திருவள்ளூர் டூ கன்னியாகுமரி.. உங்க மக்களவைத் தொகுதியின் புதிய எம்.பி. யார்.. இதோ ஃபுல் லிஸ்ட்!

Meenakshi
Jun 05, 2024,03:22 PM IST
சென்னை: 40ம் நமதே என்பதை உறுதியாக்கி திமுக கூட்டணி ஜெயித்துள்ளது. ஜெயித்த எம்.பிக்களின் முழுப் பட்டியலும் உங்கள் பார்வைக்கு.

2024ம் ஆண்டு மக்களவை தேர்தலில் தமிழகம் மற்றும் புதுச்சேரியை சேர்த்து 40 தொகுதிகளிலும் சென்டம் ரிசல்ட் எடுத்து சாதனை படைத்துள்ளது திமுக.  2019ம் தேர்தலில் திமுக கூட்டணி, தேனி தவிர 39 இடங்களில் வெற்றி பெற்றது. தேனியில் மட்டும் ஓபிஎஸ் மகன் ஓபி ரவீந்திரநாத் அதிமுக சார்பில் வெற்றி பெற்றிருந்தார். 

இந்நிலையில், இந்த தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி சென்டம் ரிசல்ட் அடித்துள்ளது. தமிழகத்தில் வெற்றி பெற்ற வேட்பாளர்களின் விபரம்.



1. மத்தியசென்னை-தயாநிதி மாறன் (திமுக) ஓட்டு வித்தியாசம் - 2,44,689

2. வட சென்னை- கலாநிதி வீராச்சாமி (திமுக) ஓட்டு வித்தியாசம் - 3,39,222

3. தென் சென்னை - தமிழச்சி தங்கபாண்டியன் (திமுக) ஓட்டு வித்தியாசம் - 2,24,955 

4. திருவள்ளூர் - சசிகாந்த் செந்தில் (காங்கிரஸ்) ஓட்டு வித்தியாசம் - 5,72,155 

5. காஞ்சிபுரம் - செல்வம் (திமுக) ஓட்டு வித்தியாசம் - 2,21,473 

6. வேலூர்- கதிர் ஆனந்த் (திமுக) ஓட்டு வித்தியாசம் - 2,15,702 

7. விழுப்புரம் - ரவிக்குமார் (விசிக) ஓட்டு வித்தியாசம் - 70,703 

8. திருவண்ணாமலை - அண்ணாதுரை (திமுக) ஓட்டு வித்தியாசம் - 2,33,931 

9. ஸ்ரீபெரும்புதூர் - டி ஆர் பாலு (திமுக) ஓட்டு வித்தியாசம் - 4,42,009 

10. அரக்கோணம் - ஜெகத்ரட்சகன் (திமுக)ஓட்டு வித்தியாசம் - 3,06,559 

11. கடலூர் - விஷ்ணு பிரசாத் (காங்கிரஸ்) ஓட்டு வித்தியாசம் - 1,85,896 

12. ஆரணி - தரணி வேந்தன் (திமுக) ஓட்டு வித்தியாசம் - 2,07,433 
 
13. மதுரை - சு. வெங்கடேசன்  (மா கம்யூ.,) ஓட்டு வித்தியாசம் - 2,08,795 

14. விருதுநகர் - மாணிக்கம் தாகூர் (காங்கிரஸ்) ஓட்டு வித்தியாசம் - 4,633
 
15. பொள்ளாச்சி - ஈஸ்வரசாமி  (திமுக) ஓட்டு வித்தியாசம் - 2,52,042 

16. கோவை - கணபதி ராஜ்குமார் (திமுக)ஓட்டு வித்தியாசம் -  1,18,068

17. நெல்லை - ராபர்ட் புரூஸ் (காங்கிரஸ்) ஓட்டு வித்தியாசம் - 1,65,620

18. கன்னியாகுமரி - விஜய் வசந்த் (ஐஎன்சி) ஓட்டு வித்தியாசம்- 1,79,907 

19. ஈரோடு - பிரகாஷ் (திமுக) ஓட்டு வித்தியாசம் - 2,36,566 

20. நாமக்கல் - மாதேஸ்வரன் (திமுக) ஓட்டு வித்தியாசம் - 29,112 

21. சிவகங்கை - கார்த்தி சிதம்பரம் (காங்கிரஸ்) ஓட்டு வித்தியாசம் - 2,05,664 

22. திண்டுக்கல் - சச்சிதானந்தம் (சிபிஐ) ஓட்டு வித்தியாசம் -  4,43, 821 

23. தருமபுரி -  மணி (திமுக) ஓட்டு வித்தியாசம் - 21,300 

24. கிருஷ்ணகிரி - கோபிநாத் (காங்கிரஸ்) ஓட்டு வித்தியாசம் - 1,92,486 
 
25. தேனி - தங்க தமிழ்ச்செல்வன் (திமுக) ஓட்டு வித்தியாசம் - 2,78,825 

26. தென்காசி - ராணி ஸ்ரீகுமார் (திமுக) ஓட்டு வித்தியாசம் - 1,96,199 

27. நீலகிரி -ராஜா (திமுக) ஓட்டு வித்தியாசம் - 2,40,585 

28. திருப்பூர் - சுப்புராயன் (சிபிஐ) ஓட்டு வித்தியாசம் 1,25,928 

29. தூத்துக்குடி - கனிமொழி (திமுக) ஓட்டு வித்தியாசம் - 3,92,738 

30.  ராமநாதபுரம் - நவாஸ் கனி (இ.மு.லீக்) ஓட்டு வித்தியாசம் - 1,66,782 

31. சேலம் - செல்வகணபதி (திமுக) ஓட்டு வித்தியாசம் - 70,357 

32. தஞ்சாவூர் - முரசொலி (திமுக) ஓட்டு வித்தியாசம் - 3,19,583 

33. நாகப்பட்டினம் - செல்வராஜ் (சிபிஐ) ஓட்டு வித்தியாசம் - 2,08,957

34. மயிலாடுதுறை - சுதா (காங்கிரஸ்) ஓட்டு வித்தியாசம் - 2,71,642 

35. சிதம்பரம் - திருமாவளவன் (விசிக) ஓட்டு வித்தியாசம் - 1,03,505  
 
36. பெரம்பலூர் - அருண் நேரு (திமுக) ஓட்டு வித்தியாசம் - 3,89,107 

37. திருச்சி - துரை வைகோ (மதிமுக) ஓட்டு வித்தியாசம் - 3,13,094 
 
38. கரூர் - ஜோதிமணி (காங்கிரஸ்) ஓட்டு வித்தியாசம் - 1,66,816 

39. கள்ளக்குறிச்சி - மலையரசன் (திமுக) ஓட்டு வித்தியாசம் - 53,784 

40. புதுச்சேரி - வைத்தியலிங்கம் (காங்கிரஸ்) ஓட்டு வித்தியாசம் - 1,36,516