"நாடு".. இது மலைவாழ் மக்களின் உண்மைக் கதை.. சிலிர்க்க வைக்கும் சம்பவங்கள்!

Su.tha Arivalagan
Nov 17, 2023,10:45 AM IST

- மஞ்சுளா தேவி


சென்னை: இயக்குனர் சரவணன் இயக்கத்தில் மலைவாழ் மக்களின் உண்மை சம்பவத்தை மையமாகக் கொண்டு உருவாகி வரும் திரைப்படம்தான் நாடு.


2011 ஆம் ஆண்டு நடிகர் ஜெய் நடித்த எங்கேயும் எப்போதும் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் இயக்குனர் சரவணன். இப்படத்தில் விபத்து காட்சியை நம் கண் முன்னே நடப்பது போன்று தத்ரூபமாக பணமாக்கப்பட்டிருக்கும். மனம் வலிக்க இப்படத்தின் காட்சிகள் அமைத்திருந்ததால், இப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று ஹிட் கொடுத்தது. தமிழ் மொழியில் இது இவருடைய முதல் படமாகும்.




ஏற்கனவே தெலுங்கு படத்தில் ராம் கணேஷ் மூலம் அறிமுகமானவர். இவர் ஏ ஆர் முருகதாஸிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர். இதனைத் தொடர்ந்து விக்ரம் பிரபு நடித்த  ஆக்சன் திரைப்படமான இவன் வேற மாதிரி படத்தை இயக்கியவர். மேலும் த்ரிஷா நடிப்பில் ராங்கி என்ற திரைப்படத்தையும் இயக்கி உள்ளார்.


பிக் பாஸ் சீசன் 3யில் பங்கு பெற்று பிரபலமானவர் நடிகர் தர்ஷன். இவர் இலங்கையைச் சேர்ந்தவர். கல்லூரி படிக்கும் போதிலிருந்தே மாடலிங் ஆக வேண்டும் என்ன குறிக்கோள் கொண்டவர். அப்போது இருந்தே ஆடை பிராண்டுகளுக்கான பேஷன்ஷோ மற்றும் பல போட்டோ சூட்கள் நடத்தியுள்ளார்.  2016 ஆம் ஆண்டு மாடலிங் துறையில் மிஸ்டர் ஸ்ரீலங்கா என்ற பட்டத்தை வென்றவர் .பிறகு ஒரு சில விளம்பரங்களில் நடித்துள்ளார்.




பிக்பாஸிற்கு பிறகு வேற என்ன வேண்டும், கூகுள் குட்டப்பா போன்ற திரைப்படங்களில் நாயகனாக நடித்துள்ளார். இதனைத் தொடர்ந்து தற்போது நாடு என்ற படத்தில் நடித்துள்ளார்.  நாடு படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம், எழுதி இயக்கி இருக்கிறார் இயக்குனர் சரவணன். மலைவாழ் கிராம மக்களின் வாழ்க்கையையும் , அவர்களின் வலியையும் மையமாகக் கொண்ட  இப்படம் உண்மை கதையின் பிண்ணனியில்  உருவாகியுள்ளது. இப்படம் முழுக்க முழுக்க கொல்லிமலை பகுதியில் படமாக்கப்பட்டுள்ளது.


இப்படத்தில் பிக் பாஸ் புகழ் தர்ஷன் நாயகனாகவும், மகிமா நம்பியார் கதாநாயகியாகவும், நடித்துள்ளார். சிங்கம்புலி, மறைந்த ஆர் எஸ் சிவாஜி மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்தை ஸ்ரீ ஆர்ச் மீடியா சார்பில் சக்கரா மற்றும் ராஜ் தயாரித்துள்ளார். சக்தி ஒளிப்பதிவு செய்ய, சத்தியா இசையமைத்திருக்கிறார்.




இப்படம் மலைவாழ் கிராம மக்கள் தங்களின் அடிப்படை தேவைகளுக்காக எப்படி சிரமங்களை அனுபவிக்கிறார்கள் என்பதை எதார்த்தமான  முறையில் நகைச்சுவையாக சொல்லி இருக்கிறார்கள்.மலை வாழ் மக்களின் வாழ்க்கையை மையமாகக் கொண்ட நடிகர் சூர்யா நடித்த ஜெய் பீம் போன்று  இப்படமும் சாதனை படைக்குமா..என பொறுத்திருந்து பார்ப்போம்..!!