"நில்லு.. சுட்ருவேன்"... முழங்காலைக் குறி வைத்து சுட்டுப் பிடித்த ஏஎஸ்பி செளம்யா!

Meenakshi
Sep 08, 2023,03:08 PM IST
திருப்பூர்:  பல்லடம் அருகே 4 பேரை படுகொலை  செய்த வழக்கில்  கைதான வாலிபர் தப்பிக்க முயன்ற போது, அவரை குறி வைத்து சுட்டுப் பிடித்தது பெண் போலீஸ் அதிகாரி செளம்யா என்று தெரியவந்துள்ளது.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள கள்ளக்கிணறு குறைத்தோட்டம் பகுதியை சேர்ந்தவர் மோகன்ராஜ். இவரது வீட்டிற்கு  செல்லும் பாதையில்  வெங்கடேஷ், செல்லமுத்து, விஷால்  ஆகிய 3 பேர்  மது  குடித்துக் கொண்டு இருந்தனர்.  இதனை தட்டிக்கேட்ட மோகன்ராஜையும், அவரது குடுப்பத்தை சேர்ந்த 3பேரையும் வெட்டி படுகொலை செய்து விட்டு தப்பிச் சென்றனர்.

காவல்துறையினர் இந்த கொலையாளிகளை பிடிக்க 5 தனிப்படைளை அமைத்தனர். முதலில் செல்லமுத்துவை பிடித்தனர். மற்ற இருவரையும் போலீசார் தேடுவதை அறிந்த குற்றவாளிகள் 2 பேரும் தாங்களாகவே வந்து சரணடைந்தனர். இவர்களை போலீசார் கைது செய்து மாவட்ட காவல் துறையிடம் ஒப்பைடத்தனர்.

குற்றவாளிகள் 3 பேரையும் விசாரணை செய்ததில் கொலை செய்யப்பட்ட மோகன்ராஜிடம் வெங்கடேஷ் டிரைவராக வேலை பார்த்தும்  வெங்கடேஷின் நடவடிக்கைகள் சரியில்லாததால் மோகன்ராஜ் அவரை வேலையை விட்டு நிறுத்தியதும் தெரியவந்தது.  மேலும் அவர்களுக்குள் பணம் கொடுக்கல், வாங்கலில் முன் விரோதம் இருந்து வந்ததும் விசாரணையில் தெரிய வந்தது. இதன் காரணமாகவே கொலை நடந்தது தெரிய வந்தது.

இதனை தொடர்ந்து கொலைக்கு பயன்படுத்திய ஆயுதங்கள் இருந்த இடத்தையும் குற்றவாளிகள் தெரிவித்தனர். அங்கு சென்றதும் முட்புதர்களில் பதுக்கி வைத்திருந்த அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களை அவர் போலீசாரிடம் எடுத்து கொடுத்தார். பின்னர் அவரை பல்லடம் போலீஸ் நிலையத்திற்கு வேனில் கொண்டு சென்றனர். செல்லும் வழியில் தொட்டம்பட்டி காட்டுப்பகுதியில்  இயற்கை உபாதை கழிக்க வேண்டும் என்று வெங்கடேஷ் தெரிவித்தார். 

இதனால் போலீசார் வேனை நிறுத்தினர். பின்னர் வெங்கடேஷின் பாதுகாப்புக்காக 2 போலீசார் கூடவே சென்றனர். சிறிது தூரம் சென்றதும் வெங்கடேஷ் திடீரென போலீசாரை தாக்கி விட்டு தப்பிக்க முயன்ற போது டிஎஸ்பி போலீஸ் சவுமியா, ஓடாதே நில்லு என்று எச்சரித்துள்ளார். ஆனால் வெங்கடேஷ் நிற்காமல் ஓடியதால் அவரது முழங்காலை நோக்கி சுட்டுள்ளார் செளம்யா. இதனால் வெங்கடேஷ் தப்பி ஓடி விடாமல் தடுக்க முடிந்தது. அதைத் தொடர்ந்து அவரை போலீஸார் மடக்கிப் பிடித்தனர். 

காயமைடந்த குற்றவாளியை மருத்துவமனையில் போலீசார்  சேர்த்தனர். குற்றவாளிகள் 3 பேர் மீதும் 4 வழக்குகள் போடப்பட்டுள்ளது. குற்றவாளிகளை தைரியமாக சுட்டு பிடித்த சவுமியவை திருப்பூர் மக்கள் பாராட்டி வருகின்றனர்.