
உலகளவில் உள்ள விமான சேவைகளின் செயல்திறனைப் பகுப்பாய்வு செய்து AIRHELP SCORE REPORT நிறுவனம் ஆண்டுதோறும் இந்த பட்டியலை வெளியிட்டு வருகிறது. வாடிக்கையாளரின் மதிப்பீடு, சரியான நேரத்தில் வருகை, புறப்படும் நேரம், பணியாளர்களின் சேவைத் தரம், உணவு வழங்குதல், பயணிகளின் வசதி உள்ளிட்டவற்றைக் கொண்டு இந்த ஆய்வு நடத்தப்படுகிறது. அதன்படி, 2024ம் ஆண்டில் சிறந்த விமான நிறுவனம் எது என்பது தொடர்பாக ஒரு ஆய்வை நடத்தியது இந்த அமைப்பு.
கிட்டத்தட்ட 54க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து பயணிகளிடம் இதுகுறித்து கருத்து கேட்கப்பட்டு ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. மொத்தம் 109 விமான நிறுவனங்களில் இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. இதில் பிரஸ்ஸல்ஸ் ஏர்லைன்ஸ், கத்தார் ஏர்வேஸ் மற்றும் யுனைடெட் ஏர்லைன்ஸ் ஆகியவை முதல் 3 இடங்களைப் பிடித்துள்ளன.
இந்தியாவை சேர்ந்த ஏர் இந்தியா 61வது இடத்திலும், ஏர் ஏசியா 94வது இடத்திலும் உள்ளது. இதில் இண்டிகோ நிறுவனம் மிகவும் பின்தங்கியுள்ளது. 109 விமான நிறுவனங்களில் நடத்தப்பட்ட இந்த ஆய்வில், உலகின் மோசமான 10 விமான நிறுவனங்களின் பட்டியலில் இந்தியாவில் இயங்கி வரும் இண்டிகோ நிறுவனமும் இடம் பெற்றுள்ளது.
109 நிறுவனங்களில் இண்டிகோ 103வது இடத்தில் உள்ளது. இதை இண்டிகோ நிறுவனம் ஏற்க மறுத்துள்ளது. இது குறித்து அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியாவின் மிகவும் விருப்பமான விமான நிறுவனமாக விளங்கும் இண்டிகோ, அந்த ஆய்வின் முடிவுகளை ஏற்க மறுக்கிறது. இண்டிகோ தொடர்ந்து நேரத்தைக் கடைப்பிடிப்பதிலும் வாடிக்கையாளர் சேவை விஷயத்திலும் சரியான தரத்தைப் பெற்றுள்ளது என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
மக்களே நீங்கள் இண்டிகோ விமானங்களில் பறந்துள்ளீர்களா.. நீங்க சொல்லுங்க இண்டிகோ பெஸ்ட்டா இல்லை ஒர்ஸ்ட்டா இல்லை பரவாயில்லையா??
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்