Yearender 2024: அஜீத்தால் பிரபலமடைந்த அஜர்பைஜான்.. அதிகம் கூகுள் செய்யப்பட்ட நாடு இதுதான்!
சென்னை: இந்தியர்களால் அதிகம் தேடப்பட்ட ஊர் என்ற பெருமை அஜர்பைஜான் நாட்டுக்குக் கிடைத்துள்ளது. தமிழ்நாட்டு மக்களிடமும் இது பிரபலமானது.. அதற்குக் காரணம் நம்ம அஜீத்தான்.
அஜீத் படங்கள் சில இந்த நாட்டில் படமாக்கப்பட்டுள்ளன. குறிப்பாக விடாமுயற்சி படப்பிடிப்பு இந்த நாட்டில் நடந்துள்ளது. அஜீத் படம் மட்டுமல்லாமல் பல்வேறு படங்களையும் கூட இந்த நாட்டில் படமாக்க விரும்புகிறார்கள். காரணம் அட்டகாசமான லொக்கேஷன்களைக் கொண்ட நாடுதான் இந்த அஜர்பைஜான்.
இந்தியாவின் மிகச் சிறந்த சுற்றுலா தேடலாக இந்த நாடும் திகழ்ந்து வருகிறது. 2024ம் ஆண்டில் அதிகம் தேடப்பட்ட சுற்றுலாத்தலங்களின் பட்டியலைப் பார்ப்போமா..
1. அசர்பைஜான்
2. பாலி
3. மனாலி
4. கசகஸ்தான்
5. ஜெய்ப்பூர்
6. ஜார்ஜியா
7. மலேசியா
8. அயோத்தியா9. காஷ்மீர்
10. தெற்கு கோவா
இந்தப் பட்டியலில் இந்தியாவைச் சேர்ந்த நகரங்கள் என்று பார்த்தால், மனாலி, ஜெய்ப்பூர், அயோத்தியா, காஷ்மீர், கோவா ஆகியவை இடம் பிடித்துள்ளன. மற்ற நாடுகளில் அஜர்பைஜான், கசகஸ்தான், ஜார்ஜியா ஆகியவை முன்னாள் சோவியத் யூனியன் நாடுகளாகும். இதுதவிர மலேசியா எப்போதும் இந்தியர்களின் முக்கியத் தேடலாக இருக்கக் கூடிய நாடுதான்.
சரி 2025ம் ஆண்டில் நீங்க எந்த ஊருக்குப் போக பிளான் பண்ணிருக்கீங்க.. எங்களுக்கும் சொல்லுங்க.. அவரவர் விருப்ப நாட்டையும், நகரத்தையும் அறிந்து கொள்ளலாமே.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்