கிளம்புங்க.. கிளம்புங்க.. தங்கம் விலை இன்று கம்மிதான்!
சென்னை: தங்கம் விலை இன்று குறைந்துள்ளது. கடந்த ஒரு வாரத்திற்கும் அதிகமாக தங்கம் விலை ஏற்றத்திலேயே இருந்தது. அப்பாடா இன்று தான் குறைந்துள்ளது என்று பெருமூச்சு விடலாம்.
ஆயுத பூஜை, விஜயதசமி, நவராத்திரி போன்ற பண்டிகை நாட்கள் நேற்று முடிந்த நிலையில் இன்று தங்கம் விலை குறையத் தொடங்கியுள்ளது. இந்த விலை குறைவு மக்களிடையே சற்று ஆறுதலை ஏற்படுத்தியுள்ளது. இதனால் தங்க விலை ஏற்றத்தினால் நகை வாங்காமல் இருந்த நகைப் பிரியர்கள் இன்று கடைக்கு கிளம்பலாம் என்ற நிலை தற்போது உருவாகியுள்ளது.
எனவே தங்க நகை வாங்குவோர் இப்போதே கடைக்கு கிளம்பலாம்... கிளம்பலாம்.... ஒரு நிமிஷம் விலையை பார்த்துட்டு கிளம்புங்க மேடம்...!
இன்றைய தங்கத்தின் விலை நிலவரம் இதுதான். 1 கிராம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை 5655 ரூபாயாக உள்ளது. இது நேற்றைய விலையில் இருந்து 160 ரூபாய் குறைந்துள்ளது. 8 கிராம் ஆபரண தங்கத்தின் விலை 45240 ரூபாயாக உள்ளது. 1 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 6169 ரூபாயாக உள்ளது. இது நேற்றைய விலையில் இருந்து 22 ரூபாய் குறைவாகும். 8 கிராம் 24 கேரட்டின் விலை ரூ.49352 ஆக உள்ளது.
தங்கம் விலை குறைந்துள்ள நிலையில், வெள்ளியின் விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் பழைய விலையே இன்றும் உள்ளது. 1 கிராம் வெள்ளி விலை ரூபாய்.74.60 காசாக உள்ளது. 8 கிராம் வெள்ளி விலை ரூபாய் 596.80 காசாக உள்ளது.
இந்த விலை குறைவு சற்று ஆறுதலை தந்தாலும் ஐப்பசி என்பதால் நாளை உயரவும் வாய்ப்புகள் அதிகம் உள்ள காரணத்தினால் இன்றே நகை வாங்குவோர் வாங்கிக் கொள்ளலாம் என்று நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.