பெண்களே கவனம்.. ஆன்டிபயாட்டிக்ஸ் எடுத்தால்.. பிறப்புறுப்பில் பூஞ்சைத் தொற்று ஏற்படலாம்!

Su.tha Arivalagan
Dec 31, 2022,11:17 PM IST
சென்னை: பெண்களின் பிறப்புறுப்பு சந்திக்கும் பல்வேறு பிரச்சினைகளில் இந்த ஈஸ்ட் தொற்றும் ஒன்று. 
பெரும்பாலும் இந்த தொற்றானது, அதிக அளவில் ஆன்டிபயாடிக் மருந்துகளை எடுக்கும் பெண்களுக்குத்தான் 
ஏற்படுகிறது. இதை vaginal candidiasis என்று சொல்கிறார்கள்.

எல்லாப் பெண்களுக்கும் வாழ்க்கையில் ஏதாவது ஒரு கட்டத்தில் இந்த உபாதை வந்து விடுகிறது. குறிப்பாக
 நான்கில் 3 பெண்கள் இதை சந்திக்க நேரிடுகிறது. கேன்டிடா என்ற பூஞ்சை அதிக அளவில் வளர்வதே
 பெரும்பாலான தொற்றுகளுக்கு முக்கியக் காரணம். 

அதீத சர்க்கரை வியாதி, கர்ப்ப காலம், நோய் எதிர்ப்பு திறன் குறைவு, வாய் வழியாக எடுத்துக் கொள்ளும்
 கருத்தடை மாத்திரைகள், ஹார்மோன் தெரப்பி என பல்வேறு காரணங்களால் இந்த தொற்று ஏற்படுவதாக
 மருத்துவர்கள் சொல்கிறார்கள்.  அதேபோல ஆன்டிபயாடிக் மருந்துகளை அதிக அளவில் எடுத்துக் கொள்வதாலும் ஈஸ்ட் தொற்று ஏற்படுகிறதாம்.


Broad-spectrum antibiotics மருந்துகளை நாம் எடுத்துக் கொள்ளும்போது, இவை பிறப்புறுப்பில்
 உள்ள நல்ல பாக்டீரியாவை மொத்தமாக அழித்து விடுகிறதாம்.  இதனால் கேன்டிடா பூஞ்சை அதிக அளவில் 
வளர வழி கிடைத்து விடுகிறது.  இதுதான் பெரும்பாலும் பிறப்புறுப்பில் தொற்று ஏற்பட காரணமாகிறது.

அறிகுறிகள் என்ன?

பிறப்புறுப்பிலும், உட் பகுதியிலும் அதிக அளவில் எரிச்சல், அரிப்பு ஏற்படும்.  அடர்த்தியாக வெள்ளை படும்.
 சிறுநீர் கழிக்கும்போதும், உடலுறவின்போதும் எரிச்சல் அதிகமாக இருக்கும். பிறப்புறுப்பின் மேல் பகுதி
 சிவந்து காணப்படும்.  இப்படி இருந்தால் உங்களுக்கு ஈஸ்ட் தொற்று ஏற்பட்டுள்ளது என்று அர்த்தம்.

சிலருக்கு தொற்று அதிகமாக இருந்தால் பாதிக்கப்பட்ட  இடம் அதீதமாக சிவந்து காணப்படும். 
அங்கு புண்ணும் ஏற்பட்டிருக்கும்.  உங்களுக்கு வருடத்தில் 4 அல்லது அதற்கு மேற்பட்ட முறை ஈஸ்ட்
 தொற்று பாதிப்பு ஏற்பட்டால் தொடர் சிகிச்சை தேவைப்படலாம்.

ஈஸ்ட் தொற்று ஏற்படாமல் எப்படித் தவிர்க்கலாம்?

ஈஸ்ட் தொற்று ஏற்படாமல் முழுமையாக தவிர்க்க முடியாது. மாறாக சில நடவடிக்கைகளை மேற்கொண்டால் அதைக் குறைக்க முடியும். 


அதிக இறுக்கம் இல்லாத, பருத்தியால் ஆன பான்டீஸ் அணிவது நல்லது.

பிறப்புறுப்பை  சுத்தம் செய்ய கடைகளில் விற்பனையாகும் douching திரவங்களைப்
 பயன்படுத்துவதைத் தவிர்க்கவும். காரணம், இவை பிறப்புறுப்பில் உள்ள நல்ல பாக்டீரியாவை அழித்து விடும்.

நறுமணத்துடன் கூடிய  பொருட்களை பயன்படுத்தக் கூடாது.

அதிக சூடு உள்ள தண்ணீரில் குளிப்பதைத் தவிர்க்கவும்.

தேவைப்பட்டால் மட்டும் ஆன்டிபயாடிக்ஸ் மருந்துகளை எடுத்துக் கொள்ளவும்.

நீண்ட நேரம் ஈரமான உள்ளாடையுடன் இருக்கக் கூடாது. இது ஈஸ்ட் வளர்ச்சியை அதிகரிக்க உதவிடும்.

 குளித்து விட்டு வந்தாலோ அல்லது நீச்சல், உடற்பயிற்சி செய்து விட்டு வந்தாலோ.. உடனடியாக உள்ளாடையை மாற்றி நன்றாக துடைத்து விடவும்.

சிறு சிறு செயல்கள் மூலம் நமது பிறப்புறுப்பின் ஆரோக்கியத்தைப் பேணிக்காக்கலாம்.
 அத்தோடு, ஈ��்ட் வளர்ச்சியையும் முடிந்தவரை  தவிர்க்கலாம்... 
"பிறப்புறுப்பின் ஆரோக்கியம் நமது பிறப்புரிமை" என்று உணர்ந்து கவனமாக செயல்பட்டாலே போதும்.