Yearender 2024: இந்தியர்களால் அதிகம் தேடப்பட்ட.. நபர்கள், விளையாட்டுகள்.. இதோ லிஸ்ட்!

Meenakshi
Dec 12, 2024,10:24 AM IST

டெல்லி:  2024ஆம் ஆண்டில் கூகுளிலில் அதிகம் தேடப்பட்ட நபர்களின் பட்டியலில் இந்தியாவில் மல்யுத்த வீரர் வினேஷ் போகத் முதலிடம் பிடித்துள்ளார். உணவுகளில் தமிழ்நாட்டை சேர்ந்த ஊறுகாயும் கஞ்சியும் இடம்பிடித்துள்ளது.


நமக்கு எதையாவது பற்றி தெரிந்து கொள்ள வேண்டுமா? அல்லது எதை பற்றியாவது சந்தேகமா?  நமக்கு பிடித்த விஷயம் பற்றி தெரிந்து கொள்ள வேண்டுமா? உடனே தட்டு கூகுளை என்று நம் மனது சொல்லும். அந்த அளவிற்கு மக்களின் வாழ்க்கையுடன் கூகுள் இணைந்துள்ளது. ஆழ்வார்ப்பேட்டை ஆண்டவருக்கு ஈக்வலாக இப்போது கூகுளாண்டவரும் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார்.


இந்த நிலையில், ஒவ்வொரு ஆண்டும் கூகுளில் தேடுதளத்தில் மக்களால் அதிகம் தேடப்பட்டவைகள் குறித்த விபரங்களை பற்றி வெளியிட்டு வருகின்றது கூகுள். அதன் படி இந்த ஆண்டு அதிகம் தேடப்பட்டவர்கள், உணவுகள், ஊர்கள்,விளையாட்டுகள் குறித்த விபரத்தை வெளியிட்டுள்ளது கூகுள்.


அதிகம் தேடப்பட்ட நபர்கள்:




1.மல்யுத்த வீரர் வினேஷ் போகத்

2. பீகார் முதல்வர் நிதிஷ்குமார்

3. சிராக் பாஸ்வான்

4. ஹர்திக் பாண்டியா

5.பவன் கல்யாண்

6. சஷாங்க் சிங்

7. பூனம் பாண்டே

8. ராதிகா மெர்ச்சென்ட்

9. அபிஷேக் சர்மா

10. லக்சயா சென் 


ஆகியோர் கூகுளில் அதிகம்   தேடப்பட்டவர்களாக உள்ளனர்.


கூகுளில் அதிகம் தேடப்பட்ட விளையாட்டுகள்


1. ஐபிஎல்

2.டி20 உலகப்கோப்பை

3.ஒலிம்பிக்ஸ்

4.ப்ரோ கபடி லீக்

5. இந்தியன் சூப்பர் லீக்

6. மகளிர் ப்ரீமியர் லீக்

7.கோபா அமெரிக்கா

8.துலீப் கோப்பை

9.யுஇஎப்ஏ கோப்பை

10.யு-19 உலகக் கோப்பை



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்