மண் வளமும் நம் நலமும் .. நாட்டின் உயர்வும் உய்ய.. வாழ்த்த வந்தாளே.. நம் அன்னை சித்திரை..!
- ரேணுகா ராயன்
செந்தமிழில் மேழம் என்றும்
வழக்குத் தமிழில் சித்திரை என்றும்
கொண்டாடி மகிழ்கிறோம் நம் தமிழ் புத்தாண்டை.
சொக்கநாதரின் திருமணமும்
வைகையின் பிறப்பும்
கண்டதல்லவோ இச்சித்திரை
மக்கள் கூடி மகிழ, மனத்தாபங்களும் பகையும் ஒழித்து
நம் மக்கள் மகிழும் மாதமல்லவோ இச்சித்திரை!
அன்பையும் பண்பையும்
பறைசாற்றிட வந்ததல்லவோ சித்திரை!
ஆதவனை போல் இயங்கிடவும்
இளவேனிற் கால தன்மைதனை
நம்முள்ளே விதைக்க வந்ததல்லவோ இச்சித்திரை!
வெறும் பண்டிகையாய் அல்ல-
வாழ்வின் தத்துவத்தை மாங்காய் பச்சடியில் உணர்த்தும்
தமிழர்தம் உளப்பக்குவத்தை பறைசாற்றிட வந்ததல்லவோ....
சித்திரை பிறப்பும் புத்தாண்டும்.
மண் வளமும் நம் நலமும்
நாட்டின் உயர்வும் உய்ய
வாழ்த்த வந்தாளே
நம் அன்னை சித்திரை..!
நற்சிந்தனையும் மேன்மை மிக்க செயல்களையும் ஏந்தி
மேலும் பீடு நடையிடுவோம் இன்றும் எப்போதும்!
நமை காக்க தமிழ் அன்னை இருக்க,
அறத்தின் பாதையில் வெற்றி நோக்கி நடப்போம் வாருங்கள் எம் இனமே.....!