கோயம்பேட்டுக்கா போறீங்க.. தக்காளி முதல் கொத்தமல்லி வரை இதான் ரேட்.. தெரிஞ்சுக்கங்க!

Meenakshi
Aug 09, 2024,12:56 PM IST

சென்னை:    சென்னை கோயம்பேடு சந்தையில் காய்கறி மற்றும் பழங்களின் இன்றைய விலை நிலவரம் என்ன என்பதை தெரிந்து கொள்வோமா?


மற்ற மாதங்களை விட ஆடி மாதம் அம்மனுக்கு உகந்த மாதமாக பார்க்கப்படுகிறது. இந்த மாதங்களில் அதிகளவில் கோவில் திருவிழாக்கள் நடைபெறுவதால், காய்கறிகளின் தேவை அதிகரித்து இருக்கும். காய்கறிகளின் வரத்து தற்போது அதிகரித்து இருப்பதால் காய்கறிகளின் விலையில் அதிகளவில் ஏற்ற இறக்கங்கள் இல்லாமல் இருந்து வருகிறது. 




காய்கறிகளின் விலை அதிகரித்தால் நடுத்தர மற்றும் ஏழை மக்கள் அதிக சிரமத்திற்குள்ளாகும் நிலை ஏற்படும் வாய்ப்பு அதிகம்.கோயம்பேடு சந்தையில்  இன்றைய விலை நிலவரம் இதோ...


இன்றைய காய்கறிகளின் விலை நிலவரம்


தக்காளி ரூ. 20-40

நெல்லிக்காய் 69-76 

பீன்ஸ் 20-40 

பீட்ரூட் 15-35 

பாகற்காய் 20-60 

கத்திரிக்காய் 10-30

பட்டர் பீன்ஸ் 53-58 

முட்டைகோஸ் 10-20

குடைமிளகாய் 15-35

கேரட் 50-80

காளிபிளவர் 20-40

சௌசௌ 10-25

கொத்தவரங்காய் 25-40 

தேங்காய் 20-25 

பூண்டு 100- 350

பச்சை பட்டாணி 130-160 

கருணைக்கிழங்கு 20-32

கோவக்காய் 10-15 

வெண்டைக்காய் 10-20 

மாங்காய் 30-40 

மரவள்ளி 35-55

நூக்கல் 15-40 

பெரிய வெங்காயம் 30-36 

சின்ன வெங்காயம் 30-60

உருளை 25-40

முள்ளங்கி 15-35 

சேனைக்கிழங்கு 60-65 

புடலங்காய் 20-30

சுரைக்காய் 15-30

பூசணி 15-20


இன்றைய பழங்களின் விலை நிலவரம்


ஆப்பிள் 160-280

வாழைப்பழம்  18-110

மாதுளை 100-240

திராட்சை 60-140

மாம்பழம் 40-180

கொய்யா-25-90

கிர்ணி பழம் 15-50