என்ன டிரஸ்ஸுங்கிறது முக்கியமில்லை.. "பாடி டைப்"புக்கேத்த மாதிரி போட்டா சூப்பரா இருக்கும்!

Meena
Sep 09, 2023,10:52 AM IST
- மீனா

பொதுவாகவே பெண்களுக்கு டிரஸ் என்றால் ரொம்பவே பிடிக்கும். அதுலயும் நமக்கு பிடித்தமான டிரஸ் வாங்குவதற்கு நாம் பல கடைகளில் ஏறி இறங்கி நமக்கு பிடித்தமானதை எப்படியாவது வாங்கி விடுவோம் . ஆனால் இப்படி வாங்கும் டிரஸ்கள் எல்லாம்  நமக்கு பொருத்தமானதாக  இருக்கிறதா என்று நாம் என்றாவது சிந்தித்து இருக்கிறோமா. சில பேருக்கு இந்த மாதிரி விஷயங்கள் இருக்கு என்று கூட தெரியாது. 

அப்படிப்பட்டவர்களுக்கான கட்டுரைதான் இது. பெண்கள் எல்லாருக்கும் ஒரே மாதிரியான பாடி டைப் இருக்காது. ஒவ்வொருத்தங்களுக்கும் ஒவ்வொரு விதமான பாடி டைப்  இருக்கும். ஆனால் எல்லா பெண்களுமே இந்த ஐந்து விதமான பாடி டைப்புக்குள் அடங்கி விடுவார்கள்.

அது என்னவென்றால்...

1. பியர் சேப் (Pear Shape)
2. ஆப்பிள் ஷேப் பாடி டைப் (Apple Shape)
3. ஹவர் கிளாஸ் பாடி டைப் (Hour Glass shape)
4. ரெக்டங்கில்  பாடி டைப் (Rectangle)
5. இன்வெர்ட்டடு ட்ரயாங்கிள் பாடி டைப் (Inverted Triangle)

இந்த ஐந்து டைப்புகளில் உங்களுடைய பாடி டைப் எந்தவிதமானது என்பதை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டுமானால், அதற்கு முதலில் உங்கள் பாடியை மெசர்மென்ட் டேப் வைத்து அளவிட வேண்டும் .அதற்கு நான்கு விதமான அளவுகள் தேவைப்படும். அவை..

1. சோல்டர் சுற்றளவு
2. செஸ்ட் சுற்றளவு
3. வெய்ஸ்ட் சுற்றளவு
4. ஹிப் சுற்றளவு



இந்த அளவுகளை நாம் எடுத்து வைத்துக் கொண்டால் நம்முடைய பாடி டைப் எந்த வகையை சார்ந்தது என்று நமக்கு தெரிந்துவிடும். இனி இந்த ஒவ்வொரு பாடி பாடி சேப்க்கு எப்படிப்பட்ட டிரஸ்களை நாம் அணியலாம் என்று பார்க்கலாம்.

1. பியர் ஷேப் பாடி டைப்:

இந்த  பாடி டைப் ஷேப் உள்ளவர்களின் சோல்டர் அளவு குறுகலாகவும், வெய்ஸ்ட், ஹிப் அளவு அதிகமாகவும் இருக்கும். இவர்கள் சோல்டர் அளவை மையமாக வைத்து போட் நெக் அல்லது காலர் நெக் உள்ள டிரஸ் களை அணியும் போது நல்ல ஒரு லுக் கொடுக்கும். அது மேலும் உங்களை அழகாக காட்டும். பஃப்  ஸ்லீவ் , பெல் ஸ்லீவ் போன்ற கைப்பகுதிகள் இருக்கும் டிரஸ்களை அணியலாம். இது உங்கள் குறுகலான சோல்டருக்கு ஏத்த மாதிரி பாடியை சமமாக காட்டும். டாப்ஸ் வகைகளில் மிட் லேண்ட் டாப்ஸ் இவர்களுக்கு அட்டகாசமாக இருக்கும். மேலும் டைட்டான ஜீன்ஸ் லெக்கின்ஸ் போன்றவை அணியாமல் கொஞ்சம் லூசான  நார்மல்  பேண்ட்டுகளை அணியலாம்.



2. ஆப்பிள் ஷேப் பாடி டைப்:

இந்த பாடி ஷேப் டைப் உள்ளவர்களின் சோல்டர் பெரியதாக இருக்கும். அதை போல் அவர்களுடைய வெய்ஸ்ட், ஹிப் இருக்கும் சைடும் பெரியதாக இருப்பதால், வி நெக் உள்ள டிரஸ்களை அணியலாம். 3/4 ஸ்லீவ் இவர்கள் அணியும் போது ரொம்பவே நல்லா இருக்கும். இவர்கள் ட்ரைட் கட் டாப்ஸ் அணியும்போது நார்மல் மற்றும் பட்டியாலா பேண்டுகளை பயன்படுத்தலாம். ஏ லைன் டாப்ஸ்கள் அணியும் போது லெக்கின்ஸ் பயன்படுத்தலாம். அப்பொழுதுதான் அவர்களுடைய லோயர் பாடி பெரிதாக இருந்தாலும்  அவர்களுக்கு வசதியாக இருக்கும். மேலும் டாப்ஸ்கள் போடும்போது ஓவர் கோர்ட் சேர்த்து அணிவதால், சோல்டர் அளவு குறுகினதாகவும் காட்டும். அதனால் இவர்களுடைய அப்பர் பாடியும் லோயர் பாடியையும் சரிசமமாக காட்டும் போதும் போது இன்னும் அவர்களுக்கு அழகாக தெரியும்.  



