இன்னிக்கு தங்கம் விலை உயர்ந்திருக்கு மக்களே... எவ்வளவு தெரியுமா?.. இதோ இவ்வளவுதான்!
சென்னை: சென்னையில் இன்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்ந்துள்ளது. இந்த விலை ஏற்றம் நகை பிரியர்களை சற்று கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளது.
புத்தாண்டு, பொங்கல் என பண்டிகை காலம் முடிந்தும் தங்கம் விலை சற்று உயர்ந்தே உள்ளது. காரணம், பண்டிகை காலம் முடிந்து தற்போது முகூர்த்த மாதமாக தை மாதம் திகழ்வதால், நகை வாங்க நகை கடையில் கூட்டம் அதிகமாகவே இருந்து வருகிறது.
இன்றைய தங்கத்தின் விலையை பொருத்தவரை, 1 கிராம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை 5810 ரூபாயாக உள்ளது. இது நேற்றைய விலையில் இருந்து 30 ரூபாய் அதிகரித்து சவரனுக்கு ரூ.240 அதிகரித்துள்ளது. 8 கிராம் ஆபரண தங்கத்தின் விலை 46480 ரூபாயாக உள்ளது. 1 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 6305 ரூபாயாக உள்ளது. 8 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை ரூ.50440 ஆக உள்ளது.
தங்கம் விலை உயர்ந்துள்ள நிலையில், வெள்ளியின் விலையும் உயர்ந்துள்ளது. இன்று 1 கிராம் வெள்ளி விலை ரூபாய்.77.20 காசாக உள்ளது. 8 கிராம் வெள்ளி விலை ரூபாய் 617.60 காசாக உள்ளது.
தங்கத்தின் விலை எவ்வளவு கூடினாலும் அதன் தேவை குறைய போவது கிடையாது. தங்கம் விலை ஏற்றம் கண்டு வருவதினால் முதலீட்டாளர்களும் தங்கத்தின் மீது அதிகளவில் முதலீடு செய்யத் தொடங்கியுள்ளனர். இதனால் கடந்த 3 நாட்களாக சரிவில் இருந்த தங்கம் தேவை அதிகரித்ததன் காரணத்தினால் விலை உயரத் தொடங்கியுள்ளது. சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, சர்வதேச அரசியல் சூழல், நகையில் முதலீடு ஆகியவற்றின் காரணத்தினாலும் தங்கம் விலை ஏற்றம் கண்டுள்ளதாக நிபுணர்கள் தெரிவித்து வருகின்றனர்.