அதீத பணிச்சுமை.. வீடு திரும்பிய இளம் பெண்.. படுக்கையில் சரிந்து பரிதாப மரணம்!

Meenakshi
Sep 19, 2024,01:37 PM IST

புனே:   மகாராஷ்டிர மாநிலம் புனேவில் பணி முடிந்து வீடு திரும்பிய  26 வயது பெண் படுக்கையில் இருந்து சரிந்து விழுந்து உயிரிழந்துள்ளார்.


கேரளாவை சேர்ந்தவர் அன்னா செபஸ்டியன். இவருக்கு வயது 26. இவர் கடந்த நான்கு மாதங்களுக்கு முன்னர் மகாராஷ்டிராவின் புனேவில் உள்ள எர்ஜெஸ்ட் அண்ட் யங் நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்தார். சம்பவத்தன்று பணி முடிந்து வீடு திரும்பி படுக்கையில் படுத்துள்ளார். அப்போது படுக்கையில் இருந்து சரிந்து விழுந்து இறந்துள்ளார்.


திடீரென அவர் உயிரிழந்ததற்கு, அவரது நிறுவனத்தில் கொடுக்கப்பட்ட பணிச்சுமை தான் காரணம் என்று அவரது தாயார் அனிதா குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து எர்னெஸ்ட் அண்ட் யங் நிறுவனத்திற்கு அனிதா ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில், பணிச்சுமை அன்னா செபஸ்டியனை உடல் ரீதீயாகவும் மனரீதியாகவும் மிகப் பெரிய அளவில் பாதித்து இருக்கிறது. பலரும் தங்கள் நிறுவனங்களில் பணிச்சுமை அதிகரித்து அதனை கோபமாக வெளிப்படுத்துவார்கள், சிலர் மன அழுத்தத்திற்கு ஆளாகி அதனை வெளியில் தெரிவிக்க மாட்டார்கள். ஆனால், இவை அனைத்துமே ஒருவருடைய உடலுக்கும் மனதுக்கும் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. மறைமுகமாக அவர்களின் இறப்புக்கும் காரணமாகி விடுகிறது என்பது தான் உண்மை என தெரிவித்துள்ளார்.




இந்த கடிதம் பல்வேறு விவாதத்தை எழுப்பியுள்ளது. வாழ்வதற்காக பணிக்கு சென்ற நிலை தற்போது மாறி, பணிச்சுமையால் உயிர் இழப்பு எற்பட்டுள்ளது இன்றைய இளம் தலைமுறையினர்களிடையே  அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து மருத்துவ நிபுணர்கள் சில கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.


உடல் + மன நலத்தைப் பாதிக்கும் வேலை வேண்டாமே


* சரியான நேரத்திற்கு உறங்காமல் இரவிலும் பகலிலும் வேலை செய்வதால், தலை வலி, உடல் சோர்வு ஏற்பட்டால் அத்தகைய பணியில் இருந்து நின்று விடுதல் நலம்.


* உங்களுடைய பணிக்கு உரிய மதிப்பு,  உரிய ஊதியம் உங்களுக்கு கிடைக்காமல் போகும் போதும் வேலையை விட்டு விட வேண்டும்.


* நீங்கள் செய்த வேலைக்கு பாராட்டு கிடைக்காமல் இருந்தால்,  அது பெரிய அளவில் மன அழுத்தத்தை ஏற்படுத்தும். அப்படிப்பட்ட சூழ்நிலையில் வேலையை விட்டு விட வேண்டும்.


* பணி முடிந்து வீட்டிற்கு சென்ற பின்னரும், விடுமுறை நாட்களில் வேலை செய்ய சொல்லுதல், அடிக்கடி தொலைபேசியில் அழைத்து தொந்தரவு செய்தல் போன்றவைகளின் போதும் பணியை விட்டு விட வேண்டும்.


* வேலைக்கு செல்ல விருப்பம் இல்லாமல் இருத்தல், ஒரு வித அச்சம் ஏற்படும் போதும் அந்த பணியை விட்டுவிட வேண்டும்.


* உங்களுடைய வேலை காரணமாக சொந்த வேலைகளை செய்ய முடியாமல் போகும் போதும், அந்த வேலையை விட்டு விட வேண்டும் என்று மருத்துவ நிபுணர்கள் கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்