குடி பட்வா (Gudi padwa) என்றால் என்ன.. யாரெல்லாம் கொண்டாடுகிறார்கள்?

Swarnalakshmi
Mar 28, 2025,04:27 PM IST

- ஸ்வர்ணலட்சுமி


குடி பட்வா என்பது மகாராஷ்டிரா மற்றும் கோவா மாநிலங்களில்  கொண்டாடப்படும் புத்தாண்டு திருவிழா ஆகும். இது சந்திர மண்டலத்தில் சுக்லபட்ச பிரதிபதா(Chitra Shukla pratipada) நாளில் மார்ச் மாதம் 30 ஆம் தேதி ஞாயிறு அன்று குடி பட்வா கொண்டாடப்படுகிறது. இந்த நாள் அறுவடை காலத்தில் தொடக்கத்தை குறிக்கிறது.


மார்ச் 30ஆம் தேதி 20 25 குடி பட்வா பிரதிபத திதி ஆரம்பம்:     மார்ச் 29 அன்று மாலை 4 :27 முதல் மார்ச் 30 அன்று பிற்பகல் 12 :47 வரை.ஆந்திரா மற்றும் கர்நாடகாவில் யுகாதி என்றும் ,இந்த நாளை கொண்டாடுகின்றனர். மேலும் பஞ்சாப் மற்றும் பிற வட மாநிலங்களில் பைசாகி என்றும், குஜராத்தில் பெஸ் துவரஸ் என்றும், கேரளாவில் விசு என்றும் ,காஷ்மீரில் உள்ள நவ்ரே ,என்றும் சிக்கிமில் லோ சூங்கு என்றும் கொண்டாடப்படுகிறது.


தமிழ்நாட்டில் ஏப்ரல் 14 அன்று சித்திரை 1 தமிழ் புத்தாண்டாக கொண்டாடப்படுகிறது.


இந்தப் பண்டிகையின் முக்கியத்துவம்:




1. இந்த நாளே புத்தாண்டு சைத்ர மாதத்தில் தொடக்கம் ஆரம்பமாகிறது. இன்னாள் முதல் வசந்த காலத்தில் துவக்கமாக கொண்டாடப்படுகிறது. பசுமையாக இயற்கை வளம் பூக்கள் மலர்ந்து செழிப்பான ஒரு காலத்தின் தொடக்கமாக கருதப்படுகிறது.


2. ராமனின் ராஜாபிஷேகம்: இந்த நாள் இறைவன் ஸ்ரீராமர் அயோத்தியில் அரசராக முடிசூடினார் என்ற கூற்று கூறப்படுகிறது. மகாராஷ்டிராவில் இந்த நாள் சாலிவாகன காலண்டரின் தொடக்கமாக கருதப்படுகிறது.


வழிபடும் முறைகள்: 


குடி அமைத்தல் வீடுகளில் வாசலில் ஒரு கம்பத்தில் வண்ணத்துடிகளை கட்டி பித்தளை அல்லது மண் அல்லது வெள்ளி பானையில் வேப்ப இலைகள் மாவிலைகள் கட்டி மலர்மாலைகள் அணிவித்து ,வழிபாடு செய்வார்கள் .அனைத்து தீமைகளையும் குடி தடுக்கிறது என்பது நம்பிக்கை.


வீடுகளை தூய்மை செய்து அலங்கரித்து, ரங்கோலி வரைவது, மங்களகரமான பொருட்களை வீட்டின் வாசலில் கட்டுவது, மேலும் தீப தூப ஆராதனை செய்து வழிபடுவது வழக்கமாக உள்ளது .வேப்ப இலைகளை உட்கொள்ளும் பழக்கம் உண்டு. பூரன் போளி, பாசிப்பருப்பு ,சன்னா  அம்படா ,சூந்த் பணக் போன்ற பண்டங்கள் செய்து குடும்பங்களில் ஒருவருக்கொருவர் பகிர்ந்து உற்றார் உறவினர்களுக்கு பகிர்ந்து  ,அளித்து புத்தாடை அணிந்து, மகிழ்ச்சி உடன் கொண்டாடுவர்.


"குடி" என்றால் பிரம்மாவின் கொடி "பத்வா "அல்லது "பட்வா" என்றால் சந்திரனின் பிரகாசமான கட்டத்தின் முதல் நாள். இயற்கை பேரழிவினால் அனைத்து மக்களும் அழிந்து காலத்தில் நிறுத்திய பிறகு பிரம்மா உலகை மீண்டும் உருவாக்கியதாக கூறப்படுகிறது .காலம் மீண்டும் தொடங்கியது. இதனால் பிரம்மனை வழிபடுவது இப்ப பண்டிகையின் சிறப்பு.


சத்திரபதி சிவாஜி மகாராஜ் முகலாயர்கள் தோற்கடித்து மக்களை முகலாய ஆட்சியில் இருந்து விடுவித்தார். அதற்காகவே குடியை ஏற்றுவதற்கு முக்கிய காரணம் என்ற கூற்று உள்ளது.


வாழ்க்கையில் செழிப்பையும் வெற்றி அதிர்ஷ்டத்தையும் கொண்டு வருகிறது இந்த குடி பட்வா. தங்கம்,புதிய வாகனங்கள் வாங்குவதற்கு மங்களகரமான நாளாக இந்த நாள் கருதப்படுகிறது. இது போன்ற சுவாரஸ்யமான தகவல்களுக்கு இணைந்திருங்கள். தென் தமிழுடன். உங்கள்  ஸ்வர்ணலட்சுமி.