மேலும் பெரிய பெரிய டிசைன் போட்ட டாப்ஸ்களை பயன்படுத்தாமல் ,சின்ன சின்ன டிசைன்ஸ் உள்ள டிரஸ்களை, வெர்டிகல் லைன்ஸ் உள்ள டாப்ஸ்களையும், டார்க் கலர்ஸ் உள்ள அணியும் போது ஸ்லிம்மாக காட்டும். துணி வகைகளிலும் ரையான், கிரேப் , ஜார்ஜெட் போன்ற துணிகளில் உள்ள டிரஸ்களை அணியும் போது இவர்களுக்கு நன்றாக இருக்கும். 

3. ஹவர் கிளாஸ் பாடி டைப்: 

இந்த பாடி டைப் உள்ள பெண்கள் மிகவும் குறைவுதான். இந்த மாதிரி டைப் உள்ள பெண்கள் எந்த டிரஸ் அணிந்தாலும் மிகவும் அழகாக இருக்கும். இவர்களுடைய  அப்பர் பகுதி மற்றும் லோயர் பகுதியும்  சமமாகவே இருக்கும் .ஆனால் வேஸ்ட் பகுதி குறைவாக இருப்பதினால் லூசான ட்ரெஸ்களை இவர்கள்  அணியாமல் கரெக்ட் பிட்டிங்கான டிரஸ்களை அணிந்தால் இன்னும் அழகாக தெரிவார்கள். அதனால் டிரஸ் அணியும்போது வேஸ்ட் பெல்ட் பயன்படுத்தினால் மிகவும் நன்றாக இருக்கும்.



4. ரெக்டாங்கிள் பாடி டைப்:

இந்த பாடி டைப் உள்ளவர்களின் சோல்டர், வெய்ஸ்ட், ஹிப் போன்ற அளவுகள் எல்லாமே ஒரே அளவாக தான் இருக்கும். இவர்களிடம் மிஸ்ஸிங் என்றால் அது இடுப்பு வளைவுதான். அதனால் அதை ஹைலைட் பண்ணும்படியாக  டிரஸ் அணியும்போது பெல்ட் அணிந்து கொண்டால் நன்றாக இருக்கும். மேலும்  இவர்களுடைய  லோயர் பகுதியை குறைவாக காட்டுவதற்கு சேஃப்வியர் போன்றவற்றை அணிந்து கொள்ளலாம். இது அவர்களுக்கு நல்ல ஒரு லுக் கொடுக்கும்.



5. இன்வெர்ட்டடு  ட்ரையாங்கிள் பாடி டைப்:  

இந்த மாதிரியான பாடி ஷேப் உள்ளவர்களுக்கு சோல்டர்  பகுதி அதிகமாகவும் வெய்ஸ்ட் பகுதி குறைவாகவும் இருக்கும். அதனால் இவர்கள் எந்த மாதிரி டிரஸ்களை வியர் பண்ணலாம் என்றால், அப்பர் பகுதி டிசைன் பிளைன் ஆகவும், லோயர் பகுதியில் அதிகமான துணி உள்ள அம்பர்லா போன்ற டிரஸ்களை அணியலாம். இவர்களும் V நெக் உள்ள ட்ரெஸ்களை  அணியலாம் . பிராடான கழுத்துள்ள  டிரஸ்களை அணியும் போது மேலும் சோல்டரை அகலமாக  காட்டும் . அனார்கலி டாப்ஸ் மற்றும் நார்மலான ஸ்லீவ்களையும்
பயன்படுத்தலாம்.



சோல்டரை மேலும் அகலமாக காட்டாமல், இருக்கிற டிரஸ்களையே எப்பொழுதும் அணியும் போது உங்களுக்கு நன்றாக இருக்கும். அப்போ எல்லாருமே மாடர்ன் டிரஸ்களை மட்டும்தான் அணிய வேண்டுமா , சேலைகள் யாரும் அணியக்கூடாதா என்று நீங்கள் நினைக்கிறது  எங்களுக்கு தெரிகிறது. 

அப்படியெல்லாம் இல்லை சிஸ்டர்ஸ்..  இவர்களெல்லாம் எப்படி சேலை கட்டலாம், எந்த விதத்தில் அணியலாம், எப்படி அணிந்தால் பாந்தமாக இருக்கும், அழகாக இருக்கும் என்பதை நாம அடுத்த கட்டுரையில் பார்க்கலாம். இப்போ கிளம்புறேன்!