சர்வதேச மகளிர் தினம்: டாக்டர் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ்.. வாழ்த்து செய்தி!

Manjula Devi
Mar 07, 2025,07:48 PM IST

சென்னை: சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் மகளிர் தின வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.


பெண்கள் ஆண்களுக்கு நிகராக அனைத்து துறைகளிலும் சாதனை படைத்து வரும் நிலையில் அவர்களை கௌரவப்படுத்தும் நோக்கில் ஒவ்வொரு வருடமும் சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வரிசையில் நாளை கொண்டாடப்படும் மகளிர் தினத்தை முன்னிட்டு பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் மகளிர் தின வாழ்த்து செய்திகளை பதிவிட்டுள்ளனர்.


இதுகுறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் வாழ்த்து குறிப்பில், 




ஆணுக்கு இணையாக பெண்கள் முன்னேற வேண்டும்; சாதனைகளை படைக்க வேண்டும் என்பனதான் நமது உயர்ந்த நோக்கங்கள். அந்த நோக்கங்கள் எட்டப்பட வேண்டும் என்றால் அவர்களுக்கு உரிமையும், விடுதலையும் வழங்கப்பட வேண்டும்.


பெண்களுக்கு அதிகாரம் வழங்கப்பட வேண்டும் என்பதை மகளிர் தினத்தில் மட்டும் பயன்படுத்தும் முழக்கமாக வைத்துக் கொள்ளாமல், உண்மையாகவே மகளிருக்கு முழுமையான விடுதலையையும், உரிமையையும் வென்றெடுத்துக் கொடுக்க இந்த நாளில் உறுதியேற்போம் என கூறியுள்ளார்.



பாமக  தலைவர் அன்புமணி ராமதாஸ்: 


"கல்வி, வேலைவாய்ப்புகளில் பெண்கள் முன்னேறியுள்ளனர். அறிவும், திறனும் தான் காரணம். அவர்களுக்கு உரிமையும், அதிகாரமும் எட்டாக்கனியாக உள்ளன. அவற்றைப் போராடிப் பெறும் திறன் மக்களுக்கு உண்டு. பெண்கள் அச்சமின்றி, நடமாடும் சூழலை அரசு ஏற்படுத்திக் கொடுத்தாலே பெண்கள் தங்களுக்குத் தேவையான அனைத்தையும் வென்றெடுத்துக் கொள்வர்.


 பெண்களுக்கு பாதுகாப்பான சூழல் என்றைக்கு ஏற்படுகிறதோ, அன்றுதான் உண்மையான மகளிர் நாளாக அமையும். அத்தகைய நிலையை ஏற்படுத்துவதற்காக இந்த நாளில் அனைவரும் உறுதியேற்றுக் கொள்ள வேண்டும்" என கூறியுள்ளார்.